AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

செவிமடலை அதிர வைக்கும் பட்டாசு சத்தம்: எப்படி தப்பிப்பது?

Firecracker Noise: பட்டாசுகளின் அதிகப்படியான இரைச்சல் குழந்தைகளின் மென்மையான கேட்கும் திறனைப் பாதிப்பதோடு நரம்பு மண்டலத்தைச் சீர்குலைத்து கடுமையான பயத்தை ஏற்படுத்துகிறது. முதியவர்களுக்கு திடீர் வெடிச்சத்தம் ரத்த அழுத்தத்தை உயர்த்தி இதய நோய் மற்றும் தூக்கமின்மை போன்ற பேராபத்துகளை உண்டாக்குகின்றது. செல்லப்பிராணிகள் இச்சத்தத்தால் கடும் அதிர்ச்சியடைந்து மன அழுத்தத்திற்கும் விபத்துகளுக்கும் ஆளாகின்றன.

செவிமடலை அதிர வைக்கும் பட்டாசு சத்தம்: எப்படி தப்பிப்பது?
பட்டாசு சத்தம்Image Source: social media
Sivasankari Bose
Sivasankari Bose | Published: 31 Oct 2026 15:00 PM IST

பட்டாசுகள் வெடிக்கும்போது (Crackers Sound) வெளிப்படும் அதிதீவிர இரைச்சல் குழந்தைகளின் மென்மையான செவிப்புலனைப் பாதித்து தற்காலிக அல்லது நிரந்தர செவித்திறன் இழப்பை உருவாக்கக்கூடும். திடீரென எழும் உரத்த சத்தம் சிறிய குழந்தைகளின் நரம்பு மண்டலத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கி கடும் பயத்தையும் தூக்கமின்மையையும் ஏற்படுத்துகிறது. முதியவர்களுக்கு இந்த அதிகப்படியான சத்தம் ரத்த அழுத்தத்தை திடீரென உயர்த்தி இதய நோய் சார்ந்த அவசர பாதிப்புகளை உண்டாக்கும் அபாயம் கொண்டது. மேலும், நரம்புத் தளர்ச்சி மற்றும் தலைவலியால் அவதிப்படும் வயதானவர்களின் உடல் நலனை இச்சத்தம் மேலும் சீர்குலைக்கிறது. மனிதர்களை விட பல மடங்கு கூர்மையான கேட்கும் திறன் கொண்ட செல்லப்பிராணிகள் வெடிச்சத்தத்தால் பேரதிர்ச்சிக்கு ஆளாகின்றன. பயத்தின் உச்சத்தால் நாய் மற்றும் பூனைகள் திசைதெரியாமல் ஓடி விபத்தில் சிக்குவதோடு கடுமையாக மன அழுத்தத்திற்கும் உள்ளாகின்றன.

Also Read: மத்தாப்பாய் ஜொலிக்கும் தீபாவளி பட்டாசுகளின் வரலாறு என்ன தெரியுமா?

பட்டாசுகள் வெடிக்கும்போது உருவாகும் இரைச்சல்

பட்டாசுகள் வெடிக்கும்போது உருவாகும் அதிக அளவிலான இரைச்சல், குழந்தைகளின் செவித்திறனைப் பாதிக்கும் பெரும் காரணியாக அமைகிறது. சிறிய குழந்தைகளின் காது மடல்களும் கேட்கும் நரம்புகளும் மிகவும் மென்மையானவை என்பதால், திடீரென எழும் 140 டெசிபலுக்கு அதிகமான சத்தம் தற்காலிக அல்லது நிரந்தர செவித்திறன் இழப்பை ஏற்படுத்தக்கூடும். மேலும், இத்தகைய பெரும் இரைச்சல் குழந்தைகளின் நரம்பு மண்டலத்தை தூண்டி, கடுமையான பயம், மன அழுத்தம், பதற்றம் மற்றும் தூக்கமின்மை போன்ற சிக்கல்களை உருவாக்குகின்றது.

முதியோர் ஆரோக்கியத்தில் வெடிச்சத்தத்தின் தாக்கம்

வயதானவர்களுக்கு பட்டாசு சத்தம் உடலளவிலும் மனதளவிலும் பல்வேறு உபாதைகளை ஏற்படுத்துகிறது. குறிப்பாக, ரத்த அழுத்தம் மற்றும் இதய நோய் உள்ள முதியவர்கள் திடீர் வெடிச்சத்தத்தைக் கேட்கும்போது அதிர்ச்சிக்குள்ளாகி, இதயம் சார்ந்த அவசர நிலையைச் சந்திக்க நேரிடும். இதனுடன், நரம்புத் தளர்ச்சி, தலைவலி மற்றும் தூக்கக் கோளாறுகளால் அவர்கள் கடுமையாக அவதிப்படுகின்றனர்.

Also Read: மத்தாப்பாய் ஜொலிக்கும் தீபாவளி பட்டாசுகளின் வரலாறு என்ன தெரியுமா?

செல்லப்பிராணிகள் சந்திக்கும் பேரதிர்ச்சி

மனிதர்களை விடப் பல மடங்கு கூர்மையான செவித்திறன் கொண்ட நாய், பூனை உள்ளிட்ட செல்லப்பிராணிகளுக்கும் பறவைகளுக்கும் பட்டாசு சத்தம் ஒரு அச்சுறுத்தலாகும். எதிர்பாராத வெடிச்சத்தத்தால் அவை கடும் பீதியடைந்து திசைதெரியாமல் ஓடுவது, உணவைத் தவிர்க்கும் மன அழுத்தத்திற்கு ஆளாவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. எனவே, பண்டிகை மற்றும் விசேஷ நாட்களில் சத்தமில்லா சூழலை உருவாக்க வேண்டியது அவசியமாகிறது. இதனுடன், நரம்புத் தளர்ச்சி, தலைவலி மற்றும் தூக்கக் கோளாறுகளால் அவர்கள் கடுமையாக அவதிப்படுகின்றனர்.

பொறுப்புத் துறப்பு: இத்தளத்தில் உள்ள லைப்ஸ்டைல், ஆரோக்கியம் மற்றும் உணவு சார்ந்த தகவல்கள் பொதுவான விழிப்புணர்விற்காக மட்டுமே; இவை மருத்துவ ஆலோசனையல்ல. இதில் உள்ள குறிப்புகளைப் பின்பற்றும் முன் தகுந்த நிபுணர் அல்லது மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது அவசியமாகும்.

Follow Us