AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

இன்ஸ்டாகிராம் மூலம் அரங்கேறிய அதிர்ச்சி மோசடி.. நீலாங்கரை ரிசார்ட்டுக்கு அழைத்துச் சென்று தாலி செயின் பறிப்பு..

Instagram Fraud in Chennai: இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமாகி, தொழிலில் உதவுவதாகக் கூறி நீலாங்கரை ரிசார்ட்டுக்கு அழைத்துச் சென்று பெண்ணிடம் 11 சவரன் தாலிக்கொடியைப் பறித்து, அந்தரங்கப் புகைப்படங்களைக் காட்டி மிரட்டிய தீபக் மீது 9 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இன்ஸ்டாகிராம் மூலம் அரங்கேறிய அதிர்ச்சி மோசடி.. நீலாங்கரை ரிசார்ட்டுக்கு அழைத்துச் சென்று தாலி செயின் பறிப்பு..
மோசடியில் ஈடுபட்ட தீபக்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 17 Oct 2026 08:29 AM IST

சென்னை, அக்.17: சமூக வலைதளங்கள் மக்களின் அன்றாட வாழ்வில் தவிர்க்க முடியாத அங்கமாக மாறிவிட்ட போதிலும், அவற்றில் நிலவும் சில போலி முகங்கள் மற்றும் ஏமாற்று வேலைகளால் அப்பாவி மக்கள் குறிப்பாகப் பெண்கள் பலர் கடுமையான இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். அந்த வகையில், சமூக வலைதளங்களில் ஏழைகளுக்கு உதவுவது போலவும், உயர்தர வாழ்க்கை முறையைக் காட்டுவது போலவும் வீடியோக்களைப் பதிவிட்டுத் தன்னை ஒரு நல்ல மனிதராகக் காட்டிக்கொண்ட நபர் ஒருவர், இன்ஸ்டாகிராம் மூலமாகத் திருமணமான பெண்ணொருவருடன் பழகி, தொழில் ரீதியாக உதவி செய்வதாக ஏமாற்றிச் சென்னையில் வைத்துத் தாலிச் செயினைப் பறித்து, அந்தரங்கப் புகைப்படங்களைக் காட்டி மிரட்டல் விடுத்த அதிர்ச்சிச் சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில், நீலாங்கரை காவல் துறையினர் குற்றவாளி மீது 9 கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

இதையும் படிக்க: மனைவியுடன் உல்லாசம்.. கையும் களவுமாக சிக்கிய சென்னை தவெக பிரமுகர்.. ஆத்திரத்தில் கணவன் செய்த காரியம்!

இன்ஸ்டாகிராம் பழக்கமும் ரிசார்ட் நாடகமும்:

திருச்சியைச் சேர்ந்த 37 வயதுடைய திருமணமான பெண் ஒருவர் அங்குள்ள தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். இவருக்கு இன்ஸ்டாகிராம் செயலி மூலமாகத் தீபக் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. தான் ஒரு முன்னணி கட்டுமான நிறுவனக் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்றும், தொழிலை மேம்படுத்த உதவுவதாகவும் தீபக் அந்தப் பெண்ணை நம்ப வைத்துள்ளார். தொழில் சம்பந்தமாகப் பேச வேண்டியுள்ளதால் சென்னைக்கு வருமாறு அவர் அழைப்பு விடுத்ததையடுத்து, கடந்த செப்டம்பர் 4 ஆம் தேதி மாலை சென்னை நீலாங்கரையில் உள்ள ஒரு தனியார் ரிசார்ட்டுக்கு அந்தப் பெண் சென்றுள்ளார். அங்கு இருவரும் இருந்தபோது, பெண்ணுக்குத் தெரியாமல் தீபக் சில அந்தரங்கப் புகைப்படங்களையும் வீடியோக்களையும் தனது செல்போனில் ரகசியமாகப் பதிவு செய்து கொண்டுள்ளார்.

நீச்சல் குளக் குளியலும் 11 சவரன் தாலிக்கொடி பறிப்பும்:

இதன் தொடர்ச்சியாக, நீச்சல் குளத்தில் போய் குளிக்கலாம் என்று கூறி அந்தப் பெண்ணைத் தீபக் அழைத்துச் சென்றுள்ளார். அங்குச் சென்ற பிறகு, “நீச்சல் குளத்தில் குளிக்கும் போது நகைகள் தொலைந்து போய்விடும், எனவே உன்னுடைய நகைகளைக் கழற்றி என்னிடம் கொடு” என்று கூறி அந்தப் பெண்ணின் கழுத்திலிருந்த 11 சவரன் தாலிச் செயினை தந்திரமாகப் பெற்றுக் கொண்டுள்ளார். அதன்பிறகு அந்தத் தாலிச் செயினை அவர் திரும்பத் தரவில்லை எனக் கூறப்படுகிறது. தன் குடும்பத்திற்குத் தெரிந்தால் மிகப்பெரிய பிரச்னையாகிவிடும் என்று அஞ்சித் தவித்த அந்தப் பெண், தனது 11 சவரன் நகையைத் திருப்பிக் கேட்கும்போதுதான் தீபக் தனது உண்மையான சுயரூபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இதையும் படிக்க: கோவை வாலாங்குளத்தில் என்ன நடக்கிறது? ஆங்காங்கே கிடக்கும் பெண்கள் உள்ளாடைகள்.. பொதுமக்கள் அதிர்ச்சி!

அந்தரங்கப் போட்டோக்களை காட்டி மிரட்டல்:

பெண் தனது தாலிச் செயினைக் கேட்டபோது, அவருடன் நெருக்கமாக இருந்தபோது தான் ரகசியமாக எடுத்த அந்தரங்கப் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைக் காட்டித் தீபக் மிரட்டத் தொடங்கியுள்ளார். தான் பல அரசியல்வாதிகள், யூடியூபர்கள் மற்றும் தொழிலதிபர்களுடன் தொடர்பில் இருப்பதாகவும், செல்வாக்கு மிக்கவன் என்பதால் தனது இன்ஸ்டா வீடியோக்களைப் பார்த்தாலே பயப்படுவாய் என்றும் கூறி அவர் மிரட்டல் விடுத்துள்ளார். செய்வதறியாது திகைத்த அந்தப் பெண், தாலிச் செயினை மீட்க வேறு வழியின்றி நீலாங்கரை காவல் நிலையத்தில் நேரில் சென்று புகார் அளித்துள்ளார். இதனையடுத்து, தகவல் தொழில்நுட்பச் சட்டம், ஆபாசப் பதிவுகளைப் பரப்புதல் மற்றும் தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 9 பிரிவுகளின் கீழ் தீபக் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதோடு, அவரது செல்போனை ஆய்வு செய்தால் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவரும் என்பதால் அவரை விரைந்து கைது செய்யும் நடவடிக்கைகளில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Follow Us