AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

அடிக்கடி மறதி ஏற்படுகிறதா? நிபுணர்கள் வழங்கும் முக்கிய எச்சரிக்கை!

Forgetfulness: அடிக்கடி விஷயங்களைத் திரும்பக் கூறுவதும் ஒரே கேள்வியைக் கேட்பதும் எப்போதும் தீவிரமான டிமென்ஷியா நோயாக இருக்க வேண்டியசியமில்லை. வைட்டமின் பி12 குறைபாடு, தைராய்டு பிரச்சனைகள், மன அழுத்தம் மற்றும் தூக்கமின்மை போன்ற குணப்படுத்தக்கூடிய காரணங்களாலும் இந்த ஞாபக மறதி ஏற்படலாம்.

அடிக்கடி மறதி ஏற்படுகிறதா? நிபுணர்கள் வழங்கும் முக்கிய எச்சரிக்கை!
டிமென்ஷியா Image Source: pinrest
Sivasankari Bose
Sivasankari Bose | Published: 20 Oct 2026 16:30 PM IST

மனிதர்களிடம் ஏற்படும் சாதாரண ஞாபக மறதிக்கும் தீவிரமான நரம்பியல் குறைபாடுகளுக்கும் இடையேயான வித்தியாசத்தைப் புரிந்துகொள்வது மிகவும் அவசியமாகும். ஒரே கேள்வியை மீண்டும் மீண்டும் கேட்பது அல்லது குறுகிய காலத்தில் ஒரே விஷயத்தைத் திரும்பக் கூறுவது பலரிடையே காணப்படுகிறது. ஆனால் இது போன்ற அனைத்து மறதிப் பழக்கங்களும் டிமென்ஷியா போன்ற தீவிரமான மூளை தொடர்பான நோய்கள் அல்ல என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். வைட்டமின் பி12 குறைபாடு, தைராய்டு கோளாறுகள் மற்றும் போதிய தூக்கமின்மை ஆகியவை நினைவாற்றல் குறைபாட்டிற்கு முக்கியக் காரணங்களாக அமைகின்றன. மேலும் மன அழுத்தம் மற்றும் சில மருந்துகளின் பக்கவிளைவுகளாலும் தற்காலிகமாக ஞாபக சக்தி பாதிக்கப்படலாம். பழகிய வழிகளை மறப்பது அல்லது அன்றாட வேலைகளைச் செய்ய முடியாமல் சிரமப்படுவது போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாகக் கவனிக்க வேண்டும்.

Also Read: ஷாம்பூவில் 10 மூலப்பொருட்கள் இருந்தால்தான் சிறந்ததா? உண்மை இதோ!

நரம்பியல் நிபுணர்களின் எச்சரிக்கை மணி

சமீபகாலமாக சில விஷயங்களை அடிக்கடி மறந்துவிட்டு மீண்டும் மீண்டும் பேசுவது அல்லது ஒரே கேள்சியை திரும்பத் திரும்பக் கேட்பது பலரிடையே காணப்படும் பொதுவான பிரச்சனையாக மாறியுள்ளது. ஆனால், இந்த மாதிரியான சிறிய மறதிக்கும் தீவிரமான நரம்பியல் கோளாறுகளுக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை நாம் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்று நரம்பியல் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

அனைத்து மறதிகளும் டிமென்ஷியா அல்ல

சாவியை எங்கு வைத்தோம் என்பதை மறந்துவிடுவது அல்லது ஒரு மணி நேரத்திற்குள் ஒரே கேள்சியை பலமுறை கேட்பது போன்ற பலவீனங்களை மக்கள் பொதுவாக ‘நினைவாற்றல் குறைபாடு’ என்று கூறுகிறார்கள். இருப்பினும், இது போன்ற அனைத்து மறதிகளும் டிமென்ஷியா (ஞாபக மறதி நோய்) போன்ற தீவிரமான நிலையை குறிப்பதில்லை என்பதை மருத்துவர்கள் சுட்டிக்காட்டுகின்றன.

சிகிச்சையளிக்கக்கூடிய காரணிகளும் பரிசோதனைகளும்

தைராய்டு கோளாறுகள், வைட்டமின் பி12 குறைபாடு, மன அழுத்தம், கவலை, தூக்கமின்மை மற்றும் சில மருந்துகளின் பக்கவிளைவுகள் போன்றவையும் ஒருவரின் ஞாபக சக்தியையும் கவனத்தையும் பாதிக்கலாம். எனவே, இவை போன்ற எளிதில் குணப்படுத்தக்கூடிய காரணிகள் இருக்கக்கூடும் என்பதால், உடனடியாக எவ்வித அச்சத்திற்கும் ஆளாகாமல் முறையான மருத்துவப் பரிசோதனை மேற்கொள்வது அவசியமாகும்.

Also Read: ஷாம்பூவில் 10 மூலப்பொருட்கள் இருந்தால்தான் சிறந்ததா? உண்மை இதோ!

எப்போது கவனிக்க வேண்டும்? வடிவங்களை உற்று நோக்குதல்

பழகிய பாதைகளில் வழிமாறுவது, வழக்கமான அன்றாட வேலைகளைச் செய்வதில் சிரமம் ஏற்படுதல் போன்ற அறிகுறிகள் தொடர்ந்து அதிகரித்தால் அது தீவிரமான கவனத்திற்குரிய விஷயமாகலாம். எனவே, மறதியின் தன்மையை உற்று நோக்கி, அது அன்றாட வாழ்க்கையை எவ்வாறு பாதிக்கிறது என்பதைப் புரிந்து கொண்டு ஆரம்ப நிலையிலேயே தகுந்த மருத்துவ ஆலோசனை பெறுவது மிகவும் சிறந்தது.

Follow Us