AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சென்னை-குருவாயூர் ரயிலில் திடீர் புகை? சந்தேகத்தால் அபாய சங்கிலியை இழுத்த பயணி…அடுத்த நடந்த ட்விஸ்ட்!

Chennai- Guruvayur Express Train: சென்னையில் இருந்து புறப்பட்ட குரூவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து ஏற்பட்டதாக எண்ணி பொதுப் பெட்டியில் பயணம் செய்த பயணி ஒருவர் ரயிலின் அபாய சங்கிலியை பிடித்து இழுத்தார். இதைத் தொடர்ந்து, அதிர்ச்சி அளிக்கும் சம்பவம் தெரியவந்தது.

சென்னை-குருவாயூர் ரயிலில் திடீர் புகை? சந்தேகத்தால் அபாய சங்கிலியை இழுத்த பயணி…அடுத்த நடந்த ட்விஸ்ட்!
சென்னை-குருவாயூர் ரயில் Image Source: x
Gowtham Kannan
Gowtham Kannan | Published: 09 Feb 2026 09:33 AM IST

சென்னையில் இருந்து கேரள மாநிலம், குருவாயூருக்கு எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. இந்த ரயிலில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பயணம் செய்து கொண்டிருந்தனர். இந்த ரயிலானது மதுரை மாவட்டம், திருமங்கலம் ரயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தபோது, ரயிலின் பெட்டிக்குள் புகை கிளம்பியதாக கூறப்படுகிறது. இதனால், அதிர்ச்சி அடைந்த பயணிகளில் ஒருவர் திடீரென அபாய சங்கிலியை பிடித்து இழுத்தார். இதனால், ரயிலில் ஏதோ அசம்பாவிதம் ஏற்பட்டதாக கருதி, ரயிலை அதன் ஓட்டுனர் நிறுத்தினார். இதனால், நடு காட்டுப் பகுதியில் சென்னை- குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் நின்றது. இதைத் தொடர்ந்து, ரயில்வே ஓட்டுநர் மற்றும் கார்டு ஆகியோர் சம்பந்தப்பட்ட ரயில் பெட்டிக்கு வந்து பயணிகளிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அபாய சங்கிலியை பிடித்து இழுத்த பயணியிடம் விசாரணை மேற்கொண்டதில், அவர் அதிர்ச்சி அளிக்கும் காரணத்தை தெரிவித்தார்.

ரயிலில் புகை வருவதாக நினைத்து ஆபாய சங்கிலி இழுப்பு

இதில், அந்த பயணி பொதுப் பெட்டியில் பயணம் செய்து கொண்டிருந்த போது, ரயிலின் இன்ஜினில் தீ விபத்து ஏற்பட்டு புகை வருவதாக நினைத்து ரயிலின் அபாய சங்கலியை பிடித்து இழுத்ததாக கூறினார். அப்போது, எஞ்சின் பகுதியில் எந்த தீ விபத்தும் நிகழவில்லை என்று ரயில்வே ஓட்டுநர் மற்றும் ஊழியர்கள் உறுதிப்படுத்தினர். இதன் பின்னர் மேற்கொண்ட விசாரணையில், ரயில் தண்டவாளத்தின் அருகே குவித்து வைக்கப்பட்டிருந்த ஜல்லி கற்களில் இருந்து, ரயில் வந்த வேகத்தில் அதிர்வின் காரணமாக தூசி புகை கிளம்பியதை பார்த்து அந்த பயணி அபாய சங்கலியை பிடித்து இழுத்தது தெரியவந்தது.

மேலும் படிக்க: ஐ.டி.யில் வேலை கிடைக்காத விரக்தி…உடலில் பாதரசத்தை செலுத்திய இளைஞர்…அடுத்து நடந்த விபரீதம்!

மதுரை ரயில்வே போலீசார் விசாரணை

சென்னை- குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் திருமங்கலம் ரயில் நிலையத்தில் நிற்காமல் செல்லக்கூடிய ரயிலாகும். ஆனால், எதிர்பாரா விதமாக நேற்று ரயில் திடீரென நின்றதால், பயணிகள் மற்றும் ரயில்வே ஊழியர்கள் சந்தேகம் அடைந்தனர். இதைத் தொடர்ந்து, ரயில் சுமார் 15 நிமிடம் தாமதமாக அங்கிருந்து புறப்பட்டு சென்றது. இந்த சம்பவம் தொடர்பாக மதுரை ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பயணிகள் மத்தியில் அதிர்ச்சி

இதில், வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். பொது மக்கள் மத்தியில் பிரபலமான இந்த ரயிலில் தீ விபத்து ஏற்பட்டதாக நினைத்து ரயிலின் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்திய சம்பவம் பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதுடன், அவர்களும் விசாரித்து வருகின்றனர்.

மேலும் படிக்க: சென்னையில் அதிகளவு பனி மூட்டத்துக்கு காரணம் என்ன…வானிலை மையம் விளக்கம்!

Follow Us