2 வயது குழந்தைக்கு விஷம் கொடுத்து கொல்ல முயன்ற தந்தை.. மருந்து செலவு அதிகமாக உள்ளதால் கொடூர செயல்!
Father Tried To Kill 2 Years Old Kid | கர்நாடகா மாநிலம், பெங்களூரில் குழந்தையின் மருத்துவ செலவுகள் அதிகமாக இருப்பதால், குழந்தையின் தந்தை தனது இரண்டு வயது மகனுக்கு விஷம் கொடுத்து கொலை செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூர், ஜனவரி 06 : கர்நாடகா (Karnataka) மாநிலம், பெங்களூரு (Bengaluru) அருகே உள்ள பாகலூரில் வசித்து வருபவர் முனிகிருஷ்ணா. கூலித் தொழிலாளியான இவருக்கு திருமணமாகி சத்ய என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிக்கு 2 வயதில் ஜோயல் என்ற ஆண் குழந்தை ஒன்று இருந்துள்ளது. அந்த குழந்தை பிறந்தது முதலே உடல்நல குறைபாட்டால் பாதிக்கப்பட்டு இருந்துள்ளது. இதன் காரணமாக முனிகிருஷ்ணா மற்றும் அவரது மனைவி குழந்தையை அழைத்துக்கொண்டு ஒவ்வொரு மருத்துவமனையாக சென்று குழந்தைக்கு சிகிச்சை பெற்று வந்துள்ளனர்.
மோசமடைந்த குழந்தையின் உடல்நிலை
ஏற்கனவே உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்த அந்த குழந்தைக்கு, டிசம்பர் 22, 2025 அன்று வாயில் இருந்து நுரை வந்துள்ளது. அதனை கண்டு சத்யா கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளார். உடனடியாக குழந்தையை அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். அங்கு குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள், குழந்தையின் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளதாகவும், எனவே குழந்தையை இந்திரா காந்தி குழந்தைகள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்படி கூறியுள்ளனர். அதன்படி, இந்திரா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க : திரிபுரா, அசாம் அடுத்தடுத்து நிலநடுக்கம்.. பீதியில் உறைந்த பொதுமக்கள்!
குழந்தைக்கு விஷம் கொடுக்கப்பட்டதை கண்டறிந்த மருத்துவர்கள்
இதற்கிடையே குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், விஷம் கொடுக்கப்பட்டதால் தான் குழந்தையின் உடல்நிலை மோசமடைந்துள்ளதாக மருத்துவர்கள் சத்யாவிடம் கூறியுள்ளனர். அதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர், தனது குடும்ப உறுப்பினர்களிடம் விசாரித்துள்ளார். அப்போது முனிகிருஷ்ணா தான் குழந்தைக்கு விஷம் கொடுத்தது என்பது தெரிய வந்துள்ளது. குழந்தையின் மருத்துவ செலவுகளை ஈடுகட்ட முடியாத சூழலில் அவர் இந்த கொடூர செயலை செய்துள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.
இதையும் படிங்க : புதையலுக்கு ஆசைப்பட்டு 1 வயது குழந்தையை பலி கொடுக்க முயற்சி.. பெங்களூரில் பகீர் சம்பவம்!
விசாரணை மேற்கொண்டு வரும் போலீஸ்
குழந்தையின் மருத்துவ செலவுக்கு அதிக பணம் செலவாவதால் கடும் மன உளைச்சலில் இருந்த முனிகிருஷ்ணா வேலை முடிந்து வீட்டிற்கு வந்தபோது கையுடன் விஷம் வாங்கி வந்துள்ளார். அதனை தனது குழந்தைக்கும் கொடுத்துள்ளார். இதன் காரணமாக தான் குழந்தையின் வாயில் நுரை தள்ளியுள்ளது என்பது தெரியவந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக சத்யா அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், முனிகிருஷ்ணாவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.