Sundar C: அஜித் குமார் அரசியல் வரவேண்டும் என விரும்புகிறேன் – சுந்தர் சி ஓபன் டாக்!
Director Sundar C About Ajith Enter Politics: தென்னிந்திய சினிமாவில் சிறந்த நடிகர் மற்றும் கார் ரேஸராக இருந்துவருபவர் அஜித் குமார். சமீபத்தில் நேர்கணலில் ஒன்றில் பேசிய இயக்குநர் சுந்தர் சி, நடிகர் அஜித் குமார் அரசிய வரவேண்டும் என விரும்புவதாக தெரிவித்துள்ளார். அது குறித்து விவரமாக பார்க்கலாம்.
நடிகர் அஜித் குமார் (Ajith Kumar) தற்போது சினிமாவை போலவே கார் ரேஸில் (Car Race) ஆர்வமாக இருந்துவருகிறார். கடந்த 2024ம் ஆண்டு இறுதி முதல் முழுவதுமாக கார் ரேஸ் போட்டிகளில் பங்குபெற்றுவருகிறார். பல்வேறு நாடுகளில் நடைபெறும் சர்வதேச கார் ரேஸ் போட்டிகளில் (International Car Race Competitions), இந்தியாவிற்கும் மற்றும் இந்திய சினிமாவை பெருமை படுத்தும் விதத்தில் அஜித் குமார் இருக்கிற. இதுவரை கிட்டத்தட்ட 8க்கும் மேற்பட்ட போட்டிகளில் அஜித் குமார் கலந்துகொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தற்போது இவர் பெல்ஜியமில் கார் ரேஸ் போட்டிகளில் பிசியாக இருக்கிறார். மேலும் தமிழில் இவர் அடுத்ததாக இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனின் (Adhik Ravichandran) இயக்கத்தில் புதிய படத்திலும் நடிக்கவுள்ளார்.
அந்த வகையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் இயக்குநர் சுந்தர் சி (Sundar C), அஜித் குமார் குறித்து பெருமையாக பேசியுள்ளார். மேலும் அஜித் குமார் மக்கள் மீது அதிகம் ஆர்வம் உள்ளவர் என்றும், அவர் அரசியல் வரவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். அது பற்றி விவரமாக பார்க்கலாம்.




இதையும் படிங்க: தலைவர் 173 படத்திற்காக நான் எழுதிய கதை இப்படிதான் இருந்தது – சுந்தர் சி பேச்சு!
அஜித் குமார் அரசியல் வரவேண்டும் என விரும்புவதாக சுந்தர் சி சொன்ன விஷயம்:
அந்த நேர்காணலில் சுந்தர் சி-யிடம், சினிமாவிலிருந்து யாரை நீங்கள் அரசியலுக்கு கூட்டு வருவீர்கள்? என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த சுந்தர் சி, “ஏற்கனவே மதிப்பிற்குரிய விஜய் அரசியல் வந்துவிட்டார்.வேறு ஒருவரை கூட்டிட்டு வரவேண்டும் என்றால், அஜித் குமாரை நிச்சயம் அரசியலுக்கு வர சொல்லுவேன். பல ஆண்டுகளுக்கு முன், அவரிடம் தனிப்பட்ட முறையில் நல்ல பழக்கம் எனக்கு இருக்கிறது.
இதையும் படிங்க: நிவின் பாலி – மமிதா பைஜூவின் பெத்லஹேம் குடும்ப யூனிட் பட ஷூட்டிங் நிறைவு – வைரலாகும் பதிவு!
சமூதாயத்தின் மீது ரொம்பவே கோவமாக இருப்பாரு. அவர் வெளியே ரொம்ப அமைதியாக இருந்தாலும், உள்ளே சமூதாயத்தின் மீட்டது ரொம்பவே அக்கறையான ஆளு அஜித். அரசியலில் யார் வருவார் என்பது முக்கியம், அதுபோல யார் சொல்வதை மக்கள் கேட்கிறார்கள் என்பதும் முக்கியம்” என அதில் அவர் தெரிவித்திருந்தார்.
அஜித் குமாரின் ரேஸிங் ஆவணப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ பதிவு:
Ajith Kumar Sports Services LLC presents
GLADIATORS – In Pursuit of Challenges #Gladiators is a film on Ajith Kumar’s Motorsport journey, Chasing the impossible. The race begins soon.. Releasing soon in theatres 📽️🍿https://t.co/27pwPuCPYAWitnessed and Captured by #Vijay…
— Suresh Chandra (@SureshChandraa) May 1, 2026
அஜித் குமாரின் நடிப்பில் 2026ம் ஆண்டில் எந்த படமும் வெளியாகாது என கூறப்பட்ட நிலையில், அவரின் ரேஸிங் குறித்த ஆவணப்படமானது 2026ம் ஆண்டில் வெளியாகிறதாம். இதை இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்க, ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். இதை அஜித்தின் புது தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது என்பது குறிப்பிடத்தத்க்கது. இப்படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.