மீனாட்சி நாச்சியார் தவெகவை சேர்ந்தவரா? சாட்டை துரைமுருகன் மீது பாய்ந்த வழக்கு.. 20 யூடியூப் சேனலுக்கு நோட்டீஸ்!
Case Filed Against Saattai Duraimurugan : மதுரை தனிஷ்க் நகைக்கடை கொள்ளையில் கைதான மீனாட்சி, தவெக நிர்வாகி என கருத்து தெரிவித்த நாதக நிர்வாகி சாட்டை துரைமுருகன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு 20 யூடியூப் சேனல்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
மதுரை தனிஷ்க் நகைக்கடை கொள்ளையில் பழங்காநத்தம் பகுதியை சேர்ந்த சுரேஷ், அவரது மகன் நரேஷ், அவரது காதலியும், இன்ஸ்டாகிராம் பிரபலமுமான மீனாட்சி நாச்சியார் ஆகிய மூவர் கைது செய்யப்பட்டிருந்தனர். இதில், கைதான மீனாட்சி தமிழக வெற்றி கழகத்தை சேர்ந்த நிர்வாகி பல்வேறு இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் சேனல்களில் கருத்துக்கள் பதிவிடப்பட்டது. அத்துடன், நாம் தமிழர் கட்சியின் நிர்வாகியும், யூடியூப் சேனல் நடத்தி வரும் சாட்டை துரைமுருகனும் இதே கருத்தை தனது யூடியூப் சேனலில் பதிவிட்டிருந்தார். இந்த நிலையில், சாட்டை துரைமுருகன் மீது 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அத்துடன், 20 யூடியூப் சேனல்களுக்கு போலீசார் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். சென்னையில், ஆலந்தூர் பகுதியைச் சேர்ந்த தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகி பரங்கிமலை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
நாதக நிர்வாகி சாட்டை துரைமுருகன் மீது வழக்குப்பதிவு
அந்தப் புகாரில், மதுரை தனிஷ்க் நகைக் கடை கொள்ளையில் கைதான மீனாட்சி நாச்சியார் என்பவர் தமிழக வெற்றி கழகத்தை சேர்ந்த நிர்வாகி என்று நாம் தமிழர் கட்சியின் நிர்வாகியும், யூடியூபருமான சாட்டை துரைமுருகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார். அந்த புகாரை பெற்ற, பரங்கிமலை போலீசார் சாட்டை துரைமுருகன் மீது பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் ஆத்திரமூட்டுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.
மேலும் படிக்க: திருச்செந்தூர் பாடல் சர்ச்சை! யாரை யாருடன் ஒப்பிடுவது.. வேல்முருகன் பண்ணது அநியாயம்.. கொந்தளித்த பெண் முருக பக்தர்!
20 யூடியூப் சேனல்களுக்கு நோட்டீஸ்
இதைத் தொடர்ந்து, மதுரை மேற்கு தொகுதி எம்எல்ஏ தங்கபாண்டியன் என்பவர் தல்லாகுளம் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்திருந்தார். அந்த புகாரில், மதுரை தனிஷ்க் நகைக்கடை கொள்ளையில் கைது செய்யப்பட்ட மீனாட்சி நாச்சியார் தமிழக வெற்றி கழகத்தை சேர்ந்தவர் என்றும், தவெக நிர்வாகி என்றும் பல்வேறு யூடியூப் சேனல்களில் தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருகிறது. இது கட்சியின் நற்பெயரை சீர்குலைக்கும் வகையில் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட யூடியூப் சேனல்கள் நடத்தி வரும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.
சாட்டை கருத்துக்கு தவெகவினர் எதிர் கருத்து
அதன் அடிப்படையில், வழக்குப் பதிவு செய்த தல்லாகுளம் போலீசார் சம்பந்தப்பட்ட 20 யூடியூப் சேனல்களின் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். சாட்டை துரைமுருகன் வெளியிட்ட வீடியோவுக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் அமைச்சர்களும், எம்எல்ஏக்களும் பதில் கருத்து தெரிவித்திருந்தனர். அத்துடன், தவெகவுக்கும், மீனாட்சிக்கும் தொடர்பு இல்லை என்றும் விளக்கம் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: திமுக- காங்கிரஸ் உறவு முற்றிலும் முறிவு? ராகுல்காந்தி அழைப்பை ஏற்க மறுத்த மு.க.ஸ்டாலின்.. அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு!