AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

கருப்பு முருகானந்தத்திற்கு சிக்கல்.. 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து அதிரடி விசாரணை!

Case Registered Against Karuppu Muruganandam: பாஜக முன்னாள் மாநிலப் பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் மீது திருச்சி ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. திருமணம் செய்துகொள்வதாகக் கூறி ஏமாற்றியது, புகைப்படங்களைத் தவறாகப் பரப்பியது மற்றும் கொலை மிரட்டல் விடுத்தது உள்ளிட்ட தீவிரக் குற்றச்சாட்டுகளின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கருப்பு முருகானந்தத்திற்கு சிக்கல்.. 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து அதிரடி விசாரணை!
கருப்பு முருகானந்தம்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 27 Sep 2026 07:56 AM IST

சென்னை, செப்.27: பாரதிய ஜனதா கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளராகப் பதவி வகித்த கருப்பு முருகானந்தம் மீது, பாஜக முன்னாள் பெண் நிர்வாகி அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். பாலியல் தொந்தரவு, ஏமாற்று வேலை மற்றும் மிரட்டல் போன்ற தீவிரக் குற்றச்சாட்டுகள் எழுந்ததைத் தொடர்ந்து, ஏற்கனவே கட்சியின் மாநிலப் பொறுப்பிலிருந்து அவர் நீக்கப்பட்டிருந்தார். தற்போது இந்த விவகாரம் சட்டப் போராட்டமாக மாறியுள்ள நிலையில், திருச்சி ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் காவல் நிலையப் போலிசார் அவர் மீது தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிக்க: ஜெம் வீரமணி வழக்கில் வேகமெடுக்கும் எஸ்.ஐ.டி. விசாரணை.. 7 உதவி ஆணையர்கள் நியமனம்.. டிஜிபி அடித்த ஆர்டர்!

தொடர் தொந்தரவு அளித்ததாக புகார்:

பாஜகவின் முன்னாள் பெண் நிர்வாகியான பாதிக்கப்பட்ட நபர், கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் ஆவார். ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்ற இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். கருப்பு முருகானந்தத்துடன் ஏற்பட்ட பழக்கம் காரணமாகத் தமிழ்நாட்டிற்கு வந்த அந்தப் பெண், திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியில் வீடு எடுத்துத் தங்கி வந்துள்ளார். தன்னைத் திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்து நெருங்கிப் பழகிய கருப்பு முருகானந்தம், பின்னாள்களில் தவறான செயல்பாடுகளுக்குப் பயன்படுத்த முயன்றதாக அந்தப் பெண் குற்றம்சாட்டியுள்ளார். இதனால் தொடர்பைத் துண்டித்துக் கொள்ள முயன்றபோது, தொடர்ச்சியாகத் தொந்தரவுகள் அளிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்சிப் பொறுப்புகள் பறிப்பு:

பாதிக்கப்பட்ட பெண் இது குறித்து பாஜக தேசிய மற்றும் மாநிலத் தலைமைக்குப் புகார் அளித்ததைத் தொடர்ந்து, கருப்பு முருகானந்தம் கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளர் பொறுப்பிலிருந்து உடனடியாக விடுவிக்கப்பட்டார். அதேபோல, புகார் அளித்த பெண்ணும் கட்சிப் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டார். பொறுப்பிலிருந்து நீக்கப்பட்ட பிறகும் ஆத்திரமடைந்த கருப்பு முருகானந்தம், அந்தப் பெண்ணின் புகைப்படங்களைச் சமூக வலைதளங்களில் தவறாகப் பரப்பியதுடன், அவருக்குத் தொடர்ச்சியாகக் கொலை மிரட்டல்களும் விடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இதையும் படிக்க: முதல்வர் விஜய் குறித்து கூட்டத்தில் வந்த அந்த வார்த்தை.. உதயநிதி அளித்த பதில்.. தாராபுரம் பிரசாரத்தில் இதை கவனித்தீர்களா?

கைது நடவடிக்கை பாயுமா?

இத்தகைய தொடர் தொல்லைகளால் பாதிக்கப்பட்ட அப்பெண், திருச்சி ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் முறைப்படி புகார் அளித்தார். புகாரை ஆய்வு செய்த போலிசார், திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றுவது, அச்சுறுத்தல் விடுப்பது, பெண்ணின் அனுமதியின்றி புகைப்படங்கள் எடுப்பது மற்றும் பரப்புவது உள்ளிட்ட 7 சட்டப் பிரிவுகளின் கீழ் கருப்பு முருகானந்தம் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, அவர் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்ற சூழல் நிலவி வருகிறது.

Follow Us