Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

கேரளாவில் தொடரும் கனமழை.. சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு எச்சரிக்கை..

Kerala Heavy Rain Alert: கார்த்திகை மாதம் தொடங்கியிருப்பதால் சபரிமலை சீசன் தொடங்கியுள்ளது. கனமழை எச்சரிக்கையைத் தொடர்ந்து மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் பக்தர்களுக்கு சிறப்பு பாதுகாப்பு வழிமுறைகளை வெளியிட்டுள்ளது. மழை நாட்களில் தேவையற்ற பயணங்களையும் மலை ஏற்றத்தையும் தவிர்க்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

கேரளாவில் தொடரும் கனமழை.. சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு எச்சரிக்கை..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 17 Nov 2025 16:55 PM IST

கேரளா, நவம்பர் 17, 2025: கேரளாவில் மீண்டும் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் மற்றும் சபரிமலைக்கு செல்லக்கூடிய பகுதிகள் உட்பட ஆறு மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்மேற்கு வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி கனமழைக்குக் காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சபரிமலையில் இன்றும் நாளையும், அதாவது நவம்பர் 17 மற்றும் 18, 2025 ஆகிய இரண்டு நாட்களில் சன்னிதானம், பம்பா, நிலக்கல் ஆகிய இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சபரிமலை சன்னிதானம், பம்பா, நிலக்கல் ஆகிய பகுதிகளில் 7 சென்டிமீட்டர் முதல் 11 சென்டிமீட்டர் வரை மழை பெய்யக்கூடும் என தனியார் வானிலை ஆய்வாளர் ராஜீவன் எரிகுலம் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மஞ்சள் நிற எச்சரிக்கை:

திருவனந்தபுரம், கொல்லம், பத்தினம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம் மற்றும் இடுக்கி ஆகிய மாவட்டங்களில் கன மழை பதிவாகக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது. கோட்டயம், இடுக்கி, மலப்புரம் ஆகிய மாவட்டங்களுக்கு இன்றும் நாளையும் மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: அடுத்தடுத்த காற்றழுத்த தாழ்வு பகுதிகள்.. தமிழகத்தில் வெளுக்கப்போகும் மழை.. எத்தனை நாட்களுக்கு?

கார்த்திகை மாதம் தொடங்கியிருப்பதால் சபரிமலை சீசன் தொடங்கியுள்ளது. கனமழை எச்சரிக்கையைத் தொடர்ந்து மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் பக்தர்களுக்கு சிறப்பு பாதுகாப்பு வழிமுறைகளை வெளியிட்டுள்ளது. நிலச்சரிவு, மண்சரிவு மற்றும் திடீர் வெள்ளம் ஏற்படும் பகுதிகளில் வசிப்பவர்களும், ஆறுகள் மற்றும் அணைகளின் கீழ்ப்பகுதியில் வசிப்பவர்களும் அதிகாரிகளின் அறிவுறுத்தலைப் பின்பற்றி உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: அதிகனமழை இருக்காது.. சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை மட்டும் தான் இருக்கும் – பிரதீப் ஜான்..

சபரிமலை செல்லும் பக்தர்கள் அறிவுறுத்தல்:


பலத்த காற்று வீசும் வாய்ப்புள்ளதால் பாதுகாப்பற்ற வீடுகள் மற்றும் பலவீனமான கூரைகள் கொண்ட வீடுகளில் வசிப்பவர்களும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். மழை நாட்களில் தேவையற்ற பயணங்களையும் மலை ஏற்றத்தையும் தவிர்க்க வேண்டும். சபரிமலைக்கு வரும் பக்தர்கள் வானிலை முன்னறிவிப்பை சரிபார்த்து, பாதுகாப்பு வழிகாட்டுதல்களைப் பின்பற்றிய பின்னரே பயணத்தை தொடர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.