AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

காற்று மாசு: தப்பிக்க நீங்கள் செய்ய வேண்டியதும்… செய்யக்கூடாததும்!

Air Pollution: அதிகரித்து வரும் காற்று மாசிலிருந்து தப்பிக்க வெளியில் செல்லும்போது தவறாமல் N95 முகக்கவசம் அணிய வேண்டும். அதிகாலை மற்றும் மாலை வேளைகளில் வெளிப் பயிற்சிகளைத் தவிர்த்து, வீட்டின் கதவு ஜன்னல்களை மூடி வைப்பதன் மூலம் மாசைக் குறைக்கலாம். நோய் எதிர்ப்புச் சக்தி தரும் உணவுகளை உட்கொள்வதுடன் சுவாசப் பிரச்சனை உள்ளவர்கள் உடனுக்குடன் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும்.

காற்று மாசு: தப்பிக்க நீங்கள் செய்ய வேண்டியதும்… செய்யக்கூடாததும்!
காற்று மாசுImage Source: pinrest
Sivasankari Bose
Sivasankari Bose | Published: 21 Oct 2026 12:30 PM IST

நகரங்களில் அதிகரித்து வரும் காற்று மாசு மற்றும் நுண் துகள்கள் மனிதர்களின் நுரையீரல் மற்றும் சுவாச மண்டலத்தைப் பெரிதும் பாதிக்கின்றன. வெளியில் செல்லும்போது N95 ரக முகக்கவசங்களை அணிவது காற்றில் உள்ள நுண் துகள்களிலிருந்து நம்மைக் காக்கும். மாசு அதிகமாக (Air Pollution) இருக்கும் அதிகாலை மற்றும் மாலை வேளைகளில் வெளியில உடற்பயிற்சி செய்வதைத் தவிர்ப்பது நல்லது. வீட்டிற்குள் மாசு நுழைவதைத் தடுக்கக் கதவு, ஜன்னல்களை மூடி வைப்பதுடன் தேவைப்பட்டால் காற்றுத் தூய்மையாக்கியைப் பயன்படுத்தலாம். விட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்த உணவுகளை உட்கொள்வது உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். அதிகளவு தண்ணீர் குடிப்பதன் மூலம் உடலிலுள்ள நச்சுத்தன்மைகளை எளிதாக வெளியேற்ற முடியும். முதியவர்கள், குழந்தைகள் மற்றும் சுவாசப் பிரச்சனை உள்ளவர்கள் மாசற்ற சூழலில் இருப்பதுடன் தேவைப்படும்போது மருத்துவரை அணுக வேண்டும்.

Also Read: தினமும் காலையில் இதைச் செய்தால் ஆக்டிவ்வாக இருக்கலாம் தெரியுமா?

காற்று மாசின் அபாயமும் ஆரோக்கிய பாதிப்புகளும்

நகரங்களில் தொடர்ந்து அதிகரித்து வரும் காற்று மாசு மனித ஆரோக்கியத்திற்குப் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது. காற்றில் கலந்துள்ள நுண் துகள்கள் (PM 2.5) மனிதர்களின் நுரையீரல் மற்றும் சுவாச மண்டலத்தை அதிகளவில் பாதித்து, ஆஸ்துமா, மூச்சுத்திணறல், மற்றும் இதயம் சார்ந்த நோய்களுக்கு வழிவகுக்கின்றன. எனவே, காற்று மாசு தீவிரமடையும் காலகட்டங்களில் நம்மைத் தற்காத்துக் கொள்ளச் சில அத்தியாவசிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும்.

அன்றாட பாதுகாப்பும் வீட்டுப் பராமரிப்பு முறைகளும்

முதலாவதாக, வெளியில செல்லும் போது தரமான ‘N95’ முகக்கவசங்களை அணிவது மிகவும் அவசியம். இது காற்றில் உள்ள அபாயகரமான நுண் துகள்களை நாம் சுவாசிப்பதைத் தடுக்கிறது. குறிப்பாக, அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் காற்று மாசின் அளவு அதிகமாக இருக்கும் என்பதால், அந்நேரங்களில் உடற்பயிற்சி செய்வது அல்லது நடைப்பயிற்சி மேற்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். வீட்டின் கதவு மற்றும் ஜன்னல்களை அடைத்து வைப்பதன் மூலம் வீட்டிற்குள் மாசு நுழைவதைக் குறைக்கலாம். சாத்தியப்பட்டால் வீட்டிற்குள் ‘ஏர் பியூரிஃபையர்’ (Air Purifier) பயன்படுத்துவது நல்லது.

Also Read: தினமும் காலையில் இதைச் செய்தால் ஆக்டிவ்வாக இருக்கலாம் தெரியுமா?

நோய் எதிர்ப்புச் சக்தி மற்றும் மருத்துவ ஆலோசனைகள்

அடுத்து, உணவில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் உணவுகளைச் சேர்த்துக்கொள்ள வேண்டும். விட்டமின் சி, ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்த நெல்லிக்காய், எலுமிச்சை, காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகம் உட்கொள்ளலாம். போதிய அளவு தண்ணீர் குடிப்பது உடலின் நச்சுகளை வெளியேற்ற உதவும். மேலும், நமது வீட்டைச் சுற்றி செடிகளை வளர்ப்பது காற்று தூய்மையடைய வழிவகுக்கும். சுவாசப் பிரச்சனை உள்ளவர்கள் மற்றும் முதியவர்கள், குழந்தைகள் மாசற்ற இடங்களில் பாதுகாப்பாக இருப்பதுடன், ஏதேனும் அசௌகரியம் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

Follow Us