AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

எச்சரித்தும் கேட்காத மனைவி.. கணவனே அரங்கேற்றிய கொடூர இரட்டைக்கொலை.. விருதுநகரில் பயங்கரம்!!

Virudhunagar Double Murder: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே மனைவியின் திருமணத்தை மீறிய உறவால் ஆத்திரமடைந்த கணவன், மனைவியையும் அவரது காதலனையும் கல்லால் தாக்கியும் அரிவாளால் வெட்டியும் படுகொலை செய்த இரட்டைக்கொலை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், உயிரிழந்தவர்களின் அப்பாவிப் பிள்ளைகள் ஆதரவற்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

எச்சரித்தும் கேட்காத மனைவி.. கணவனே அரங்கேற்றிய கொடூர இரட்டைக்கொலை.. விருதுநகரில் பயங்கரம்!!
கனவன், மனைவி
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 18 Nov 2026 08:45 AM IST

விருதுநகர், நவ.18: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள பாளையம்பட்டி பகுதியில் ஒரு நாள் விடியல் மிகக் கொடூரமானதொரு இரட்டைக்கொலைச் சம்பவத்தோடு தொடங்கியது. அப்பகுதியைச் சேர்ந்த ஆணும் பெண்ணும் தலை சிதைந்த நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட செய்தி அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பீதியையும் ஏற்படுத்தியது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், ரத்த வெள்ளத்தில் கிடந்த இருவரது உடல்களையும் மீட்டு உடற்கூறாய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையின் முடிவில், முறையற்ற கள்ளத்தொடர்பு காரணமாக ஆத்திரமடைந்த கணவனே இந்த வெறிச்செயலில் ஈடுபட்டுள்ள திடுக்கிடும் உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.

இதையும் படிக்க: கடன் பிரச்னை, ஆடம்பர வாழ்க்கைக்காக தனிஷ்க் நகைக்கடையில் கொள்ளை! யூடியூபர் நிஷாந்த் குறித்து காவல் ஆணையர் பரபரப்பு தகவல்

திருமணத்தை மீறிய உறவும் எச்சரிக்கையும்:

கொலை செய்யப்பட்ட பொன்னழகு என்பவருக்கும் சரவணகுமார் என்பவருக்கும் திருமணம் முடிந்து, மூன்று பிள்ளைகளுடன் மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கை நடந்து வந்தது. தம்பதியினர் இருவரும் கட்டிடத் தொழிலாளர்களாக வேலை செய்து வந்தனர். இதற்கிடையே, இவர்களுடன் வேலைக்குச் சென்று வந்த அதே ஊரைச் சேர்ந்த 30 வயதான ஆனந்தராஜ் என்பவருடன் பொன்னழகுக்கு அறிமுகம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இந்தப் பழக்கம் நெருக்கமாகி இருவரும் திருமணத்தை மீறிய கள்ளத்தொடர்பில் ஈடுபட்டுள்ளனர். இதையறிந்த கணவன் சரவணகுமார் தனது மனைவியைக் கடுமையாகக் கண்டித்தும், அவர்கள் தங்களது போக்கை மாற்றிக்கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது.

காத்திருந்து காதலர்களைத் தீர்த்துக்கட்டிய கணவன்:

கணவனின் கண்டிப்பையும் மீறி கள்ளத்தொடர்பைத் தொடர்ந்து வந்ததால் ஆத்திரமடைந்த சரவணகுமார், மனைவியுடன் சண்டை போட்டுவிட்டுத் தனது தாய் வீட்டிற்குச் சென்றுவிட்டார். பொன்னழகு தனது குழந்தைகளைத் தாய் வீட்டில் விட்டுவிட்டுத் தனிமையில் வசித்து வந்துள்ளார். இதைப் பயன்படுத்திக் கொண்ட ஆனந்தராஜ் இரவு நேரங்களில் பொன்னழகு வீட்டிற்கு வந்து தனிமையில் இருந்து வந்துள்ளார். இந்தச் சூழலில் மனைவியின் நடத்தையால் கொதித்தெழுந்த சரவணகுமார், இருவரையும் ஒரே அடியாகத் தீர்த்துக்கட்ட முடிவு செய்தார். சம்பவத்தன்று நள்ளிரவில் வீட்டின் அருகே மறைந்திருந்த அவர், காதலன் உள்ளே நுழைந்ததும் வீட்டுக்குள் புகுந்து இருவரையும் கல்லால் சரமாரியாகத் தாக்கியும் அரிவாளால் வெட்டியும் கொடூரமாகக் கொலை செய்துவிட்டுத் தப்பியோடினார்.

இதையும் படிக்க: மது கொடுத்து பாலியல் அத்துமீறல்.. ஜெகஜால கில்லாடியான பிக்பாஸ் முத்துக்குமரன்.. இளம்பெண் அடுக்கிய குற்றச்சாட்டு

காவல்துறையின் அதிரடி கைது நடவடிக்கை:

பொழுது விடிந்த பிறகே ஊருக்குள் இந்த இரட்டைக்கொலை விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது. தகவலின் பேரில் விரைந்து வந்த காவல்துறையினர் கொலைச் சம்பவத்தில் ஈடுபட்ட சரவணகுமாரை உடனடியாகக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முறையற்ற கள்ளக்காதல் விவகாரத்தால் இரண்டு குடும்பங்களும், அப்பாவிப் பிள்ளைகளும் ஆதரவற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Follow Us