AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

IPL 2027: மும்பையை விட்டு வெளியேறும் ஹர்திக்.. கொக்கி போடும் கேகேஆர், எல்எஸ்ஜி!

Hardik Pandya Trade: வருகின்ற ஐபிஎல் 2027 சீசனில் ஹர்திக் பாண்ட்யா எந்த அணிக்காக விளையாடுவார் என்பது குறித்து பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைத் தவிர, அவரது பெயர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுடனும் தொடர்புபடுத்தப்பட்டுள்ளது.

IPL 2027: மும்பையை விட்டு வெளியேறும் ஹர்திக்.. கொக்கி போடும் கேகேஆர், எல்எஸ்ஜி!
ஹர்திக் பாண்ட்யாImage Source: AP
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 03 Aug 2026 16:13 PM IST

ஐபிஎல் 2026 சீசன் முடிந்து 2 மாதங்கள் ஆகிவிட்டன. தற்போது வீரர் பரிமாற்றம் குறித்த பிரச்சினை எழுந்துள்ளது. ரிஷப் பண்ட் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோரை முறையே லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பரிமாற்றம் செய்து கொண்டன. ஆனால், நட்சத்திர ஆல்-ரவுண்டரான ஹர்திக் பாண்ட்யா தான் தற்போது மிகப்பெரிய பேசுபொருளாக உள்ளார். மும்பை இந்தியன்ஸ் (Mumbai Indians) அணியுடனான அவரது பயணம் முடிவுக்கு வந்துவிட்டதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து, ஹர்திக் பாண்ட்யா சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) அணியில் சேரவிருப்பது குறித்த யூகங்களும் வதந்திகளும் அதிகமாகப் பரவி வருகின்றன. இதுகுறித்த பேச்சுவார்த்தைகளை சென்னை அணி ஏற்கனவே மறுத்திருந்தது. தற்போது ஹர்திக்கின் அணியான மும்பை இந்தியன்ஸும் இந்த யூகங்களை மறுத்துள்ளது.

ALSO READ: சிஎஸ்கே அதிரடி வீரரை குறிவைத்த எல்எஸ்ஜி.. பரிமாற்றமாக இந்த அனுபவ வேகப்பந்து வீச்சாளரா?

வதந்திக்கு டாட் வைத்த மும்பை இந்தியன்ஸ்:

குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக 2 ஆண்டுகள் இருந்த, ஹர்திக் பாண்ட்யா தனது பழைய அணியான மும்பை இந்தியன்ஸ் அணிக்கு திரும்பினார். ஆனால், தொடர்ந்து 3 சீசன்களுக்கு அணியின் கேப்டனாக இருந்தபோதிலும், அவரால் மும்பை அணிக்கு முன்பு போல அதே வெற்றியைத் தர முடியவில்லை. இதன் காரணமாக, அணிக்குள்ளும் ரசிகர்களிடையேயும் எப்போதும் ஹர்திக் பாண்ட்யாவுக்கு எதிராக விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். கடந்த 2026 ஐபிஎல் சீசனில் அவரது மற்றும் அணியின் செயல்பாடு மோசமாக இருந்தது. இதன் காரணமாக, ஹர்திக் பாண்ட்யாவும் மும்பை அணியும் பிரிந்து செல்ல முடிவு செய்துள்ளனர்.

ஹர்திக் பாண்டியா எந்த அணிக்குச் செல்வார்?

வருகின்ற ஐபிஎல் 2027 சீசனில் ஹர்திக் பாண்ட்யா எந்த அணிக்காக விளையாடுவார் என்பது குறித்து பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைத் தவிர, அவரது பெயர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுடனும் தொடர்புபடுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான அனைத்து செய்திகளையும் சென்னை அணி முன்னதாக மறுத்திருந்தது. தற்போது மும்பை அணியும் அத்தகைய கூற்றுகளை மறுத்துள்ளது. எந்தவொரு வீரரின் பரிமாற்றம் குறித்தும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று மும்பை செய்தித் தொடர்பாளர் கூறியதாக ஸ்போர்ட்ஸ்டார் செய்தி வெளியிட்டுள்ளது.

ALSO READ: முதலில் சிஎஸ்கே, இப்போது மும்பை.. தடுமாறும் ஹர்திக்.. அணிகள் தவிர்ப்பது ஏன்?

அதேநேரத்தில், வருகின்ற ஐபிஎல் 2027 சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கும் அனுபவமிக்க கேப்டன் தேவைப்படுகிறது. இதன் காரணமாக, ஹர்திக் பாண்ட்யாவிற்கு டிரேடு ஓபன் செய்யப்பட்டால், இந்த இரு அணிகளும் பரிமாற்றம் செய்ய விரும்பலாம். 93431

Follow Us