ஜோதி வடிவில் ஐயப்பன்… சபரிமலையில் ஏற்றப்பட்ட மகர ஜோதி…. உணர்ச்சி பெருக்குடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
Makara Vilakku 2026: உலகப் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகரவிளக்கு பூஜைக்காக, கடந்த 2025 ஆம் ஆண்டு டிசம்பர் 30 அன்று நடைதிறக்கப்பட்டது. இந்த நிலையில் முக்கிய நிகழ்வான மகரஜோதி தரிசனம் ஜனவரி 14, 2026 அன்று பொன்னம்பலமேட்டில் மகர ஜோதி ஏற்றப்பட்டது.
உலகப் புகழ்பெற்ற சபரிமலை (Sabarimala) ஐயப்பன் கோயிலில் மகர விளக்கு பூஜைக்காக, கடந்த 2025 ஆம் ஆண்டு டிசம்பர் 30 அன்று நடைதிறக்கப்பட்டது. இந்த நிலையில் முக்கிய நிகழ்வான மகரஜோதி தரிசனம் ஜனவரி 14, 2026 அன்று மாலை துவங்கியுள்ளது. சபரிமலையில் முக்கிய நிகழ்வாக பொன்னம்பலமேட்டில் ஜனவரி 14, 2026 அன்று மகர ஜோதி ஏற்றப்பட்டது. ஜோதி வடிவிலான ஐயப்பனை பக்தர்கள் கூப்பிய கைகளுடனும் மகர ஜோதியைக் கண்டு மனமுருகி வேண்டிக்கொண்டனர். தீபாராதனையின் போது, வானத்தில் உத்திர நட்சத்திரம் ஒளிர்ந்தது. வானத்தில் வேறு எந்த நட்சத்திரங்களும் இல்லாமல் உத்திர நட்சத்திரத்துடன் மகர விளக்கையும் கண்டதில் பக்தர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
இதற்காக பந்தளம் அரண்மனையிலிருந்து கொண்டு வரப்பட்ட அனைத்து பொருட்களாலும் அலங்கரிக்கப்பட்ட ஐயப்பனின் தெய்வீக தரிசனத்தைக் கண்டு பக்தர்கள் மகிழ்ச்சியடைந்தனர். அலங்காரங்கள் மற்றும் மாலையுடன் நின்றிருந்த ஐயப்பனை உணர்ச்சி பெருக்குடன் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
இதையும் படிக்க : ஆண்டாளுக்கு படைக்கப்பட்ட சேலைகள்.. ஊர்வலமாக சென்ற பெண்கள்..
சபரிமலையில் ஏற்றப்பட்ட மகர ஜோதி
மகரவிளக்கு விழாவிற்காக சன்னிதானத்தில் சுத்திகரிப்பு சடங்குகள் உட்பட அனைத்து சடங்குகளும் நிறைவடைந்தன. மகர சங்கரம பூஜைகளுக்காக ஜனவரி 14, 2026 அன்று பிற்பகல் 2.50 மணிக்கு கோயில் மூடப்பட்டது. அதனைத் தொடர்ந்து பிற்பகல் 3.08 மணிக்கு சங்கரம அபிஷேகம் செய்யப்பட்டது. ஒரே மனதுடனும், அடைக்கல பிரார்த்தனையுடனும் காத்திருந்த ஐயப்ப பக்தர்கள், இப்போது பொன்னம்பலமேட்டில் தெய்வீக ஜோதியின் தரிசனத்தைப் பெற்றனர். கோயில் திறக்கப்பட்ட உடனேயே, பொன்னம்பலமேட்டில் மகர ஜோதி ஏற்றப்பட்டது, சன்னிதானத்திலிருந்து பிரார்த்தனை ஒலி எதிரொலத்தது.
சபரிமலையில் மகர ஜோதி ஏற்றப்படும் காட்சிகள்
VIDEO | Sabarimala Makaravilakku: The ‘Makara Jyothi’ lights up Ponnambalamedu, a remote hilltop about eight kilometres from the shrine complex.
(Full video available on PTI Videos – https://t.co/n147TvrpG7) pic.twitter.com/OYqivZkL7Q
— Press Trust of India (@PTI_News) January 14, 2026
இதையும் படிக்க : தைப்பொங்கல் 2026: பொங்கல் வைக்க சிறந்த நேரம்.. வழிபடும் முறை..
பந்தளம் அரண்மனையிலிருந்து கொண்டு வரப்பட்ட திருவாபரணம் ஊர்வலம் பாரம்பரிய பாதையில் மாலை 5.30 மணிக்கு சரம்குத்தியை அடைந்தது. பின்னர் ஊர்வலம் மாலை 6.20 மணிக்கு சன்னிதானத்தை அடைந்தது. தீபாராதனை மாலை 6.40 மணிக்கு நடைபெற்றது. இந்த நேரத்தில்தான் பொன்னம்பலமேட்டில் மகரவிளக்கு ஏற்றப்பட்டது.
மகர ஜோதியை எங்கிருந்து காணலாம்?
மகர விளக்கு பக்தர்கள் சன்னிதானம், பண்டிதாவலம், சாரம்குத்தி, மரக்கூட்டம், புல்மேடு, மலை உச்சி, நீலிமலை, சாலகயம், அட்டத்தோடு ஆகிய 9 இடங்களில் இருந்து தரிசனம் செய்தனர். இது நீண்ட நாட்கள் விரதம் இருந்து சபரிமலை சென்ற பக்தர்களுக்கு சிறப்பான தருணமாக பார்க்கப்படுகிறது.



