AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

ஜெம் கிரானைட்ஸ் வீரமணிக்கு எதிரான 8 போக்சோ வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல்! – சென்னை உயர் நீதிமன்றத்தில் சிறப்பு புலனாய்வுக் குழு தகவல்

Gem Veeramani Case: சிறப்பு புலனாய்வுக் குழு தரப்பில் ஆஜரான தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜான் சத்யன், வீரமணிக்கு எதிரான 8 போக்சோ வழக்குகளிலும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். மேலும், தற்கொலைக்குத் தூண்டியதாகப் பதிவு செய்யப்பட்ட மற்றொரு வழக்கிலும் 10 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று நீதிமன்றத்தில் உறுதியளித்தார்.

ஜெம் கிரானைட்ஸ் வீரமணிக்கு எதிரான 8 போக்சோ வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல்! – சென்னை உயர் நீதிமன்றத்தில் சிறப்பு புலனாய்வுக் குழு தகவல்
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 12 Nov 2026 16:48 PM IST

நவம்பர் 12, 2026: ஜெம் கிரானைட்ஸ் உரிமையாளர் வீரமணிக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்ட 8 போக்சோ வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சிறப்பு புலனாய்வுக் குழு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. மேலும், தற்கொலைக்குத் தூண்டியதாகப் பதிவு செய்யப்பட்ட மற்றொரு வழக்கில் 10 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, இந்த வழக்குகளின் விசாரணையை நவம்பர் 30ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

வீரமணிக்கு எதிராக 9 வழக்குகள் பதிவு

சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமை செய்ததாக ஜெம் கிரானைட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் வீரமணிக்கு எதிராக 8 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், தற்கொலைக்குத் தூண்டியதாக ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: தூத்துக்குடி போலீஸுக்கு கிடைத்த ரகசிய தகவல்.. குடோனிலிருந்து 462 கிலோ புகையிலை பறிமுதல்.. 3 பேரை தூக்கிய அதிரடிப்படை!

இந்த வழக்குகளை மூடி மறைக்க காவல்துறை உயர் அதிகாரிகளுக்குத் தொடர்பு இருப்பதாகவும், இதற்காக லட்சக்கணக்கில் பணப் பரிமாற்றம் நடைபெற்றுள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. எனவே, இந்த வழக்குகளின் விசாரணையை சிபிஐக்கு மாற்றக் கோரி வாராகி மற்றும் எம்.எல்.ரவி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர்.

இதற்கிடையே, வழக்கு தொடர்பான வீடியோக்கள் ஊடகங்களில் வெளியான விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கக் கோரி துளிர் அறக்கட்டளை சார்பிலும் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

8 போக்சோ வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல்

இந்த மனுக்கள் நீதிபதி வி.லட்சுமி நாராயணன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தன. அப்போது சிறப்பு புலனாய்வுக் குழு தரப்பில் ஆஜரான தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜான் சத்யன், வீரமணிக்கு எதிரான 8 போக்சோ வழக்குகளிலும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். மேலும், தற்கொலைக்குத் தூண்டியதாகப் பதிவு செய்யப்பட்ட மற்றொரு வழக்கிலும் 10 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று நீதிமன்றத்தில் உறுதியளித்தார்.

மேலும் படிக்க: சிறுமியை வாயை பொத்தி கடத்தி.. மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை.. திருப்பூரில் பகீர் சம்பவம்!

குற்றப்பத்திரிகை என்பது வழக்கின் விசாரணையின்போது சேகரிக்கப்பட்ட ஆதாரங்கள், சாட்சிகளின் வாக்குமூலங்கள், விசாரணை முடிவுகள் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் உள்ளிட்ட விவரங்களை உள்ளடக்கிய முக்கியமான ஆவணமாகும். இதனை நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதன் மூலம், சம்பந்தப்பட்ட நபர்களுக்கு எதிரான விசாரணையைத் தொடர்ந்து நடத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். இருப்பினும், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருப்பது குற்றம் நிரூபிக்கப்பட்டதாகப் பொருளல்ல; நீதிமன்ற விசாரணைக்குப் பிறகே குற்றம் தொடர்பான இறுதி முடிவு எடுக்கப்படும்.

தலைமறைவாக உள்ள முக்கிய நபர் – பணப்பரிமாற்றம் குறித்து விசாரணை

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முக்கிய நபரான எஸ்.ஆர்.எம்.யூ. கன்னையாவின் மகன் பிரகாஷ் தலைமறைவாக இருப்பதாக சிறப்பு புலனாய்வுக் குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டது அவரது முன்ஜாமீன் மனு நவம்பர் 16ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளதாகவும், இந்த வழக்கில் நடைபெற்றதாகக் கூறப்படும் பணப்பரிமாற்றங்கள் தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்த வேண்டியுள்ளதாகவும் அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.

மேலும், வழக்கின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு உதவுவதற்காக மூன்று சிறப்பு அரசு வழக்கறிஞர்களை நியமித்து கடந்த 6ஆம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

 

Follow Us