AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

சிங்கப்பூர் அதிபரின் இறுதி நிகழ்வில் ஒலிக்கப்பட்ட தேவா பாடல் – நெகிழ்ச்சி சம்பவம்

Singapore President Deva Connection : தமிழ்த் திரையுலகில் பிரபல இசையமைப்பாளரான தேனிசைத் தென்றல் தேவா அக்டோபர் 17, 2026 இன்று காலமானார். இந்த நிலையில் தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளரான தேவாவின் பாடல் சிங்கப்பூர் அதிபரின் இறுதி அஞ்சலியின் போது ஒலிக்கப்பட்ட சம்பவம் ரசிகர்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிங்கப்பூர் அதிபரின் இறுதி நிகழ்வில் ஒலிக்கப்பட்ட தேவா பாடல் – நெகிழ்ச்சி சம்பவம்
இசையமைப்பாளர் தேவா
Karthikeyan S
Karthikeyan S | Published: 17 Oct 2026 15:40 PM IST

தமிழ்த் திரையுலகில் பிரபல இசையமைப்பாளரான தேனிசைத் தென்றல் தேவா அக்டோபர் 17, 2026 இன்று காலமானார். 76 வயதான இசையமைப்பாளர் தேவாவுக்கு (Music Director Deva) அக்டோபர் 17, 2026 இன்று காலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டு, சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தேவாவின் ரசிகரான சிங்கப்பூர் அதிபர்

தேவாவின் இசைக்கு ஒரு நாட்டின் அதிபரே ரசிகராக இருந்தார் என்பது பலருக்கும் தெரியாத சுவாரசியமான தகவல். சிங்கப்பூரின் மறைந்த முன்னாள் அதிபர் எஸ்.ஆர். நாதன் இசையமைப்பாளர் தேவாவின் பாடலுக்கு மிகப் பெரிய ரசிகராக இருந்துள்ளார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தமிழரான செல்லப்பன் ராமநாதன் எனப்படும் எஸ்.ஆர். நாதன் சிங்கப்பூரின் 6வது அதிபராக 1999 ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரை பதவி வகித்தார். சிங்கப்பூரின் வரலாற்றில் மிக நீண்ட காலம் அதிபராக இருந்தவர் என்ற பெருமைக்குரியவர்.

இதையும் படிக்க : ராசாத்தி ஒன் நெனப்பு கருவக்காட்டு முள்ளாச்சுடி… ஒரு ஆண்டை நிறைவு செய்தது துருவ் விக்ரமின் பைசன் காளமாடன் படம்!

தேவாவின் பாடல்கள் மீது தீராத பற்று கொண்டிருந்த நாதன், தான் இறந்த பிறகு தேவா இசையமைத்த ‘தஞ்சாவூர் மண்ணெடுத்து’ பாடலை ஒலிக்கச் செய்ய வேண்டும் என்ற தனது விருப்பத்தை வெளிப்படுத்தியிருந்தார். சேரன் இயக்கத்தில் முரளி, மீனா நடித்த ‘பொற்காலம்’ திரைப்படத்தில் இடம்பெற்ற படத்தில் அந்தப் பாடல் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2016 ஆம் ஆண்டு தனது 92வது வயதில் எஸ்.ஆர். நாதன் காலமானார். அவரது விருப்பப்படியே, உலகத் தலைவர்கள் பங்கேற்ற சிங்கப்பூர் அரசின் அதிகாரப்பூர்வ இறுதி நிகழ்வில் தேவாவின் தஞ்சாவூர் மண்ணெடுத்து’ பாடல் ஒலிக்கப்பட்டது. ஒரு நாட்டின் அதிபருக்கான அரசு இறுதி நிகழ்வில் தமிழ் இசையமைப்பாளர் ஒருவரின் பாடல் ஒலித்தது, தமிழ்த் திரையிசை வரலாற்றில் அரிதான பெருமை. அந்த அளவுக்குத் தன் இசையால் எல்லைகளைக் கடந்து ரசிகர்களைக் கவர்ந்த தேவாவின் மறைவு, தமிழ்த் திரையிசைத் துறைக்குப் பேரிழப்பாகும்.

இசையுலகுக்கு ஆற்றிய சேவையைச் சிறப்பிக்கும் வகையில், தேவாவின் உடலுக்கு அரசு மரியாதை வழங்கப்படும் எனத் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. தேவாவின் சொந்த ஊரான ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில் நாளை மதியம் 1 மணிக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடைபெறும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆற்காடு அருகே உள்ள மாங்காடு பகுதியில் நாளை இறுதிச் சடங்கு நடைபெறும் என அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.

இதையும் படிக்க: அனிருத் – காவ்யா மாறன் திருமணம்… முதலமைச்சர் விஜய்க்கு நேரில் அழைப்புவிடுத்த கலாநிதிமாறன் – வைரலாகும் போட்டோஸ்!

முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி

சென்னையில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள தேவாவின் உடலுக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி செலுத்தினார்.  அப்போது தேவாவின் மகனும் இசையமைப்பாளருமான ஸ்ரீகாந்த் தேவா உள்பட அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். தேனிசைத் தென்றல் தேவாவின் இசைப் பயணமும், பாடல்களும் திரையிசை வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும் என்றும், அவரை இழந்துவாடும் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல் என்றும் முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.

Follow Us