Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

“திமுக ஒரு தீய சக்தி.. TVK ஒரு தூய சக்தி” ஈரோட்டில் விஜய் ஆக்ரோஷம்!!

TVK Vijay's aggressive Speech in Erode: தவெக தலைவர் விஜய் இன்றைய ஈரோடு பிரச்சார கூட்டத்தில், ஜெயலலிதா, எம்ஜிஆர் பயன்படுத்தும், "திமுக ஒரு தீய சக்தி" என்ற பதத்தை பயன்படுத்தி அனைவரது கவனத்தையும் பெற்றுள்ளார். அதோடு, தேர்தலுக்கான தீவிர பிரச்சார யுக்தியை அவர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

“திமுக ஒரு தீய சக்தி.. TVK ஒரு தூய சக்தி” ஈரோட்டில் விஜய் ஆக்ரோஷம்!!
தவெக தலைவர் விஜய்
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 18 Dec 2025 14:27 PM IST

ஈரோடு, டிசம்பர் 18: “எம்ஜிஆர், ஜெயலலிதா சொன்னதையே நானும் சொல்கிறேன். திமுக ஒரு தீய சக்தி, TVK ஒரு தூய சக்தி” என்று விஜய் ஆக்ரோஷமாக பேசியுள்ளார். சட்டமன்ற தேர்தலில் தீய சக்தி திமுகவும், தூய சக்தி தவெகவும் மட்டும் தான் போட்டி என்றும் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். ஈரோடு பெருந்துறையில் இன்று நடந்த தவெக பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் , ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் ஆவேசமாக உரையாற்றினார். அவர் பேசியதாவது, 2026 தேர்தலில் களத்தில் இருக்கும் எதிரிகளை மட்டுமே நாங்கள் எதிர்க்கிறோம். களத்தில் இல்லாதவர்களை எதிர்க்க மாட்டோம். நீங்கள் கேட்பதற்காக எல்லாம் களத்தில் இல்லாதவர்களை எதிர்க்க முடியாது. எதிரிகள் யார் என்று சொல்லிவிட்டு களத்திற்கு வந்திருப்பதால் அவர்களை தான் எதிர்ப்போம் என்று திட்டவட்டமாக கூறினார்.

மேலும் படிக்க: “தமிழகத்தை ஆளப்போவது விஜய்”.. செங்கோட்டையன் ஈரோட்டில் பேச்சு!

சலுகைகளுக்கு எதிரானவன் அல்ல:

காஞ்சிபுரம் நிகழ்ச்சியில் நான் பேசியதை தவறாக புரிந்து கொண்டார்கள், மீண்டும் ஒருமுறை விளக்கமளிக்கிறேன். நான் சலுகைகளுக்கு எதிரானவன் இல்லை. மக்களுக்கான சலுகைகளை இலவசங்கள் என்று சொல்லி அசிங்கப்படுவதில் எனக்கு உடன்பாடு இல்லை. மக்கள் காசில் மக்களுக்கு செய்வது எப்படி இலவசமாகும்? மக்களுக்கு ஒன்று என்றல் இந்த விஜய் வந்து நிற்பான். விஜய் எப்போதும் மக்கள் பக்கம் தான். மக்கள் மானத்தோடு வாழ வேண்டும்.

வாடகை வீட்டில் யாரும் இல்லையா?

திமுக ஆட்சியில் அனைவருக்கும் வீடு இருக்க வேண்டும் என கேட்டோம், அனைவருக்கும் கொடுத்திருக்கிறோம் என்று சொன்னார்கள். அனைவரும் சொந்த வீட்டிலேயேவா இருக்காங்க, வாடகை வீட்டில் இல்லையா?. தொடர்ந்து வீட்டில் ஒரு பட்டதாரி இருக்க வேண்டும் என்று கேட்டோம். தமிழ்நாட்டில் பல மாணவர்கள் பள்ளியில் இடைநின்றது திமுக ஆட்சியில் தான் எனவும் அவர் விமர்சித்தார்.

திமுக ஒரு தீய சக்தி:

ஜெயலலிதா, எம்ஜிஆர் ஏன் திமுகவை இப்படி விமர்சிக்கிறார்கள் என்று நினைத்திருக்கிறேன். ஆனால் இப்போதுதான் புரிகிறது. அவர்கள் சொன்னதையே நானும் சொல்கிறேன். திமுக ஒரு தீய சக்தி, தீய சக்தி, தீய சக்தி.. தவெக ஒரு தூய சக்தி.. தீய சக்தி திமுகவுக்கும், தூய சக்தி தவெகவுக்கும் இடையே தான் போட்டியே. மக்கள் விரோத திமுக அரசை வீழ்த்த மக்கள் சக்திமிக்க நம்மால் தான் முடியும் என்றார்.

மேலும் படிக்க: “மக்கள் பணத்தை மக்களுக்கு கொடுப்பது எப்படி இலவசமாகும்?” ஈரோட்டில் விஜய் கேள்வி

கூர்மையான விஜய்யின் விமர்சனம்:

இன்றைய பிரச்சார கூட்டத்தில் அவர் ஜெயலலிதா, எம்ஜிஆர் பயன்படுத்தும், “திமுக ஒரு தீய சக்தி” என்ற பதத்தை பயன்படுத்தி அனைவரது கவனத்தையும் பெற்றுள்ளார். இதுவரை இல்லாத அளவு திமுக மீதான அவரது விமர்சனம் கூர்மையடைந்துள்ளதாகவும், தேர்தலை எதிர்கொள்ள தீவிரமான யுக்தியை கையில் எடுத்துள்ளதாகவும் அரசியல் விமர்சகள் கூறுகின்றனர்.