AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

விருதுநகரின் இன்று திமுக இளைஞரணியின் தென்மண்டல மாநாடு.. முக்கிய அறிவிப்புகளை வெளியிடும் ஸ்டாலின்?

DMK Youth Wings Southern Regional Conference: இப்போது இந்த இயக்கத்தை இளைஞர்களிடம் கொண்டு சேர்க்கும் பணியை தமிழ்நாடு உதயநிதி சிறப்பாக செய்து கொண்டிருக்கிறார். திமுகவின் மீது எப்போதும் வன்மத்தோடு இருக்கும் எதிரிகள் என்ன கட்டமைத்தார்கள்? இளைஞர்கள் இனி திமுகவுக்கு வருவார்களா? என்று சந்தேகம் எழுப்புவது போன்று, தங்களுடைய ஆசைகளை வெளிப்படுத்திக்கொண்டு இருந்தார்கள்.

விருதுநகரின் இன்று திமுக இளைஞரணியின் தென்மண்டல மாநாடு.. முக்கிய அறிவிப்புகளை வெளியிடும் ஸ்டாலின்?
திமுக இளைஞரணியின் தென்மண்டல மாநாடு
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 07 Feb 2026 07:51 AM IST

விருதுநகர், பிப்ரவரி 07: விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே கல்குறிச்சியில், கலைஞர் திடலில் திமுக தென்மண்டல இளைஞர் அணி மாநாடு இன்று (பிப்.07) மாலையில் நடக்க இருக்கிறது. இதற்காக பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொண்டு பேசுகின்றனர். குறிப்பாக இந்த கூட்டத்தில் என்ன பேசப்போகிறேன் என்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் வீடியோ ஒன்றையும் வெளியிட்டு எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளார். அதில், திமுக இளைஞரணி தொடங்கப்பட்டதன் காரணம் குறித்து விளக்கியுள்ளார்.

இதையும் படிக்க : விஜய்க்கு அபராதம் விதித்ததில் எந்த விதமீறலும் இல்லை.. ரூ.1.5 கோடி அபராதம் செல்லும்.. உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

முதல்வர் வெளியிட்ட வீடியோ:

1980-ம் ஆண்டு, நாங்கள் இளைஞர்களாக இருந்தபோது தொடங்கப்பட்ட அணி, இளைஞரணி. 1949-ம் ஆண்டில் இளைஞர்களால் தொடங்கப்பட்ட திமுக என்ற இந்த இயக்கத்தின் அடுத்த தலைமுறையாக, மீண்டும் இளைஞர்களிடம் திமுகவை கொண்டு சேர்க்க இந்த அணியைத் தொடங்கினோம். அன்றைக்கு என்னுடன் களத்தில் நின்று கட்சியை வளர்த்த இளைஞர்கள் தான், இன்றைக்கு உங்கள் முன்னால் அமைச்சர்களாக, எம்எல்ஏக்களாக, எம்.பிக்களாக, மாவட்ட செயலாளர்களாக பல்வேறு பொறுப்புகளில் இருக்கிறார்கள்.

உதயநிதி ஸ்டாலினுக்கு பாராட்டு:

எங்களுக்கு அடுத்து, இப்போது இந்த இயக்கத்தை இளைஞர்களிடம் கொண்டு சேர்க்கும் பணியை தமிழ்நாடு உதயநிதி சிறப்பாக செய்து கொண்டிருக்கிறார். திமுகவின் மீது எப்போதும் வன்மத்தோடு இருக்கும் எதிரிகள் என்ன கட்டமைத்தார்கள்? இளைஞர்கள் இனி திமுகவுக்கு வருவார்களா? என்று சந்தேகம் எழுப்புவது போன்று, தங்களுடைய ஆசைகளை வெளிப்படுத்திக்கொண்டு இருந்தார்கள். அதையெல்லாம் உடைத்து தம்பி உதயநிதி, இளைஞரணிக்கு இன்றைக்கு தமிழ்நாடு முழுவதும் 5 லட்சம் நிர்வாகிகளை நியமித்து, சாதனை செய்திருக்கிறார்.

மற்ற கட்சிகளின் ப்ளூ ப்ரிண்ட்:

இது போதாது என்று, மண்டல அளவில் இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு என்று பெயரில் மாநாடுகளை நடத்துகிறார். ஏற்கனவே, திருவண்ணாமலையில் ஒன்றரை லட்சம் நிர்வாகிகள் கூட்டி, வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு மாநாட்டை நடத்திவிட்டார். 5 லட்சம் நிர்வாகிகளை ஒரு கட்சியின் துணை அமைப்பில் நியமித்து வேலை செய்வதைப் பார்த்தால், மற்ற கட்சிகள் அனைத்தும் பின்பற்றும் ‘ப்ளூ ப்ரிண்டை’ திமுக இளைஞரணி தான் கொடுக்கப்போகிறது’ என்று நினைக்கிறேன் என்று அவர் பேசியுள்ளார்.

1 லட்சம் நிர்வாகிகள் பங்கேற்பு:

இதுகுறித்து விருதுநகர் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், அமைச்சருமான தங்கம் தென்னரசு நிருபர்களிடம் கூறியதாவது, திமுக தென் மண்டலத்தில் திண்டுக்கல் முதல் கன்னியாகுமரி வரை உள்ள 10 வருவாய் மாவட்டங்கள், திமுக அமைப்பு ரீதியாக 20 மாவட்டங்கள் மற்றும் 58 சட்டமன்ற தொகுதிகளில் இருந்து ஒன்றியம், நகரம், பகுதி, பேரூர், கிளை, வார்டு, பூத் அளவிலான அனைத்து நிலை இளைஞரணி நிர்வாகிகளுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் தகுதியான சுமார் 1 லட்சம் நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்க உள்ளனர்.

இதையும் படிக்க : சேலத்தில் விஜய் பிரச்சார கூட்டம் நடத்துவதில் சிக்கல்.. தவெகவினர் மனு நிராகரிப்பு

முக்கிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு:

தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள நெறிமுறைகள் மற்றும் அரசாணைகளை முழுமையாக பின்பற்றி உரிய துறைகளிடமிருந்து அனைத்து அனுமதிகளும் பெறப்பட்டுள்ளன. குறிப்பாக பாதுகாப்பு ஏற்பாடுகள், வாகனம் நிறுத்தும் வசதி, உணவு, குடிநீர், கழிவறைகள், ஒலி-ஒளி அமைப்புகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன. ஏற்பாட்டு பணிகளை அனைத்து மாவட்ட செயலாளர்கள், அமைச்சர்கள், இளைஞரணி நிர்வாகிகள் இணைந்து செய்து வருகின்றனர். சட்டமன்ற தேர்தலையொட்டி மிக முக்கியமான அறிவிப்புகள் இந்த மாநாட்டில் வெளியாக வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Follow Us