ரூ.10,000 மாத சம்பளம் வாங்கும் நபரின் வங்கி கணக்கில் வந்த ரூ.10,000 கோடி.. ராஜஸ்தானில் ஷாக் சம்பவம்!
10,000 Crore Rupees In Medical Shop Employee's Account | ராஜஸ்தானை சேர்ந்த ஒருவர் மெடிக்கல் ஷாப்பில் பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையில் அவரது வங்கி கணக்கில் சுமார் ரூ.10,000 கோடி இருப்பதாக காட்டியுள்ளது. அதனால், அவர் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளார்.
ஜெய்ப்பூர், அக்டோபர் 31 : ராஜஸ்தான் மாநிலத்தில் (Rajasthan) மாதம் ரூ.10 ஆயிரம் சம்பளம் வாங்கி வந்த மெடிக்கல் ஊழியரின் வங்கி கணக்கில் திடீரென ரூ.10,000 கோடி பணம் வரவு வைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது வங்கி கணக்கில் திடீரென அவ்வளவு பணம் வரவு வைக்கப்பட்டது ஏன் என்பது குறித்தும், இந்த சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
மெடிக்கல் ஊழியரின் கணக்குக்கு வந்த ரூ.10,000 கோடி
ராஜஸ்தான் மாநிலம், சிகார் பகுதியில் உள்ள சலாசர் பேருந்து நிலையத்தின் அருகே நிர்மல் மெடிக்கல் ஷாப் ஒன்று உள்ளது. இந்த மெடிக்கல் ஷாப்பில் சமீர் கான் என்ற நபர் ஒருவர் பணியாற்றி வருகிறார். இவருக்கு மாத சம்பளம் ரூ.10,000 ஆகும். இந்த நிலையில், அக்டோபர் 28, 2026 அன்று தனது செல்போனுக்கு ரீச்சார்ஜ் செய்ய விரும்பியுள்ளார்.
இதையும் படிங்க : தீ விபத்தில் இருந்து உங்கள் வீட்டை பாதுகாக்க உதவும் “Home Insurance”.. முழு விவரம் இதோ!




பேலன்ஸ் செக் செய்யும்போது காத்திருந்த ஷாக்
பேலன்ஸ் செக் செய்வதற்காக அவர் தனது வங்கி கணக்கை திறந்துள்ளார். அப்போது வங்கி இருப்பு பூஜியம் என காட்டியுள்ளது. அதுமட்டுமன்றி, ரூ.10,000 கோடி லீன் தொகையும் காண்பித்துள்ளது. இதனால், சமீர் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளார். காரணம் அவரது வங்கி கணக்கில் ரூ.55,000 இருந்த நிலையில், அவ்வாறு தோன்றியதன் காரணமாக கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இதையும் படிங்க : நவம்பர் 1 முதல் அமலுக்கு வரும் முக்கிய மாற்றங்கள்.. என்ன என்ன தெரியுமா?
முடக்கம் செய்யப்பட்ட வங்கி கணக்கு
வங்கி கணக்கில் ரூ.10,000 கோடி பணம் இருந்தாலும், அதனை பயன்படுத்த முடியாத அளவுக்கு முடக்கம் செய்யப்பட்டு இருந்தது. இந்த நிலையில் தான், அவர் மெடிக்கல் ஷாப் உரிமையாளருக்கு அது குறித்து தகவல் தெரிவித்துள்ளார். இருவரும் இணைந்து சைபர் கிரைம் போலீசில் புகார் தெரிவித்துள்ளனர். காவல்துறையினர் அவர்களை வங்கிக்குச் சென்று பார்க்கும்படி கூறியுள்ளனர்.
வங்கி ஊழியர்கள் சமீரின் சிக்கலை சரிசெய்துள்ளனர். அதாவது, தொழில்நுட்ப கோளாறு காரணமாக ரூ.10,000 கோடி என காட்டியதாகவும், அதன் காரணமாக கணக்கு முடக்கம் செய்யப்பட்டதாகவும் அவர்கள் கூறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.