AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

“தொகுதிக்கு எதுவும் செய்யவில்லை.. போலி கணக்கு காட்டியுள்ளார்!”.. மரகதம் குமரவேல் மீது நயினார் நாகேந்திரன் சரமாரி குற்றச்சாட்டு!

Nainar Nagendran Criticizes TVK Candidate: தமிழக வெற்றிக் கழகத்தின் மதுராந்தகம் தொகுதி வேட்பாளராக களம் இறக்கப்பட்டுள்ள மரகதம் குமரவேல், கடந்த காலங்களில் தனது தொகுதிக்கு எந்த ஒரு நலத்திட்டத்தையும் செய்யவில்லை என பாஜக மூத்த தலைவர் நயினார் நாகேந்திரன் கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும், செய்த பணிகளுக்கு தவறான கணக்கு காட்டியுள்ள அவர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

“தொகுதிக்கு எதுவும் செய்யவில்லை.. போலி கணக்கு காட்டியுள்ளார்!”.. மரகதம் குமரவேல் மீது நயினார் நாகேந்திரன் சரமாரி குற்றச்சாட்டு!
நயினார் நாகேந்திரன்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 26 Sep 2026 07:55 AM IST

சென்னை, செப்.26: தமிழக அரசியல் களம் தேர்தல் ஜூரத்தால் கலைகட்டியுள்ள நிலையில், புதிதாக களமிறங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் பின்னணி குறித்தான விவாதங்கள் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளன. குறிப்பாக, மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதிக்கான தவெக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள முன்னாள் எம்.பி-யான மரகதம் குமரவேலின் கடந்த கால செயல்பாடுகள் குறித்து எதிர்த்தரப்பு தலைவர்கள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். இந்நிலையில், பாஜக மூத்த தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான நயினார் நாகேந்திரன், மரகதம் குமரவேல் தொகுதி மக்களுக்கு எவ்வித நன்மையும் செய்யவில்லை என்றும், செய்யாத பணிகளுக்கு கணக்கு காட்டியுள்ளார் என்றும் குற்றஞ்சாட்டி புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளார்.

இதையும் படிக்க: ஜெம் வீரமணி வழக்கு.. காவல் அதிகாரிகள் மாற்றம்.. சிபிஐ விசாரணை கோரி உயர்நீதிமன்றத்தில் மனு!!

செய்யாத சாலை, வராத குடிநீர்:

செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய நயினார் நாகேந்திரன், மதுராந்தகம் தொகுதியில் மரகதம் குமரவேல் ஆற்றிய பணிகள் குறித்து அடுக்கடுக்கான புகார்களைத் தெரிவித்தார். “மதுராந்தகம் தொகுதியில் புதிய சாலைகள் அமைத்ததாக கணக்கு காட்டப்பட்டுள்ளது; ஆனால் களத்தில் ஆய்வு செய்து பார்த்தால் அங்கு சாலைகளே போடப்படவில்லை” என்று அவர் குற்றம்சாட்டினார். அதேபோல, “மக்களுக்கு குடிநீர் வசதி செய்து கொடுத்துவிட்டதாக ஆவணங்களில் கணக்கு காண்பிக்கப்பட்டுள்ளது, ஆனால் அப்பகுதி மக்களுக்கு இன்றளவும் குடிநீர் வந்து சேரவில்லை” என்றும் சாடினார். மக்கள் பயன்பாட்டிற்கு வராத திட்டங்களுக்கு போலி கணக்கு எழுதி ஏமாற்றியுள்ளதாக அவர் வேதனை தெரிவித்தார்.

கணக்கு வழக்குகளை ஆய்வு செய்ய கோரிக்கை:

தொடர்ந்து பேசிய அவர், கடந்த 5 ஆண்டுகளில் மதுராந்தகம் தொகுதிக்காக ஒதுக்கப்பட்ட நிதி மற்றும் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் பணிகள் குறித்த கணக்கு வழக்குகளை அரசு உரிய முறையில் ஆய்வு செய்ய வேண்டும் என வலியுறுத்தினார். தொகுதி மேம்பாட்டு நிதி எவ்வாறு பயன்படுத்தப்பட்டது, அதில் நடந்துள்ள முறைகேடுகள் என்னென்ன என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டால் உண்மை வெளிவரும் என்று அவர் குறிப்பிட்டார்.

இதையும் படிக்க: ஜெம் வீரமணி வழக்கில் அடுத்தடுத்து சரவெடி.. என்ட்ரி கொடுக்கும் அமலாக்கத்துறை? கலக்கத்தில் காவல்துறை அதிகாரிகள்!

சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்:

ஒட்டுமொத்தமாக தொகுதி மக்களை ஏமாற்றி, ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள மரகதம் குமரவேல் மீது தவெக தலைமையும் தமிழக அரசும் சட்டரீதியான கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் கேட்டுக்கொண்டார். நியாயமான வழியில் பார்த்தால், இதுபோன்ற நிதி முறைகேடுகளில் ஈடுபட்ட நபர்கள் மீது ஏற்கனவே வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும் என்றும், சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதால் அவர் மீது உரிய நடவடிக்கை பாய வேண்டும் என்றும் அவர் தனது பேட்டியில் அழுத்தமாகத் தெரிவித்தார்.

Follow Us