Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தனிமையில் சந்திக்க வேண்டும் என அழைத்த கள்ளக்காதலன்.. இரவில் பெண்ணுக்கு நடந்த கொடூரம்!

Woman Brutally Killed By Her Lover | பெங்களூரில் தனிமையில் சந்திக்க தனது கள்ளக்காதலன் அழைத்த நிலையில், அங்கு சென்ற பெண்ணை அந்த நபர் மறைத்து வைத்திருந்த கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு தப்பிச் சென்ற சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தனிமையில் சந்திக்க வேண்டும் என அழைத்த கள்ளக்காதலன்.. இரவில் பெண்ணுக்கு நடந்த கொடூரம்!
இடது பக்கத்தில் இருப்பவர் கொலை செய்த உசேன். வலது பக்கத்தில் இருப்பவர் கொலை செய்யப்பட்ட உமா
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 07 Jan 2026 15:08 PM IST

பெங்களூரு, ஜன்வரி 07 : கர்நாடகா (Karnataka) மாநிலம், விஜயநகர் மாவட்டம், சப்லகட்டா காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வந்தவர் உமா என்ற 28 வயது பெண். இவருக்கும் ஆந்திர பிர்தேசத்தை (Andhra Pradesh) சேர்ந்த ராம ஆஞ்சநேயா என்ற நபருக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. அதன் பிறகு கணவன் – மனைவி இருவரும் ஆந்திராவில் வசித்து வந்துள்ளனர். இந்த தம்பதிக்கு 3 மகன்கள் உள்ளனர்.

கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்த தம்பதி

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு கணவன் – மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ள நிலையில்,  இரண்டு மகன்கள் உமா உடனும், ஒரு மகன் ராம ஆஞ்சநேயா உடனும் வசித்து வந்துள்ளார். கணவரை பிரிந்த உமா தனது வாழ்வாதாரத்திற்காக ரயில்வே கேண்டினில் பணியாற்றி வந்துள்ளார். அப்போது அவருக்கு உசேன் காஜா என்ற 28 வயது நபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க : மின்சார வாகனம் வைத்திருப்போருக்கு ஹேப்பி நியூஸ்.. நெடுஞ்சாலைகளில் வருகிறது சார்ஜிங் ஸ்டேஷன்

இளைஞருடன் கள்ளக்காதலில் இருந்த பெண்

இவர்கள் இருவருக்கும் இடையேயான உறவு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இந்த நிலையில், அடிக்கடி உபா வீட்டிற்கு சென்ற உசேன் காஜா அவருடன் தனிமையில் இருந்துள்ளார். இவர்கள் இருவரும் திருமணத்தை மீறிய உறவில் இருந்த நிலையில் உசேன் தனது கள்ளக்காதலிக்கு கடனாக கொஞ்சம் பணம் கொடுத்துள்ளார். சில நாட்களுக்கு பிறகு அந்த பணத்தை அவர் திரும்ப கேட்டு வந்துள்ளார்.

இதையும் படிங்க : மாஞ்சா நூலால் வந்த வினை…கழுத்தில் 10 தையல்…ஆபத்தான நிலையில் பாதிரியார்!

தனிமையில் சந்திக்க அழைத்த நிலையில் நடந்த கொடூரம்

இந்த நிலைடயில், சம்பவத்தன்று இரவு உமாவை தொடர்புக்கொண்ட உசேன் அவரை தனியாக சந்திக்க வேண்டும் என அழைத்துள்ளார். அதன்படி உமா அங்கு சென்ற நிலையில், அவரிடம் பணம் கேட்டு உசேன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது உமா பணம் இல்லை என கூறிய நிலையில், உசேன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை கொண்டு உமாவின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் உமாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், உசைனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.