தை அமாவாசை 2026.. உங்கள் தடைகள் நீங்க.. இதை செய்ய தவறாதீர்கள்..
Thai Amavasai: ஆண்டின் பிற அமாவாசை நாட்களில் மூதாதையர்களுக்குத் தர்ப்பணம் தர இயலாதவர்கள் கூட தை அமாவாசை நாளில் ஆறு, கடல் போன்ற புனித நீர்நிலைகளுக்குச் சென்று நீராடி மூதாதையர்களுக்குப் படையல் வைத்து திதி கொடுக்க வேண்டும். இந்த தை அமாவாசை தினத்தில் முன்னோர்களுக்குத் தர்ப்பணம் அளித்தால் சகலவிதமான பாவங்களும் தீரும் என்கிறார்கள்.
மாதம் மாதம் அமாவசை வந்தாலும் ஒரு வருடத்தில் மூன்று அமாவசைகள் மிகவும் முக்கியமானவை, அவை தை அமாவசை, ஆடி அமாவசை மற்றும் புரட்டாசி அமாவசை. இந்த மூன்று அமாவசை தினங்களிலும் மறக்காமல் பித்திரு வழிப்பாடு செய்ய வேண்டும். தை மாதத்தில் மகரராசியில் சூரியன், சந்திரன், பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் ஒரே பாகையில் இணையும்போது செய்யும் பூஜைகள், வேண்டுதல்கள், வழிப்பாடுகள் அனைத்தும் மிகவும் சக்திவாய்ந்ததாகும். இந்த நாளில் குலதெய்வ கோவிலுக்குச் சென்று பொங்கல் வைத்து வழிப்பட்டாலோ அல்லது அவரவர் வழக்கப்படி குலதெய்வத்தை வணங்கி வந்தாலோ நீண்ட நாள் தடைப்பட்ட சுபக்காரியங்கள் இனிதே நடைப்பெரும் என்பது நம்பிக்கை.
Also Read : போகி அன்று செய்ய வேண்டியதும் செய்யக் கூடாததும் – ஆன்மிக பெரியவர்கள் சொல்வது என்ன?
பித்திரு தோஷம் நீங்கும்:
எப்பேர்ப்பட்ட பித்திரு தோஷமானாலும் முன்னோர்களை வழிப்படுவதால் சகல விதமான தோஷங்களும் நீங்கும் என்பது ஐதீகம். பித்திரு தர்ப்பணம் செய்வதால் வீட்டில் இருக்கும் சுபக்காரிய தடைகள் நீங்கும், தீய சக்திகள் விலகும், குடும்பத்தில் இருக்கும் சண்டை சச்சரவுகள் விலகும், வீண் விரயங்கள் வராது, தீராத நோய்களும் தீரும், கண்திருஷ்டி கோளாறுகள் சரியாகும், நவகிரக தோஷங்கள் நீங்கும், எதிர்பாராத விபத்துகள் மற்றும் வீட்டில் திடீர் இழப்புகள் வராமல் தடுக்கப்படுவதாக சொல்லப்படுகிறது.
முன்னோர்கள் வழிபாடு:
அமாவாசை நாளில் கடல், ஆறு, குளம் அல்லது அருவி உள்ளிட்ட நீர்நிலைகளில் இரந்த முன்னோர்களுக்குப் பிண்டம் வைத்து எள், ஜலம், தர்ப்பைக் கொண்டு வழிப்பட வேண்டும். இந்த தை அமாவாசை தினத்தில் முன்னோர்களுக்குத் தர்ப்பணம் அளித்தால் சகலவிதமான பாவங்களும் தீரும் என்கிறார்கள். தாத்தா, கொள்ளுத்தாத்தா, பாட்டன், பூட்டன் என பல தலைமுறையினர் பெயரை கூறி அவர்களை வணங்கி தர்ப்பணம் தர வேண்டும். ஆண்டின் பிற அமாவாசை நாட்களில் மூதாதையர்களுக்குத் தர்ப்பணம் தர இயலாதவர்கள் கூட தை அமாவாசை நாளில் ஆறு, கடல் போன்ற புனித நீர்நிலைகளுக்குச் சென்று நீராடி மூதாதையர்களுக்குப் படையல் வைத்து திதி கொடுக்க வேண்டும்.
Also Read : 2026 ஜனவரி மாத ராசிபலன்: இந்த ராசிகளுக்கு உருவாகும் ராஜயோகம்.. அடிக்குது அதிர்ஷ்டம்..
இந்த ஸ்தலங்களில் தர்ப்பணம் அளித்தால் ஐஸ்வர்யம் நிறையும்:
குறிப்பாக ராமேஸ்வரம், திருப்புல்லானி, வேதாரண்யம், கோடியக்கரை, பூம்புகார், திலதர்ப்பணப்புரி, திருவன்காடு, மகா மகத் தீர்த்தக் குளம், காவேரி சங்கமம், ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம், முக்கொம்பு, திருவையாறு, சென்னை கபாலீஸ்வரர் கோவில், திருவல்லூர் வீரராகவ பெருமாள் கோவில் குளம் மற்றும் உங்கள் ஊர் அருகே இருக்கும் ஓடும் நதிக்கரையில் அல்லது கோவில் குளக்கரையில் இந்த தர்ப்பணத்தை அளித்திட நிச்சயம் குடும்பத்தில் சந்தோஷமும், சகல ஐஸ்வர்யங்களும் நிறையும் என்பது நம்பிக்கை.