திருப்பதி கோயிலில் தரிசன முன்பதிவில் புதிய மாற்றம்…நாளை முதல் அமல்….என்னனு தெரிஞ்சுக்கோங்க!
Tirupati Darshan Tickets: திருப்பதியில் தரிசனம் செய்வதற்கான டிக்கெட்டுகள் ஆஃப்லைனில் வழங்கப்படுவதை நிறுத்தி, நாளை முதல் ஆன்லைன் மூலம் வழங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை சோதனை அடிப்படையில் அமல்படுத்தப்படுகிறது. காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை முன்பதிவு செய்யலாம்.
ஆந்திர மாநிலம், திருப்பதி திருமலை கோவிலுக்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்காக வந்து செல்கின்றனர். மிகவும் பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் தரிசனத்துக்காக டிக்கெட் ஆன்லைன் மூலமாகவும், கவுண்டர்களில் நேரடியாகவும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இந்த டிக்கெட் முறையில் மிக முக்கிய மாற்றம் ஒன்று செய்யப்பட்டுள்ளது. அதன்படி, திருமலை திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்வதற்காக ஸ்ரீ வாணி தரிசன டிக்கெட் ஆஃப் லைன் மூலம் வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது, இந்த டிக்கெட்டுகள் ஆன்லைன் மூலம் மட்டுமே வழங்கப்பட உள்ளது. இந்த முறையானது சோதனையாக ஒரு மாத காலத்துக்கு நடைமுறையில் இருக்கும் என்று கோவில் வட்டாரங்கள் கூறுகின்றன. இந்த நடைமுறையானது நாளை வெள்ளிக்கிழமை ( ஜனவரி 9) முதல் நடைமுறைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு நாளைக்கு கவுண்டர்களில் 800 டிக்கெட் விற்பனை
முன்பு ஒரு நாளைக்கு 800 டிக்கெட்டுகள் நேரடி கவுண்டர்கள் மூலம் வழங்கப்பட்டு வந்தன. தற்போது, ஸ்ரீவாணி தரிசனத்திற்கான முன்பதிவும் ஆன்லைன் வழியாக இணைக்கப்பட்டுள்ளது. ஆனால், திருப்பதி விமான நிலையத்தில் உள்ள மையத்தில் தினம் தோறும் வழங்கப்பட்டு வரும் 200 டிக்கெட் தொடர்ந்து வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. திருமலையில் செயல்பட்டு வரும் கோகுலம் விடுதி அருகே உள்ள ஸ்ரீவாணி டிக்கெட் கவுண்டர்களில் ஆஃப்லைனில் வழங்கப்பட்டு வந்த 800 டிக்கெட்டுகள் நாளை ஜனவரி 9-ஆம் தேதி முதல் ஆன்லைன் மூலமாக வழங்கப்பட உள்ளது.
மேலும் படிக்க: 2025-ல் 13 கோடியே 52 லட்சம் லட்டுகள் விற்பனை.. திருப்பதி தேவஸ்தானம் சாதனை!
நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள்
எனவே, கோவிலுக்கு தரிசனத்திற்காக வரும் பக்தர்கள் நேரடியாக ஆன்லைன் மூலமாக தரிசனத்துக்கான டிக்கெட் கொள்ளலாம். இந்த கவுண்டரில் தரிசன டிக்கெட்டுகளை பெறுவதற்கு பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்து நிற்கும் சூழ்நிலை இருந்து வந்தது. இதில், பல்வேறு நடைமுறை சிக்கல்கள் தொடர்ந்ததால், இதனை தவிர்க்கும் பொருட்டு சோதனை முயற்சியாக ஸ்ரீவாணி தரிசன டிக்கெட் ஆன்லைன் வழியாக பெறுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.
காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை
இதில், பக்தர்களின் வரவேற்பின் அடிப்படையில் இந்த நடைமுறை தொடருமா அல்லது மீண்டும் பழைய முறைப்படி ஆன்லைனில் டிக்கெட் வழங்கப்படுமா என்பது முடிவு எடுக்கப்படும். இந்த முன்பதிவானது தினந்தோறும் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை செயல்பாட்டில் இருக்கும். முதலில் முன்பதிவு செய்யும் நபர்களுக்கு முதலில் வாய்ப்பு என்பதன் அடிப்படையில், அன்றைய தினம் மாலை 4 மணிக்கு ஏழுமலையானை தரிசனம் செய்யலாம்.
விஜபி பிரேக் தரிசன டிக்கெட்
இதே போல, திருமலை கோயிலுக்கு நேரடியாக வந்து நன்கொடை வழங்கும் வாய்ப்பை தேவஸ்தானம் அறிமுகம் செய்துள்ளது. அப்படி நன்கொடை செலுத்தும் நபர் ஒரு விஐபி பிரேக் தரிசன டிக்கெட்டை பெற்று சுவாமியே தரிசனம் செய்வதற்காக ஸ்ரீவாணி தரிசன முறையில் வழிவகை உள்ளது.
மேலும் படிக்க: எதிர் காலத்தை கணிக்கும் சீன கோயில்…அதுவும் இந்தியாவில் எங்கு உள்ளது தெரியுமா!



