எந்த ஊருடா… வட மாநில பணியாளர் மீது காவலர் தாக்குதல்… வைரலாகும் வீடியோ – அண்ணாமலை கண்டனம்
Migrant Workers Assault Case : ஈரோட்டில் பாஸ்ஃபுட் கடையில் வடமாநில இளைஞர் மீது காவலர் ஒருவர் தாக்குதல் நடத்திய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்த நிலையில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். அதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.
ஈரோடு, பிப்ரவரி 9 : ஈரோடு (Erode) மாவட்டம் காஞ்சிக்கோவில் காவல் நிலைத்தில் கான்ஸ்டபிளாக பணியாற்றி வருபவர் மோகன். இவர் பிப்ரவரி 8, 2026 அன்று வழக்கம் போல ரோந்து பணியில் ஈடுபட்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அப்பகுதியில் செயல்பட்டு வரும் பாஸ்ட்ஃபுட் கடைக்கு சென்று, அங்குள்ள வட மாநில பணியாளர்களிடம் இரவு 10 மணிக்கு மேல் கடை நடத்தக்கூடாது என கூறி கடையை மூட சொல்லியிருக்கிறார். இதனையடுத்து அவர்கள் மறுக்கவே அவர்களிடம் கைடைய மூடுடா என்று ஆக்ரோஷமாக பேசியதுடன் கடையை அடித்து நொறுக்கியிருக்கிறார். அவர்களுக்கு ஆதரவாக இருந்த கடை உரிமையாளரையும் பேசக் கூடாது என மிரட்டியிருப்பதாக கூறப்படுகிறது.
வட மாநில இளைஞர் மீது தாக்குதல் நடத்திய காவலர்
இந்த நிலையில் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த சில மாதங்களாக வட மாநில தொழிலாளர்கள் தொடர்ந்து தாக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்தும் நிலையில் பலரும் காவலரின் செயலை கண்டித்து வருகின்றனர். வைரலான அந்த வீடியோவில் வட மாநில இளைஞரை பார்த்து 10 மணிக்கு மேல் எப்படி கடையைத் திறக்கலாம். கடையை மூடு என வடமாநில தொழிலாளர்களிடம் மிரட்டுகிறார். அப்போது மறுக்கும் வட மாநில இளைஞரை அடிக்க, ஒரு இளைஞர் மேலே எப்படி கை வைக்கலாம் என கேள்வி எழுப்பினார்.
இதையும் படிக்க : டிஎன்பிஎஸ்சி தேர்வு ரத்து விவகாரம்…தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி மீது பாய்ந்த நடவடிக்கை!




இது அந்த காவலுக்கு மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்த நீ எந்த ஊருடா என இழிவாக பேசியதுடன், பஞ்சம் பிழைக்க வந்தவன் என தகாத வார்த்தைகளை பயன்படுத்துகிறார். அதற்கு அதற்கு அந்த இளைஞர். நாங்கள் இந்த கடையில் வேலை பார்க்கிறோம். நீங்கள் ஓனரிடம் பேசுங்கள் என பொறுமையாக பதிலளிக்கிறார். இந்த சம்பவம் கடையில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. தற்போது வைரலாகும் நிலையில் அந்த காவலரை பலரும் கண்டித்து வருகின்றனர்.
அண்ணாமலை கண்டனம்
இந்த நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜாதா, வட மாநில பணியாளரை தாக்கிய காவலரை ஆயுதபடைக்கு இடமாற்றம் செய்து உத்தரவிட்டார். மேலும் அவர் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். இதற்கு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தனது ஃபேஸ்புக் பக்கத்தில், ”காவல்துறைக்கு சட்டத்தை அமல்படுத்தும் அதிகாரம் உண்டு. எந்த சூழ்நிலையிலும் சொத்துக்கலுக்கு சேதம் விளைவிக்கவோ, குறிப்பிட்ட மாநிலங்களில் இருந்து வந்தவர்கள் என்பதற்காக அவர்களை தொந்தரவு செய்யவோ உரிமை இல்லை. இத்தகைய சம்பவங்கள் தமிழக காவல்துறையினராலேயே நடைபெறுவது திமுக அரசின் அலட்சியமே காரணம் என்பதில் ஆச்சரியமில்லை.
இதையும் படிக்க : நாதக-தவெகவினர் கடும் மோதல்…3 பேர் கைது…இருவருக்கு வலை வீச்சு!
தமிழக பொருளாதார வளர்ச்சிக்கு புலம்பெயர் தொழிலாளர்களின் பங்களிப்பு மிக முக்கியமான காரணம். மெட்ரோ ரயில் திட்டங்கள், தேசிய நெடுஞ்சாலைகள், தொழிற்சாலைகள் என தமிழகத்தின் பொருளாதார செயல்பாடுகளின் அடித்தளமாக அவர்களின் உழைப்பு இருக்கிறது. அரசியல் லாபத்திற்காக திமுக கடந்த பல ஆண்டுகளாக புலம்பெயர் தொழிலாளர்களுக்கு எதிராக வெறுப்பதன் காரணமாகவே, இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவதற்கான காரணம்” என்று அவர் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.