AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

திமுக கூட்டணியில் இருந்து விசிக வெளியேறும்…திருமாவளவன் வீசிய குண்டு..பாமகவை குறிப்பிட்டு பேசியதென்ன!

Thol Thirumavalavan Latest Pressmeet: திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி வெளியேறும் என்று அந்தக் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். இந்த கருத்தில் ராமதாஸ் தரப்பிலான பாட்டாளி மக்கள் கட்சியை குறிப்பிட்டு சில கருத்துக்களை முன்வைத்துள்ளார்.

திமுக கூட்டணியில் இருந்து விசிக வெளியேறும்…திருமாவளவன் வீசிய குண்டு..பாமகவை குறிப்பிட்டு பேசியதென்ன!
திமுக கூட்டணியில் இருந்து விசிக வெளியேறும்
Gowtham Kannan
Gowtham Kannan | Published: 07 Feb 2026 11:50 AM IST

திமுக கூட்டணியில் பாமகவை இணைத்தால் அந்த கூட்டணியில் இருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி வெளியேறும் என்று கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்தார். இது தொடர்பாக, அவர் பிரத்தியேகமாக அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: பாரதீய ஜனதா கட்சி சிறுபான்மையினருக்கு எதிரான ஜாதி அரசியல், வெறுப்பு அரசியலை செய்து வருகிறது. பாட்டாளி மக்கள் கட்சி தலித் மக்களுக்கு எதிராக ஜாதி அரசியல், வெறுப்பு அரசியலை செய்து வருகிறது. சோசியல் இன்ஜினியரிங் என்ற யுக்தியை கையாண்ட காரணத்தினால் நாங்கள் தெளிவான முடிவில் உள்ளோம். சமூகங்களுக்கு இடையில் வெறுப்பை விதைத்து, பிரிவினையை உருவாக்கும் இந்த 2 கட்சிகளோடு எந்த காலத்திலும் கூட்டணி வைக்க மாட்டோம். இந்த கட்சிகள் இடம் பெறக்கூடிய அணியிலும் இடம் பெற மாட்டோம் என்ற முடிவை ஏற்கனவே நாங்கள் எடுத்து விட்டோம். இந்த முடிவை எடுக்கும் அதிகாரம் எங்களுக்கு உள்ளது.

திமுக கூட்டணியில் இருந்து விசிக வெளியேறும்

ஆனால், ராமதாஸ் தலைமையிலான பாமகவை கூட்டணியில் இணைக்க வேண்டாம் என்று திமுகவுக்கு அழுத்தம் கொடுக்க முடியாது. எனவே, திமுக எடுக்கும் நிலைப்பாடு எங்களுக்கு எதிராக இருந்தால் அந்த கூட்டணியில் இருந்து வெளியேறுவதை தவிர வேறு எந்த வழியும் இல்லை. இதில் நாங்கள் எந்த சமரசமும் செய்து கொள்ளவில்லை. இதற்கு காரணம் அவ்வப்போது நடைபெறும் தேர்தலுக்காக எங்களது நிலைபாட்டை மாற்றிக் கொள்ளக் கூடாது.

மேலும் படிக்க: தவெக விருப்ப மனு பெற போட்டா போட்டி.. முதல் நாளிலேயே 10 ஆயிரம் பேர் வாங்கினர்..

கருத்தியல் பயணத்தில் நம்பக தன்மை வளர்க்க வேண்டும்

நம்முடைய கருத்தியல் சார்ந்த பயணத்தில் நம்பகத் தன்மையை வளர்த்தெடுக்க வேண்டும். நம்பகத்தன்மையை பாதுகாக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார். பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் ஒரு காலத்தில் தவிர்க்க முடியாத தலைவராக இருந்து வந்தார். தற்போது, அவர் அனைத்து கட்சிகளும் தள்ளுபடி செய்யப்பட்ட தலைவராக மாறியுள்ளார். தற்போது, அவரது ஒரே வேலை அன்புமணி தரப்பிலான பாமகவின் வேட்பாளர்களுக்கு எதிராக போட்டி வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெற விடாமல் தடுப்பது மட்டுமே ஆகும்.

திமுக கூட்டணியில் பாமகவுக்கு இடமில்லை

தற்போது, தேசிய ஜனநாயக கூட்டணியில் அன்புமணி தரப்பிலான பாமக இணைந்துள்ளது. இதனால், ராமதாஸ் தரப்பிலான பாமக அந்த கூட்டணியில் இணையாது என்ற கருத்துக்கள் பரப்ப பட்டு வந்தன. இதனால், ராமதாஸுக்கு திமுக கூட்டணி மட்டுமே ஒரே தேர்வாக இருந்தது. ஆனால், தற்போது விடுதலை சிறுத்தைகள் கட்சியை எடுத்த இந்த அதிரடி முடிவால், அந்த கூட்டணியின் கதவும் அடைக்கப்பட்டு இருப்பதாக தெரிகிறது. இதனால், ராமதாஸ் தரப்பிலான பாமக, திமுக கூட்டணியில் இணைய வாய்ப்பு இல்லை என்றே கூறப்படுகிறது.

மேலும் படிக்க: திமுகவிற்கு 2.0 இல்லை.. பூஜ்ஜியம் தான் கிடைக்கும் – எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்..

Follow Us