AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

கோவை வாலாங்குளத்தில் என்ன நடக்கிறது? ஆங்காங்கே கிடக்கும் பெண்கள் உள்ளாடைகள்.. பொதுமக்கள் அதிர்ச்சி!

Coimbatore Valankulam : கோயம்புத்தூர் மாவட்டத்தில் வாலாங்குளம் பகுதியில் ஆங்காங்கே கிடக்கும் பெண்கள் உள்ளாடைகளால் சமூக விரோத செயல் நடைபெறாத வகையில் போலீசார் ரோந்து பணி மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்தப் பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர் .

கோவை வாலாங்குளத்தில் என்ன நடக்கிறது? ஆங்காங்கே கிடக்கும் பெண்கள் உள்ளாடைகள்.. பொதுமக்கள் அதிர்ச்சி!
கோப்புப்படம்.
Sekaran S
Sekaran S | Published: 14 Oct 2026 11:38 AM IST

கோயம்புத்தூர் மாநகர பகுதியில் முக்கிய பொழுதுபோக்கு மற்றும் பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்ளும் இடமாக வாலாங்குளம் பகுதி செயல்பட்டு வருகிறது. இந்த பகுதியில் ஆங்காங்கே பெண்கள் அணியும் உள்ளாடைகள் மற்றும் சேலைகள் சிதறி கிடந்து வருகின்றன. இது அங்கு பொழுது போக்குவதற்காகவும், நடை பயிற்சி மேற்கொள்வதற்காகவும் வரும் மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், முக சுழிப்பையும் ஏற்படுத்தி உள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் அழகிய குளக்கரைகளில் ஒன்றாக இருந்து வரும் வாலாங்குளம் அண்மையில் மேம்படுத்தப்பட்டது. இதன் காரணமாக, இந்த பகுதியில் தினந்தோறும் ஏராளமான பொதுமக்கள், சிறுவர், சிறுமிகள், பெண்கள், முதியோர்கள் மற்றும் குடும்பத்தினர் நடைபயிற்சிக்காகவும், பொழுது போக்குவதற்காகவும் வந்து செல்கின்றனர்.

வாலாங்குளம் பகுதியில் சிதறிக் கிடக்கும் பெண்கள் உள்ளாடைகள்

இந்த நிலையில், அண்மையில் வாலாங்குளம் பகுதியில் பொதுமக்கள் நடை பயிற்சி மேற்கொண்டிருந்த போது, அங்கு இருக்கும் நடைபாதைகள் மற்றும் புதர் மண்டிய பகுதிகளில் பெண்களின் சேலைகள் மற்றும் 10- க்கும் மேற்பட்ட பெண்களின் உள்ளாடைகள், மேலாடைகள் ஆகியவை ஆங்காங்கே சிதறி கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதனை, பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் புகைப்படமாகவும், வீடியோவாகவும் பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இந்த பதிவுகளானது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மேலும் படிக்க: நண்பர்கள் பெயரில் போலி ஆவணம்.. வங்கியில் போலி நகை.. வேலூரில் ரூ.1.7 கோடி அடித்த நகை மதிப்பீட்டாளர்கள்!

வாலாங்குளத்தில் சமூக விரோத செயல் நடைபெறுகிறதா

பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் நடை பயிற்சி மேற்கொள்ளும் பொது இடத்தில் பெண்கள் பயன்படுத்தும் உடைகள் மற்றும் உள்ளாடைகள் இவ்வளவு அதிகமாக கிடப்பதை பார்த்த அந்த பகுதி மக்கள் இங்கு என்ன நடக்கிறது என்று கேள்வி எழுப்பி உள்ளனர். அத்துடன், இங்கு வரும் காதலர்கள் எல்லை மீறி செயல்படுகின்றனரா அல்லது வேறு ஏதேனும் சமூக விரோத செயல்கள் நடைபெறுகின்றனவா என்று கேள்வி எழுப்பி உள்ளனர். மேலும், குழந்தைகளுடனும், குடும்பத்தினருடனும் நடைபயிற்சி மேற்கொள்ள வரும் பொதுமக்கள் வாலாங்குளம் பகுதியில் கிடைக்கும் பெண்களின் உள்ளாடைகளை பார்த்து அதிர்ச்சி அடைவதுடன், கடும் முக சுழிப்பும், அச்சமும் அடைந்து வருகின்றனர்.

வாலாங்குளத்தில் போலீசார் ரோந்து செல்ல வேண்டும்

கோவை மாநகரத்தின் முக்கிய பகுதியாக விளங்கி வரும் வாலாங் குளத்தில் இதுபோன்ற சட்டவிரோத செயல்களோ அல்லது ஒழுங்கீனமான நிகழ்வுகளோ நடைபெறுவதை போலீசார் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தடுத்து நிறுத்த வேண்டும் என்று அந்த பகுதி மக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அத்துடன் இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் வாலாங்குளம் கரையை ஒட்டி போலீசார் ரோந்து பணி மேற்கொள்ள வேண்டும். இது தொடர்பாக உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.

மேலும் படிக்க: காலையில் திருமணம்.. மாலையில் பிரிவு.. மதுபோதை மாப்பிள்ளையால் களேபரமான கல்யாண வீடு.. உறவினர்கள் சோகம்!

Follow Us