சென்னையில் கூடுதலாக 245 மின்சார பேருந்துகள்..எப்போது இயக்கப்படுகிறது தெரியுமா…வெளியான குட் நியூஸ்!
Chennai Electric Buses: சென்னையில் கூடுதலாக 245 மின்சார பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இதற்கான முன்னேற்பாட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், இந்த பேருந்துகள் இந்த மாத இறுதிக்குள் பொது மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
சென்னையில் கடந்த 2025- ஆம் ஆண்டு ஜூன் மாதம் மின்சார பேருந்து சேவை தொடங்கப்பட்டது. இந்த பேருந்துகளானது முதல் முதலாக வியாசர்பாடி பணி மனையில் இருந்து இயக்கப்பட்டு வருகிறது. இதை தொடர்ந்து, பூவிருந்தவல்லி, பெரும்பாக்கம் ஆகிய பேருந்து பணிமனைகளில் இருந்து மின்சார பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னையில் மொத்தம் 625 மின்சார பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, தற்போது வரை 380 மின்சார பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில், 225 மின்சார பேருந்துகள் குளிரூட்டப்பட்டவை ஆகும். இதைத் தொடர்ந்து, அடுத்த கட்டமாக பல்லவன் இல்லம் பணிமனையில் இருந்து 145 மின்சார பேருந்துகள் இயக்குவதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதே போல, தண்டையார்பேட்டை பேருந்து பணிமனையில் இருந்து சுமார் 100 மின்சார பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
மின்சார பேருந்துகளுக்கு மக்களஅ வரவேற்பு
மின்சார பேருந்துகளுக்கு ஆரம்பம் முதலே தற்போது வரை பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அதன்படி, தினந்தோறும் இந்த மின்சார பேருந்துகளில் சுமார் இரண்டு லட்சம் பேர் பயணம் செய்து வருகின்றனர். தற்போது வரை 225 குளிர் சாதன வசதி உடைய சொகுசு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன. கூடுதலாக 100 குளிர்சாதன வசதி உடைய சொகுசு பேருந்துகள் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க: மதுரை அதிமுக பிரமுகர் கொலைக்கு இதுதான் காரணம்…போலீசார் பரபரப்பு விளக்கம்!




குளிர்சாதன வசதியில்லாத 3 ஆயிரம் பேருந்துகள்
இது தொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், சென்னையில் மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் குளிர்சாதன வசதி இல்லாத சுமார் 3 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இதில், ஒரு பகுதியாக சுமார் 1000 மின்சார பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், அடுத்தடுத்த கட்டமாக குளிர்சாதன வசதி உடைய சொகுசு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. டபுள் டக்கர் 20 குளிர்சாதன வசதி உடைய பேருந்துகள் இயக்கப்படுவதற்கான ஒப்பந்தம் இறுதி செய்யப்பட உள்ளது. அதன்படி, இந்த ஒப்பந்தம் பணிகள் முடிக்கப்பட்டு வருகிற ஏப்ரல் அல்லது ஜூன் மாதத்தில் இந்த பேருந்துகள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.
இந்த மாத இறுதிக்குள் மின்சார பேருந்து வசதி
முதல் கட்டமாக இந்த மாத இறுதிக்குள் மின்சார பேருந்து வசதி முழுமையாக பயன்பாட்டுக்கு வர உள்ளது. இதைத் தொடர்ந்து, 2- ஆவது கட்டமாக 600 மின்சார பேருந்துகள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். இதற்கு ஏற்றவாறு பொதுமக்கள் தங்களது பயணத்தை மாற்றி வருகின்றனர். கூட்ட நெரிசலில் பயணம் மேற்கொள்வதை தவிர்த்து, வசதியாகவும், சொகுசாகவும் பயணம் செய்வதை பொதுமக்கள் விரும்புகின்றனர். இதன் காரணமாக எதிர்வரும் காலங்களில் குளிரூட்டப்பட்ட மின்சார பேருந்துகளில் பயன்பாடு அதிகரிக்கும் என்று கூறினார்.
மேலும் படிக்க: பறவை காய்ச்சல் எதிரொலி..பண்ணைகளில் கால்நடைத்துறை எடுத்த அதிரடி நடவடிக்கை!