Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

அதிகனமழை இருக்காது.. சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை மட்டும் தான் இருக்கும் – பிரதீப் ஜான்..

Tamil Nadu Rain Alert: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 16, 2025 அன்று தொடங்கியது. அக்டோபர் மாதம் முழுவதும் நல்ல மழை பதிவாகியுள்ளது. குறிப்பாக அக்டோபர் மாத இறுதியில்வாரம் ‘மௌன்டா’ புயல் வங்கக்கடலில் உருவாகி தமிழகத்திற்கு நல்ல மழை பதிவு தந்தது. கிட்டத்தட்ட அக்டோபர் மாதத்தில் மட்டும் 58% அதிகமாக மழை பதிவானது.

அதிகனமழை இருக்காது.. சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை மட்டும் தான் இருக்கும் – பிரதீப் ஜான்..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Updated On: 17 Nov 2025 14:18 PM IST

வானிலை நிலவரம், நவம்பர் 17, 2025: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் வரக்கூடிய நாட்களில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் பகல் நேரங்களில் அவ்வப்போதும் கன மழையும், இரவு முதல் அதிகாலை வரை மிதமான மழையும் பதிவாகக்கூடும் என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்தார். இது ஒரு பக்கம் இருக்க, டெல்டா மாவட்டங்களில் நாகையிலும் மயிலாடுதுறையிலும் நல்ல மழை பதிவு இருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தீவிரமடையும் வடகிழக்கு பருவமழை:

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 16, 2025 அன்று தொடங்கியது. அக்டோபர் மாதம் முழுவதும் நல்ல மழை பதிவாகியுள்ளது. குறிப்பாக அக்டோபர் மாத இறுதியில்வாரம் ‘மௌன்டா’ புயல் வங்கக்கடலில் உருவாகி தமிழகத்திற்கு நல்ல மழை பதிவு தந்தது. கிட்டத்தட்ட அக்டோபர் மாதத்தில் மட்டும் 58% அதிகமாக மழை பதிவானது. ஆனால் அதனைத் தொடர்ந்து நவம்பர் மாதம் தொடங்கியதிலிருந்து தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவி வருகிறது. இந்த சூழலில் நவம்பர் 16, 2025 தேதியான நேற்று முதல் வடகிழக்கு பருவமழை தீவிரமடையும் என கணிக்கப்பட்டது.

மேலும் படிக்க: மேலும் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது.. மக்களே அலர்ட்!

சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்:

இந்த சூழலில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நல்ல மழை பதிவு இருந்து வருகிறது. குறிப்பாக நவம்பர் 17, 2025 தேதியான இன்று சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதே சமயத்தில் அரியலூர், கடலூர், விழுப்புரம், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: ‘அதீத பணி நெருக்கடி’.. தமிழ்நாட்டில் நாளை முதல் எஸ்ஐஆர் பணிகள் புறக்கணிப்பு!!

அதிகனமழைக்கான வாய்ப்பு குறைவு – பிரதீப் ஜான்:


இந்த சூழலில் தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான், காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் இரவு முதல் அதிகாலை வரை மட்டுமே அவ்வப்போது மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாகவும், இது சமாளிக்கக்கூடிய மழையாக இருக்கும் என்றும், அதாவது மிதமான மழைக்கு மட்டுமே வாய்ப்பு இருப்பதாகவும், மிக கனமழைக்கான வாய்ப்பு மிக குறைவு என்றும் தெரிவித்துள்ளார்.

அதேபோல் நவம்பர் மாத இறுதியில் கண்டிப்பாக ஒரு புயல் உருவாகும் எனவும், ஆனால் வரக்கூடிய நாட்களில் தான் அதன் தன்மை மற்றும் அது எப்போது உருவாகும் என்பது குறித்து கணிக்க முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் உள் தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழை இருக்கக்கூடும் என்றும் தெரிவித்துள்ளார்.