சென்னையில் விடிய விடிய மழை.. இன்று 6 மாவட்டங்களுக்கு ஆர்ஞ்சு அலர்ட்.. வானிலை ரிப்போர்ட்..
Rainfall Alert: அக்டோபர் 17ஆம் தேதியான இன்று நீலகிரி, கோயம்புத்தூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதன் காரணமாக, இந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 17, 2026: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குறிப்பாக, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட வட மாவட்டங்களில் பல மாதங்களாக மழையின்றி வறண்ட வானிலை நிலவி வந்த சூழலில், கடந்த இரண்டு நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருவது பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அடுத்த சில நாட்களுக்கும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை:
அந்த வகையில், அக்டோபர் 17ஆம் தேதியான இன்று நீலகிரி, கோயம்புத்தூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதன் காரணமாக, இந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல், சென்னை, செங்கல்பட்டு, தேனி, திண்டுக்கல், மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, திருப்பூர், வேலூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், ராமநாதபுரம், திருச்சி, நாமக்கல், கடலூர், கரூர், பெரம்பலூர் மற்றும் அரியலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 18ஆம் தேதி மழை முன்னறிவிப்பு
நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசும் பலத்த காற்றுடன் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.
கோயம்புத்தூர், ஈரோடு, நாமக்கல், ராணிப்பேட்டை, திருவள்ளூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. ஏனைய தமிழக மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
அக்டோபர் 19ஆம் தேதி: 2 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.
ஈரோடு, நாமக்கல், திருவண்ணாமலை, திருப்பூர், மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை மற்றும் கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. ஏனைய தமிழக மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும்.
மேலும் படிக்க: ரூ.100 கோடி போதைப்பொருள் கடத்தலில் கைது.. தவெக நற்பெயருக்கு களங்கம்.. நாகை ஒன்றிய செயற்குழு உறுப்பினர் நீக்கம்!
அக்டோபர் 20ஆம் தேதி: சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழை
நீலகிரி, கோயம்புத்தூர், திருவள்ளூர் மற்றும் சென்னை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.
திருப்பூர், மதுரை, ஈரோடு, நாமக்கல், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, சிவகங்கை, திண்டுக்கல், திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. ஏனைய தமிழக மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும்.
அக்டோபர் 21ஆம் தேதி: நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, நாமக்கல், சேலம் மற்றும் கரூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும்.
அக்டோபர் 22ஆம் தேதி: 6 மாவட்டங்களில் கனமழை
நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல் மற்றும் மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசும் பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும்.
மேலும் படிக்க: தனுஷ்- சிவகார்த்திகேயன் அரசியல் பக்கமே வந்துராதீங்க.. மீறி வந்தால் செஞ்சிருவோம்.. தவெக பெண் விசிறி விடுத்த வார்னிங்!
சென்னையில் தொடரும் மழை:
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரையில், இன்று (அக்டோபர் 17) வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழையும், அவ்வப்போது கனமழையும் பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32 முதல் 33 டிகிரி செல்சியஸ் வரையிலும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 முதல் 26 டிகிரி செல்சியஸ் வரையிலும் இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.