AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

“தவெகவில் எத்தனை லியோ தாஸ், பவுடர் சரத்கள் இருக்கிறார்கள்?”.. முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் சரமாரி கேள்வி!

M.K. Stalin Slams Ruling TVK: த.வெ.க. ஏற்கனவே ஒரு 'பேட் பார்ட்டி' என்று பெயர் எடுத்திருந்த நிலையில், தற்போது 'பிரேக்கிங் பேட் பார்ட்டியாக' புரோமோஷன் பெற்றுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார். சொந்தக் கட்சியிலேயே போதைப்பொருள் மாபியாவை வைத்துக் கொண்டு ஊருக்கு உபதேசம் செய்வதா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

“தவெகவில் எத்தனை லியோ தாஸ், பவுடர் சரத்கள் இருக்கிறார்கள்?”.. முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் சரமாரி கேள்வி!
முதல்வர் விஜய், மு.க.ஸ்டாலின்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 17 Oct 2026 11:23 AM IST

சென்னை, அக்.17: தமிழக அரசியல் களத்தில் ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையிலான வார்த்தைப் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், தற்போது ஆளும் தமிழக வெற்றிக் கழகத்தின் செயல்பாடுகளைக் குறிவைத்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள கருத்துக்கள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. உலகப் புகழ்பெற்ற ‘பிரேக்கிங் பேட்’ (Breaking Bad) வெப் தொடரை மேற்கோள் காட்டி ஆளுங்கட்சியான த.வெ.க.வை மிகக் கடுமையான சொற்களால் சாடியுள்ள அவர், ஆளுங்கட்சியினரே போதைப்பொருள் விவகாரங்களில் சிக்கும் போது அரசு எப்படி மௌனம் காக்க முடியும் என்ற கேள்சியை எழுப்பியுள்ளார். மாநிலம் முழுவதும் தவெக கட்சியில் எத்தனை ‘லியோ தாஸ்கள்’ மற்றும் ‘பவுடர் சரத்துகள்’ இருக்கிறார்கள் என்பதை முறையாகக் கணக்கெடுக்க வேண்டும் என்று அவர் விடுத்துள்ள அதிரடி அறிக்கையானது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

இதையும் படிக்க: மனைவியுடன் உல்லாசம்.. கையும் களவுமாக சிக்கிய சென்னை தவெக பிரமுகர்.. ஆத்திரத்தில் கணவன் செய்த காரியம்!

பிரேக்கிங் பேட் ஒப்பீடும், குற்றச்சாட்டும்:

ஏற்கனவே பல்வேறு சர்ச்சைகளால் ‘பேட் பார்ட்டி’ (Bad Party) என்று பெயரெடுத்திருந்த த.வெ.க., தற்போது ஆட்சியில் இருக்கும் நிலையில் அதைவிட ஒருபடி மேலே போய் ‘பிரேக்கிங் பேட் பார்ட்டியாக’ (Breaking Bad Party) மாறியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பதிவில் கடுமையாக விமர்சித்துள்ளார். ‘போதை ஒழிப்பு’ என்ற முழக்கங்களை முன்வைக்கும் ஆளுங்கட்சியின் சொந்தக் கட்சியினரே போதை மாபியா கும்பலுடன் தொடர்பில் இருப்பதும், போக்சோ மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபடுவதும் எதை உணர்த்துகிறது என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். “சொந்தக் கட்சியிலேயே போதை மாபியாவை வைத்துக் கொண்டு ஊருக்கு உபதேசம் செய்து கொண்டிருக்கிறதா அரசு?” என்று சாடியுள்ள ஸ்டாலின், போதை ஒழிப்பு என்பதைத் த.வெ.க.வினர் வேறு விதமாகப் புரிந்துகொண்டு செயல்படுகிறார்களா என்ற சந்தேகத்தையும் வெளிப்படுத்தியுள்ளர்.

ஒட்டுமொத்த நெட்வொர்க்கையும் வளைக்க வேண்டும்:

கட்சிக்குள் மற்றும் ஆட்சிப்பொப்பில் உள்ள ஒருசில நபர்களை மட்டும் தனிப்பட்ட முறையில் சுட்டிக்காட்டாமல், இதன் பின்னணியில் யார்யாரெல்லாம் இருக்கிறார்கள் என்பதை ஆழமாக விசாரித்து அந்த முழு நெட்வொர்க்கையும் காவல்துறையினர் சுற்றி வளைக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் த.வெ.க.வில் எத்தனை ‘லியோ தாஸ்கள்’ மற்றும் ‘பவுடர் சரத்துகள்’ பதுங்கியிருக்கிறார்கள் என்பதை உடனடியாகக் கணக்கெடுக்க வேண்டும் என்றும் அவர் கடுமையாக வலியுறுத்தியுள்ளார். சமூக வலைதளங்களில் சினிமா பாணியிலான பஞ்ச் டயலாக்குகளையும் வசனங்களையும் பேசுவதை விடுத்து, சட்டம்-ஒழுங்கைப் பேணுவதிலும் குற்றச் செயல்களைத் தடுத்து நிறுத்துவதிலும் அரசு கவனம் செலுத்த வேண்டும் என்ற தொனியில் அவர் பலமான கேள்விகளை வீசியுள்ளார்.

இதையும் படிக்க: இன்ஸ்டாகிராம் மூலம் அரங்கேறிய அதிர்ச்சி மோசடி.. நீலாங்கரை ரிசார்ட்டுக்கு அழைத்துச் சென்று தாலி செயின் பறிப்பு..

பஞ்ச் டயலாக்குகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க எச்சரிக்கை:

“பயமாய் இருக்கா? போகப் போக இன்னும் பயங்கரமாய் இருக்கும்!” போன்ற சினிமா பாணி வசனங்களையும் பஞ்ச் டயலாக்குகளையும் இனிவரும் காலங்களில் முதல்வர் தவிர்க்க வேண்டும் என்று சுட்டிக்காட்டியுள்ள மு.க.ஸ்டாலின், அரசின் மீதான மக்கள் கோபத்திற்கு இதுபோன்ற மேடைப் பேச்சுக்கள் தீர்வு தராது எனவும் தெரிவித்துள்ளார். காவல்துறையின் சட்ட நடவடிக்கைகள் குற்றவாளிகள் மீது சமரசமின்றித் தொடர வேண்டும் என்றும், போதைப்பொருள் புழக்கத்திற்குத் துணைபோகும் எவராக இருந்தாலும் தப்ப முடியாது என்ற சூழலை உருவாக்க வேண்டும் என இந்த அறிக்கை உணர்த்துவதாக அரசியல் நோக்கர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

Follow Us