மழைக்காலத்திலும் ஜாலியா துணி காயவைக்க சூப்பர் டிப்ஸ்..
Continuous Rain: தொடர் மழைக் காலத்தில் வீட்டிற்குள் காற்றோட்டமான இடத்தில் இடைவெளி விட்டுத் துணிகளைக் காயப்போடுவதோடு மின்விசிறியை ஓடவிடுவது விரைவாக உலர உதவும். துவைக்கும் போது கூடுதல் பிழிதல் முறையைப் பின்பற்றி, கொடிக்குச் பதிலாக ஹேங்கர்களைப் பயன்படுத்தினால் காற்று சீராகப் பரவி துர்நாற்றம் த தவிர்க்கப்படும்.
தொடர் மழைக்காலத்தில் துணிகளை (Rainy Season) வெளிப்புறத்தில் காயவைக்க முடியாது என்பதால் வீட்டிற்குள் காற்றோட்டமான அறையைத் தேர்ந்தெடுக்க வேண்டும். துணிகளுக்கு இடையே போதிய இடைவெளி விட்டு உலர்த்துவது துர்நாற்றம் வீசுவதைத் தடுக்கும். துணி துவைக்கும் இயந்திரத்தில் கூடுதல் ‘ஸ்பின்’ சுழற்சியைப் பயன்படுத்தி தண்ணீரை முழுமையாகப் பிழிய வேண்டும். கைகளால் துவைப்பவர்கள் உலர்ந்த துண்டைப் பயன்படுத்தி துணியில் உள்ள மீதி ஈரப்பதத்தை உறிஞ்சி எடுக்கலாம். அறையில் மின்விசிறி அல்லது ‘டிஹுமிடிஃபையர்’ சாதனங்களைப் பயன்படுத்துவது ஈரப்பதத்தை நீக்கித் துணிகளை விரைவாக உலரச் செய்யும். கொடியில் போடுவதற்குப் பதிலாக ஆடைகளுக்கான ‘ஹேங்கர்’ பயன்படுத்தினால் காற்று சீராகப் பரவும். அவசரத் தேவைக்கு லேசான ஈரப்பதம் இருக்கும்போதே அயர்ன் செய்வதன் மூலம் துர்நாற்றத்தையும் பூஞ்சையையும் தவிர்க்கலாம்.
Also Read: மழைக் காலத்தில் வீட்டைச் சுத்தமாக வைத்திருப்பது ஏன் அவசியம்?
வீட்டிற்குள் காற்றோட்டமான இடத்தை தேர்வு செய்தல்
தொடர்ந்து மழை பெய்யும் காலங்களில் துணிகளை வெளிப்புறத்தில் காயவைப்பது சாத்தியமற்றது. இதனால் வீட்டிற்குள் மின்விசிறி சுழலும் காற்றோட்டமான அறையைத் தேர்ந்தெடுத்து துணிகளைக் காயப்போட வேண்டும். துணிகளுக்கு இடையே போதிய இடைவெளி விட்டு உலர்த்துவது, துர்நாற்றம் வீசுவதைத் தடுத்து, துணிகள் சீக்கிரமாக உலர வழிவகுக்கும்.
துவைக்கும் போது கூடுதல் பிழிதல் முறையைப் பின்பற்றுதல்
துணி துவைக்கும் இயந்திரத்தைப் பயன்படுத்துபவர்கள், கூடுதல் ‘ஸ்பின்’ (Spin) சுழற்சியைப் பயன்படுத்தி தண்ணீரை முழுமையாகப் பிழிந்து எடுக்கலாம். கைகளால் துவைப்பவர்கள் துணிகளை நன்றாகப் பிழிந்த பிறகு, ஒரு உலர்ந்த துண்டில் (Towel) வைத்துச் சுற்றி அழுத்தினால், துணியில் உள்ள மீதி ஈரப்பதம் உறிஞ்சப்பட்டு துணி விரைவாகக் காயும்.
மின்விசிறி மற்றும் ஏர் கண்டிஷனர் உதவி
வீட்டிற்குள் துணிகளைக் காயப்போடும் போது மின்விசிறியை (Fan) தொடர்ச்சியாக ஓடவிடுவது மிக முக்கியம். வசதி இருப்பவர்கள் ஏசி (AC) அல்லது ‘டிஹுமிடிஃபையர்’ (Dehumidifier) சாதனங்களைப் பயன்படுத்தலாம். இவை அறையில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சி, துணிகளை எவ்விதத் துர்நாற்றமும் இன்றி விரைவாக உலரச் செய்யும்.
Also Read: மழைக் காலத்தில் வீட்டைச் சுத்தமாக வைத்திருப்பது ஏன் அவசியம்?
ஹேங்கர் பயன்பாடு மற்றும் அயர்ன் செய்தல்
துணிகளை கொடியில் போடுவதற்குப் பதிலாக ஆடைகளுக்கான ‘ஹேங்கர்’ (Hanger) பயன்படுத்தித் தொங்கவிட்டால் காற்று அனைத்துப் பகுதிகளிலும் சீராகப் பரவும். மிகவும் அவசரமாகக் காயவேண்டிய துணிகளை, லேசான ஈரப்பதம் இருக்கும்போதே அயர்ன் (Iron) செய்வதன் மூலம் ஈரப்பதம் மறைவதோடு துணியில் பூஞ்சை அல்லது துர்நாற்றம் ஏற்படுவதையும் தவிர்க்கலாம்.
மழைக்காலத்தில் துணிகளில் ஈரம் தங்கினால் பூஞ்சை தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதால், எளிய வழிகளைப் பின்பற்றி துணிகளைச் சுத்தமாகவும் விரைவாகவும் காயவைக்கலாம்.