AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Gold Price : ரூ.10,000 சரிந்த தங்கம் விலை.. கடும் சரிவுக்கு காரணம் என்ன?

Gold Price Reduced 10,000 Rupees | 2026 ஆம் ஆண்டில் ஜனவரி மாதத்திற்கு பிறகு தங்கம் விலை தொடர் சரிவை சந்தித்து வருகிறது. குறிப்பாக கடந்த 10 மாதங்களில் மட்டும் தங்கம் விலை ரூ.10,000 சரிந்துள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 31 Oct 2026 14:59 PM IST
2026 ஆம் ஆண்டு தங்கத்திற்கான சிறந்த ஆண்டாக அமையவில்லை. காரணம், ஆண்டின் தொடக்கத்தில் உச்சத்தில் இருந்த தங்கம் விலை, அதன் பிறகு படிப்படியாக சரிவை சந்தித்தது. அதாவது, ஜனவரி மாதம் ரூ.16,000-க்கு மேல் விற்பனை செய்யப்பட்ட தங்கம், இன்று (அக்டோபர் 31, 2026) ரூ.12,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

1 / 5
ஜனவரி மாதம் புவிசார் பதற்றங்கள் அதிகமாக இருந்ததன் காரணமாக தங்கம் விலை உச்சத்தில் இருந்தது. அதன்பிறகு, ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது உள்ளிட்டவை உலக முதலீட்டளர்களை தங்கத்தின் மீது இருந்து கவனத்தை திசை திருப்பியது. இதுவே தங்கம் தொடர் சரிவை சந்திக்க காரணமாக அமைந்தது.

2 / 5
இந்த மாதத்தின் முதல் நாளான அக்டோபர் 01, 2026 அன்று ஒரு கிராம் 22 காரட் தங்கத்தின் விலை ரூ.13,680 ஆகவும், ஒரு சவரன் ரூ.1,09,440 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது. இதுவே 30 நாட்கள் கழித்து இன்று (அக்டோபர் 31, 2026) ஒரு கிராம் ரூ.12,730-க்கும், ஒரு சவரன் ரூ.1,01,840-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

3 / 5
அதாவது, அக்டோபர் 01, 2026 முதல் அக்டோபர் 31, 2026 வரையிலான 30 நாட்கள் காலக்கட்டத்தில் தங்கம் கிராமுக்கு ரூ.950 சரிந்துள்ள நிலையில், சவரனுக்கு ரூ.7,600 சரிவை சந்தித்துள்ளது. இதுவே 10 கிராமுக்கு கணக்கு செய்து பார்த்தால் ரூ.9,500 வரை சரிந்துள்ளது. அதாவது, சுமார் ரூ.10,000 வரை குறைந்துள்ளது.

4 / 5
சென்னையை பொருத்தவரை ஜனவரி மாதத்திற்கு பிறகு தங்கம் தொடர் விலை சரிவை சந்தித்துள்ளது.  தற்போது தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் சூழலில் தங்கம் வாங்குபவர்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளது. அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தும் என்ற எதிர்ப்பார்ப்பு மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வு ஆகியவை தங்கம் விலை மேலும் சரிய முக்கிய காரணிகளாக அமைந்துள்ளன.

5 / 5
Follow Us