Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தவெக விருப்ப மனு பெற போட்டா போட்டி.. முதல் நாளிலேயே 10 ஆயிரம் பேர் வாங்கினர்..

தொடர்ந்து, விருப்ப மனுக்கள் வரும் 14ம் தேதி வரை வழங்கப்பட உள்ளது. காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை விருப்பமனுக்களை பெற்றுக்கொள்ளலாம். ரூ.100 செலுத்தி விருப்ப மனுக்களை பெற்றுக்கொண்டவர்கள் மனுக்களை நிரப்பி வழங்கும்போது, கட்டண தொகையாக பொது தொகுதிக்கு ரூ.10,000, தனித்தொகுதிக்கு ரூ.5,000 வழங்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தவெக விருப்ப மனு பெற போட்டா போட்டி.. முதல் நாளிலேயே 10 ஆயிரம் பேர் வாங்கினர்..
தவெக விருப்ப மனு
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 07 Feb 2026 08:42 AM IST

சென்னை, பிப்ரவரி 07: தவெக சார்பில் நேற்று முதல் விருப்ப மனுக்கள் விநியோகம் தொடங்கியது. இதையொட்டி, பனையூரில் உள்ள அக்கட்சி அலுவலகத்தில் விரிவாக ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுக்களை பெறுவதற்காக நேற்று அதிகாலை முதலே தவெக தொண்டர்கள் பனையூரில் திண்டனர். அதோடு, நேரம் செல்ல செல்ல கூட்டம் அதிகமாகி கொண்ட இருந்தது. கட்சி பாதுகாப்பு படையினரின் துணையுடன் தொண்டர்கள், நிர்வாகிகள் கட்சி அலுவலகத்திற்குள் கொஞ்சம், கொஞ்சமாக அனுமதிக்கப்பட்டனர். பகல் 12 மணியளவில் விருப்ப மனுக்கள் விநியோகம் தொடங்கியது. இதில், விஜய் பெயரில் முதல் விருப்ப மனுவை செங்கோட்டையனிடம் இருந்து பொதுச்செயலாளர் ஆனந்த் பெற்றுக்கொண்டார்.

இதையும் படிக்க : விஜய்க்கு அபராதம் விதித்ததில் எந்த விதமீறலும் இல்லை.. ரூ.1.5 கோடி அபராதம் செல்லும்.. உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

பொது தொகுதிக்கு ரூ.10,000:

தொடர்ந்து, விருப்ப மனுக்கள் வரும் 14ம் தேதி வரை வழங்கப்பட உள்ளது. காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை விருப்பமனுக்களை பெற்றுக்கொள்ளலாம். ரூ.100 செலுத்தி விருப்ப மனுக்களை பெற்றுக்கொண்டவர்கள் மனுக்களை நிரப்பி வழங்கும்போது, கட்டண தொகையாக பொது தொகுதிக்கு ரூ.10,000, தனித்தொகுதிக்கு ரூ.5,000 வழங்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் நேற்று ஒரு நாளில் விருப்ப மனு விநியோகம் தொடங்கிய ஒன்றரை மணி நேரத்தில் 10,000 பேருக்கு விருப்ப மனு கொடுக்கப்பட்டுள்ளதாக தவெக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பனையூரில் கூட்ட நெரிசல்:

முன்னதாக, பனையூர் அலுவலகத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிர்வாகிகள் திரண்டதால் பெரும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் காவல்துறைக்குத் தகவல் அளித்தனர். காவல்துறையினர் தலையிட்டும் நிலைமை சீராகாததால், பொதுமக்கள் தவெக அலுவலகம் முன்பு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் காரணமாக, விருப்ப மனு பெற விரும்பும் தொண்டர்கள் ஆன்லைனில் அதனை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தவெக வெளியிட்ட அறிவிப்பு:

தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில், வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிட விரும்பும் கழகத் தோழர்கள், இன்று முதல் கழகத் தலைமை நிலையச் செயலகத்தில் விருப்ப மனுக்களைப் பெற்று, பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கழகத் தலைமை நிலையச் செயலகம் இருக்கும் பகுதியில் உள்ள பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் எவ்வித இட நெருக்கடியும் ஏற்படக் கூடாது என்பதை முழுமையாகக் கவனத்தில் கொண்டுள்ளோம்.

மேலும் படிக்க: அரசியல் கட்சி தலைவருக்கான பிரசார வாகனங்கள் தயார் செய்யும் பணி…என்னென்ன வசதிகள் உள்ளன தெரியுமா!

இணைப்பில் விருப்ப மனு பதிவிறக்கம்:

எனவே, மக்கள் மீது அதிக அக்கறை கொண்ட நம் வெற்றித் தலைவர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, விருப்ப மனுக்களைப் பெறுவதற்காகக் கழகத் தோழர்கள் யாரும் தலைமை நிலையச் செயலகத்திற்கு வர வேண்டாம் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறோம். எனவே, விருப்ப மனு பெற விரும்பும் கழகத் தோழர்கள், பின்வரும் இணைப்பைப் பயன்படுத்தி விருப்ப மனுவைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்படுகிறது. https://drive.google.com/file/d/1Y9PfGCXvzVTbJ6B6S128PKJZE7laWgiK

அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை முழுமையாகப் பூர்த்தி செய்து, உரிய ஆவணங்களை இணைக்க வேண்டும். இவற்றை ஏற்கெனவே குறிப்பிட்ட தேதியான பிப்ரவரி 14ஆம் தேதிக்குள் நேரிலோ, கொரியர் / தபால் மூலமோ அனுப்பலாம் என்று கழகத் தலைவர் அவர்களின் உத்தரவின்படி கேட்டுகொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.