AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

பெண் தொகுப்பாளினியிடம் அநாகரிகம்….பிரபல நடிகரும் பாஜக நிர்வாகியுமான ரவி மீதுகாவல்துறை வழக்குப்பதிவு

TN BJP Functionary Harassment Case : நடிகரும் பாஜக நிர்வாகியுமான ரவி மீது தன்னிடம் அநாகரீகமாக நடந்துகொண்டதாகவும், ஆபாசமாக பேசியதாகவும் பெண் தொகுப்பாளனி ஒருவர் சென்னை அசோக் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். இந்த புகாரின் பெயரில் அவர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

பெண் தொகுப்பாளினியிடம் அநாகரிகம்….பிரபல நடிகரும் பாஜக நிர்வாகியுமான ரவி மீதுகாவல்துறை வழக்குப்பதிவு
சின்னத்திரை நடிகர் ரவி
Karthikeyan S
Karthikeyan S | Published: 18 Nov 2026 08:44 AM IST

சென்னை, நவம்பர் 18 : கடந்த நவம்பர் 14,2026 அன்று யூடியூப் சேனல் ஒன்றுக்கு நடிகரும் பாஜக நிர்வாகியுமான ரவி (Actor Ravi) நேர்காணல் அளித்திருக்கிறார். நேர்காணல் முடிந்த பின்பு தன்னிடம் அநாகரீகமாக நடந்துகொண்டதாகவும், ஆபாசமாக பேசியதாகவும் பெண் தொகுப்பாளனி ஒருவர் அசோக் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார் அதன்படி பாஜக பிரச்சார பிரிவின் மாநில செயலாளர் ரவி மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பிரபல நடிகரும் பாஜக நிர்வாகியுமான ரவி மீதுகாவல்துறை வழக்குப்பதிவு

சின்னத்திரையில் சரவணன் மீனாட்சி, பாண்டியன் ஸ்டோர்ஸ் உள்ளிட்ட தொடர்களின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் ரவி. இவர் சன் டிவியில் செல்லமே, வாணி ராணி உள்ளிட்ட தொடர்களில் நடித்துள்ளார். தற்போது மருமகள் என்ற தொடரில் நடித்து வருகிறார். இந்த நிலையில் பாஜகவில் இணைந்த அவர் பாஜகவின் பிரச்சார பிரிவின் மாநில செயலாளராக பதவி வகித்து வருகிறார். கட்சியின் சார்பாக பல்வேறு ஊடகங்களுக்கு பேட்டியளித்து வருகிறார்.

இதையும் படிக்க : சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகள்.. உரிமையாளர்களுக்கு அபராதம் முதல் ஏலம் வரை.. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

இந்த நிலையில் கடந்த நவம்பர் 14, 2026 அன்று யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்திருக்கிறார். நேர்காணல் முடிந்த பிறகு பெண் தொகுப்பொளியிடம் அநாகரிகமாக நடந்துகொண்டதாகவும் ஆபாசமாக பேசியதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து பெண் தொகுப்பாளினி சென்னை அசோக் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவர் அளித்த புகாரின் பெயரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பிரபல சின்னத்திரை நடிகரும் பாஜக பிரமுகருமான ரவி மீது பாலியல் தொந்தரவு அளித்ததாக புகார் எழுந்திருப்பது சின்னத்திரை வட்டாரங்களிலும், அரசியல் அரங்கிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சின்னத்திரை மட்டுமின்றி ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’, ‘மெட்ராஸ்’, ‘கபாலி’ உள்ளிட்ட பல வெற்றித் திரைப்படங்களிலும் முக்கியக் கதாபாத்திரங்களில் இவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பெண் நிர்வாகியிடம் அநாகரிகமாக நடந்துகொண்டதாக புகார்

தற்போது இந்த வழக்கு தொடர்பான அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகளைக் காவல்துறையினர் தீவிரப்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும்  புகாரில் கூறப்பட்டுள்ள சம்பவங்கள் குறித்து முழுமையான விசாரணை நடைபெற்று வருகிறது. பெண்களுக்கு எதிரான பாலியல் சீண்டல் புகார்களில் எவ்வித பாரபட்சமுமின்றி சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதை இந்த வழக்குப்பதிவு உணர்த்துவதாக அமைந்துள்ளது.

இதையும் படிக்க : தமிழகத்தில் ரூ.1,427 கோடி மணல் கொள்ளை? முன்னாள் அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்ட 28 பேர் மீது டி.வி.ஏ.சி. வழக்குப்பதிவு!

கடந்த சில மாதங்களுக்கு முன் பாஜக நிர்வாகி கருப்பு முருகானந்தம் என்பவர் மீது பெண் ஒருவர் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். தமிழக பாஜக பெண் நிர்வாகி ஒருவர், பாஜக தேசியத் தலைவர் நிதின் நவீன், தேசியப் பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ், மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோருக்கு புகார் மனு ஒன்றை அனுப்பி உள்ளார். அந்த மனுவில், கர்நாடக பாஜகவில் பணியாற்றி வந்த என்னை, கருப்பு முருகானந்தம் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறினார். என்னை அவர் உடலளவிலும், மனதளவிலும் மிகக் கடுமையாகத் துன்புறுத்தினார். அவருடனான உறவில் நான் கருவுற்ற நிலையில், எனது விருப்பத்துக்கு மாறாக கட்டாயப்படுத்தி கருவைக் கலைக்க வைத்தார் என்று தெரிவித்துள்ளார்.

Follow Us