அதிகாலையில் கொட்டும் பனி.. எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? வானிலை அப்டேட் இதோ!!
TN Weather Update: தொடர்ந்து நாளை (பிப்ரவரி 08) தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். வட தமிழக கடலோர மாவட்டங்கள், நீலகிரி, திண்டுக்கல், சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர் மற்றும் ராணிபேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் மிதமான பனிமூட்டம் காணப்படும்.
சென்னை, பிப்ரவரி 07: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திகுறிப்பில், குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. லட்சதீவு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தென் தமிழக கடலோர மாவட்டங்களில் நேற்றைய தினம் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்தது. இதர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது. எனினும், அதிகாலை வேளையில், பல மாவட்டங்களில் பனிமூட்டம் நீடிக்கிறது.
இதையும் படிக்க : விஜய்க்கு அபராதம் விதித்ததில் எந்த விதமீறலும் இல்லை.. ரூ.1.5 கோடி அபராதம் செல்லும்.. உயர்நீதிமன்றம் தீர்ப்பு!
இன்றைய வானிலை நிலவரம்:
அந்தவகையில், இன்று (பிப்ரவரி 07) தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். வட தமிழக கடலோர மாவட்டங்கள், நீலகிரி, திண்டுக்கல், சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிபேட்டை மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் மிதமான பனிமூட்டம் காணப்படும் என்று தெரிவித்துள்ளது.
தொடர்ந்து நாளை (பிப்ரவரி 08) தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். வட தமிழக கடலோர மாவட்டங்கள், நீலகிரி, திண்டுக்கல், சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர் மற்றும் ராணிபேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் மிதமான பனிமூட்டம் காணப்படும்.
09-02-2026 மற்றும் 10-02-2026: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். நீலகிரி, திண்டுக்கல், சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர் மற்றும் ராணிபேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் மிதமான பனிமூட்டம் காணப்படும் என்று கூறியுள்ளது.
இதையும் படிக்க : சேலத்தில் விஜய் பிரச்சார கூட்டம் நடத்துவதில் சிக்கல்.. தவெகவினர் மனு நிராகரிப்பு
24 மணி நேர அதிகபட்ச வெப்பநிலை மாறுதல்:
வரும் பிப்ரவரி 10ம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 1-2° செல்சியஸ் வரை படிப்படியாக உயரக்கூடும். அதேபோல், பிப்.10ம் தேதி வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 1-2° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும் என்று கணித்துள்ளது.
சென்னை வானிலை நிலவரம்:
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் மிதமான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30-31° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 21° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.