ஆரிரோ ஆராரிரோ.. பெண் குழந்தைக்கு அப்பாவான அபிஷன் ஜீவிந்த்..!
Abishan Jeevinth Baby Girl: தமிழ் சினிமாவில் டூரிஸ்ட் பேமிலி திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக நுழைந்தவர் அபிஷன் ஜீவிந்த். இவர் தனது நீண்டநாள் மற்றும் பள்ளி காதலியான அகிலா இலங்கைவண் என்பவரை கடந்த 2025ம் ஆண்டில் திருமணம் செய்துகொண்டார். தற்போது இந்த தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.
கோலிவுட் சினிமாவில் கடந்த 2025ம் ஆண்டில் வெளியான டூரிஸ்ட் பேமிலி (Tourist Family Movie) என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குநராக நுழைந்தவர் அபிஷன் ஜீவிந்த் (Abishan Jeevinth). இந்த படத்தில் அவரும் முக்கியமான வேடம் ஒன்றில் நடித்திருந்தார். இப்படத்தில் சிம்ரன் (Simran), சசிகுமார் மற்றும் மிதுன் உள்ளிட்ட பல்வேறு நட்சத்திர நடிகர்கள் இணைந்து நடித்திருந்தனர். சூர்யாவின் ரெட்ரோ படத்துடின் இப்படம் வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்திற்கு பின் வித் லவ் (With Love) என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாகவும் இவர் அறிமுகமாகியிருந்தார். தற்போது கதாநாயகனாக சினிமாவிலும் நடிக்க தொடங்கிவிட்டார். இவர் கடந்த 2025ம் ஆண்டு அக்டோபர் 31ம் தேதியில் தனது பள்ளிப்பருவ நண்பரும், நீண்டநாள் காதலியுமான அகிலா இளங்கோவன் (Akkila Ilangovan) என்பவரை திருமணம் செய்துகொண்டார்.
இவர்கள் திருமணமாகி கிட்டத்தட்ட ஒரு வருடத்தை கடந்துள்ள நிலையில், தற்போது இந்த தம்பதிக்கு அழகான பெண் குழந்தை இன்று (02/11/2026) பிறந்துள்ளது. இது தொடர்பான புகைப்படத்துடன் கூடிய பதிவை இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.




இதையும் படிங்க: RC17 படத்தில் ராம் சரண் நடிக்கும் கதாபாத்திரம் இதுவா? – வைரலாகும் தகவல்!
பெண் குழந்தைக்கு தந்தையான அபிஷன் ஜீவிந்த்:
நடிகரும், இயக்குநருமான அபிஷன் கடந்த 2025ம் ஆண்டில் தனது நீண்டநாள் தோழியான அகிலா இளங்கோவனை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பிறகு இந்த ஜோடி இணையத்தில் பெரிதாக பேசப்படவில்லை. அந்த விதத்தில் இவர்கள் திருமணம் முடிந்து ஒரு ஆண்டை கடந்துள்ள நிலையில், தற்போது இந்த தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.
இதையும் படிங்க: அவங்க ரெண்டுபேர் லவ் ஓவர்-ஆ இருக்கு.. சூர்யா – ஜோதிகா குறித்து பேசிய கார்த்தி!
இது தொடர்பான பதிவை அபிஷன் ஜீவிந்த் பகிர்ந்துள்ளார். அதில் “நான் அதிகாரப்பூர்வமாக ஒரு பெண் குழந்தையின் அப்பா” என அதில் தெரிவித்துள்ளார். அந்த விதத்தில் பல்வேறு நட்சத்திரங்கள் மற்றும் ரசிகர்கள் இவர்களுக்கு தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்துவருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தனது பெண் குழந்தை குறித்து இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு:
View this post on Instagram
இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் தற்போது ஹீரோவாக படங்களில் நடித்துவரும் நிலையில், வித் லவ் என்ற படமானது இவரின் நடிப்பில் வெளியாக நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. தற்போது பிக்காசோ என்ற படத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை அறிமுக இயக்குநர் கௌதம் சிவராமன் இயக்கியுள்ள நிலையில், 2026ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் வெளியாகும் என கூறப்படுகிறது.