AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

மது போதையில் முற்றிய வாக்குவாதம்.. இரண்டு குழந்தைகளின் தந்தை நண்பரால் வெட்டி கொடூரக் கொலை!!

Kamuthi Murder Case: ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே நண்பர்களுடன் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில் தனியார் பள்ளி வாகன ஓட்டுநர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலையில் தொடர்புடைய நண்பர் சூரியபிரகாஷைக் கமுதி காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மது போதையில் முற்றிய வாக்குவாதம்.. இரண்டு குழந்தைகளின் தந்தை நண்பரால் வெட்டி கொடூரக் கொலை!!
உயிரிழந்த அருண்குமார்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 17 Oct 2026 13:38 PM IST

ராமநாதபுரம், அக்.17: நட்பு வட்டத்தில் ஏற்படும் சிறிய அளவிலான மோதல்களும் கருத்து வேறுபாடுகளும் சில நேரங்களில் எதிர்பாராத விபரீதங்களில் முடிவது சமூகத்தில் பெரும் கவலையை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில், விடுமுறைநாளில் தனது உறவினரைப் பார்ப்பதற்காக ராமநாதபுரம் மாவட்டத்திற்குச் சென்ற தனியார் பள்ளி வாகன ஓட்டுநர் ஒருவர், அங்கு நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தியபோது ஏற்பட்ட வாய் தகராறில் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். மது போதையில் முற்றிய வாக்குவாதம் விபரீத முடிவை எட்டியுள்ள இச்சம்பவம், விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் மாவட்ட மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இக்கொலைச் சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த கமுதி காவல்துறையினர் உடனடியாகத் தீவிர விசாரணை மேற்கொண்டு, குற்றவாளியைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.

இதையும் படிக்க: “தவெகவில் எத்தனை லியோ தாஸ், பவுடர் சரத்கள் இருக்கிறார்கள்?”.. முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் சரமாரி கேள்வி!

கொலைக்கான பின்னணியும் மது விருந்தும்:

விருதுநகர் மாவட்டம் மண்டபசாலை அடுத்துள்ள கானாவிளக்கு பகுதியைச் சேர்ந்தவர் 41 வயதான அருண்குமார். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் வாகன ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள கல்லுப்பட்டி கிராமத்தில் வசிக்கும் தனது பெரியப்பாவைப் பார்ப்பதற்காகச் செல்வதாகக் கூறிவிட்டு மனைவியிடம் விடைபெற்றுச் சென்றுள்ளார். கல்லுப்பட்டியை அடைந்த அவர், அங்கு வசிக்கும் தனது நண்பரான சூரியபிரகாஷ் மற்றும் சில நண்பர்களைச் சந்தித்துள்ளார். அனைவரும் சேர்ந்து அப்பகுதியில் ஒன்றாக மது அருந்தியுள்ளனர். அப்போது அருண்குமார் மற்றும் சூரியபிரகாஷ் இடையே திடீரென கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. உடனே அங்கிருந்த மற்ற நண்பர்கள் இருவரையும் சமாதானப்படுத்தி, அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

வீட்டிற்குத் தேடிச் சென்று கொல்லப்பட்ட ஓட்டுநர்:

நண்பர்களின் சமாதானத்தால் தற்காலிகமாக விலகிய பிரச்சாரம், சற்று நேரத்தில் மீண்டும் வெடித்துள்ளது. மது போதையின் தாக்கத்திலிருந்த அருண்குமார், மீண்டும் சூரியபிரகாஷின் வீட்டுக்கே தேடிச் சென்று அவருடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஆத்திரத்தின் உச்சத்திற்குச் சென்ற சூரியபிரகாஷ், தான் மறைத்து வைத்திருந்த அறிவாளால் அருண்குமாரைக் கண்மூடித்தனமாகச் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் பலத்த வெட்டுக்காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் சரிந்த அருண்குமாரைக் கண்டு குடும்பத்தினரும் உறவினர்களும் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக கல்லுப்பட்டியைச் சேர்ந்த உறவினர் ஒருவர் அருண்குமாரின் மனைவி கலாதேவிக்குத் தொலைபேசி மூலமாகத் தகவல் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: மனைவியுடன் உல்லாசம்.. கையும் களவுமாக சிக்கிய சென்னை தவெக பிரமுகர்.. ஆத்திரத்தில் கணவன் செய்த காரியம்!

காவல்துறையின் அதிரடி நடவடிக்கை:

தகவல் அறிந்ததும் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கலாதேவி, உறவினர்களின் உதவியுடன் ஆபத்தான நிலையில் இருந்த அருண்குமாரைத் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கமுதி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அருண்குமார் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இது குறித்து மனைவி கலாதேவி அளித்த புகாரின் அடிப்படையில் கமுதி காவல்துறையினர் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையின் முடிவில், கொலைச் சம்பவத்தில் நேரடியாகத் தொடர்புடைய சூரியபிரகாஷைக் காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர். கொல்லப்பட்ட அருண்குமாருக்கு ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் என இரண்டு குழந்தைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது. நண்பர்கள் இடையே ஏற்பட்ட மோதல் ஒரு உயிரைப் பறித்த இந்தச் சோகச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow Us