AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Tamil Nadu Weather Alert: உஷார் மக்களே.. இந்த 3 மாவட்டங்களுக்கு இன்று அதி கனமழை எச்சரிக்கை!!.. வானிலை மையம் கொடுத்த அலர்ட்!!

Weather Today: தமிழகத்தில் இன்று 3 மாவட்டங்களுக்கு, மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் (Orange Alert) விடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, இன்று தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளது. இதுபற்றிய மேலும் நிலவரம் குறித்தும் காணலாம்.

Tamil Nadu Weather Alert: உஷார் மக்களே.. இந்த 3 மாவட்டங்களுக்கு இன்று அதி கனமழை எச்சரிக்கை!!.. வானிலை மையம் கொடுத்த அலர்ட்!!
மாதிரி புகைப்படம்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 21 Oct 2026 06:20 AM IST

சென்னை, அக்.21: தமிழகத்தில் இன்று தூத்துக்குடி, நெல்லை, குமரி ஆகிய 3 மாவட்டங்களில் அதி கனமழை பெய்யக்கூடும் என்றும், நீலகிரி, கோவை உள்ளிட்ட 19 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திகுறிப்பில், வட தமிழகக் கடலோரத்துக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதியின் மேல், சுமார் 5.8 கி.மீ. உயரம் வரை ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதிலிருந்து வடமேற்கு வங்கக்கடல் வரை, 1.5 முதல் 3.1 கி.மீ. உயரத்தில் ஒரு காற்றழுத்தத் தாழ்வுப் பாதையும் நீண்டுள்ளது. இதன் காரணமாக அடுத்த சில நாட்களுக்கு தமிழகத்தில் பரவலாக கனமழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: சைபர் புல்லியிங் குற்றச்சாட்டு: பிரபல இன்ஸ்டாகிராம் நிதி ஆலோசகர் ஹரிஷ் தற்கொலை – யூடியூபர் மீது தந்தை புகார்!

இன்று கனமழைக்கு வாய்ப்பு:

அந்தவகையில் இன்று (அக்.21) தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கன முதல் மிக கன மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், நாமக்கல், கரூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவையிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

நாளையும் கனமழைக்கு வாய்ப்பு:

தொடர்ந்து, நாளை (அக்.22) தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஒரிரு இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை, அரியலூர், கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

வரும் நாட்களில் மழை நிலவரம்:

அதனைத்தொடர்ந்து, நாளை மறுநாள் (அக்.23) நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, தேனி, தென்காசி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மற்றும் அரியலூர், கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்யக்ககூடும். அக்.24ம் தேதி நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, திருச்சிராப்பள்ளி, திருவண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, மதுரை, திண்டுக்கல், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, சிவகங்கை, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.

மேலும், அக்.25ம் தேதி திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள், கன்னியாகுமரி, நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, தென்காசி, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, திருவண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை., மதுரை, திண்டுக்கல், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்யக்கூடும்.

அதிகபட்ச வெப்பநிலை நிலவரம்:

வரும் அக்.24ம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு. அதோடு, வெப்பநிலை இயல்பை ஒட்டி இருக்கக்கூடும்.

இதையும் படிக்க: ஆளுநர் மாளிகை முதல் முதல்வர் வீடு வரை வெடிகுண்டு மிரட்டல்.. 34 வழக்குகளில் தொடர்புடைய தமிழக இளைஞர்.. கேரள போலீஸ் அதிரடி கைது!

சென்னை வானிலை நிலவரம்:

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை, இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us