AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

ஜெம் வீரமணி வழக்கு.. காவல் அதிகாரிகள் மாற்றம்.. சிபிஐ விசாரணை கோரி உயர்நீதிமன்றத்தில் மனு!!

GEM Veeramani POCSO Case: தொழிலதிபர் ஜெம் வீரமணி மீதான போக்ஸோ வழக்கு தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், விசாரணையை சிபிஐ-க்கு மாற்றக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மேலும், இந்த வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ள நிலையில் காவல்துறை அதிகாரிகள் காத்திருப்போர் பட்டியலுக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

ஜெம் வீரமணி வழக்கு.. காவல் அதிகாரிகள் மாற்றம்.. சிபிஐ விசாரணை கோரி உயர்நீதிமன்றத்தில் மனு!!
ஜெம் வீரமணி
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 26 Sep 2026 06:37 AM IST

சென்னை, செப்.26: பிரபல தொழிலதிபர் ஜெம் வீரமணி மீது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக போக்ஸோ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கு, தமிழக அளவில் பெரும் பரபரப்பையும் அதிர்வலைகளையும் ஏற்படுத்தி வருகிறது. இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலான நிலையில், அரசியல் ரீதியாகவும் பெரும் விவாதங்களை கிளப்பியது. குறிப்பாக, இந்த விவகாரத்தில் ஆளும் திமுக அரசு மற்றும் தமிழக வெற்றிக் கழகம் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் மாறி மாறி விமர்சனங்களை முன்வைத்து வந்தன. இந்த வழக்கில் தொடக்கத்தில் இருந்து சரியான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், வழக்கு விசாரணை தற்போது தீவிரமடைந்துள்ளது.

இதையும் படிக்க : அரசு மருத்துவமனையில் நோயாளிக்கு தவறான சிகிச்சை – தூய்மை பணியாளர் மீது நடவடிக்கை

காவல்துறை உள்விசாரணை:

இந்த போக்ஸோ வழக்கில் கடந்த 11 மாதங்களாக எவ்வித முறையான நடவடிக்கையும் எடுக்காமல், வழக்கை முடித்து வைக்க முயற்சி நடந்தது ஏன் என்பது குறித்து விசாரணை நடத்த காவலத்துறை ஆணையர் உத்தரவிட்டிருந்தார். இந்த உள்விசாரணையின் தொடர்ச்சியாக, ஆரம்ப கட்டத்தில் வழக்கைக் கையாண்ட அதிகாரிகளில் ஒருவரான கோயம்பேடு சரக உதவி கமிஷனர் யாஸ்மின் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். மேலும், இச்சம்பவம் நிகழ்ந்த காலகட்டத்தில் சென்னை மாநகர காவல் ஆணையராக பணியாற்றிய அருண் ஐபிஎஸ் மற்றும் கூடுதல் காவல் ஆணையராக இருந்த கண்ணன் ஐபிஎஸ் ஆகியோரும் தற்போது காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டு அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சிறப்பு புலனாய்வு குழு அமைப்பு:

வழக்கின் தீவிரத்தன்மையைக் கருத்தில் கொண்டு, ஜெம் வீரமணி மீதான போக்ஸோ வழக்கினை முறையாக விசாரிக்க டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு (SIT) அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு விசாரணைக் குழுவில் கூடுதல் காவல் ஆணையர் தேன்மொழி, இணை காவல் ஆணையர் திஷா மிட்டல், காவல் கண்காணிப்பாளர்கள் முத்தரசி மற்றும் கீதாஞ்சலி ஆகிய பெண் உயர் அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர். பெண் அதிகாரிகளைக் கொண்டு வழக்கு விசாரணையை வெளிப்படையாகவும் துரிதமாகவும் கொண்டு செல்ல காவலத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

இதையும் படிக்க: ஜெம் வீரமணி வழக்கில் அடுத்தடுத்து சரவெடி.. என்ட்ரி கொடுக்கும் அமலாக்கத்துறை? கலக்கத்தில் காவல்துறை அதிகாரிகள்!

சிபிஐ விசாரணை கோரி வழக்கு:

இதனிடையே, சிறுமிகளின் வீடியோக்கள் பொதுவெளியில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதால், இந்த போக்ஸோ வழக்கு விசாரணையை மாநில காவல்துறையிடம் இருந்து மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ-க்கு மாற்ற வேண்டும் என வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மூத்த வழக்கறிஞர் என்.எல். ராஜா இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார். சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ள நிலையிலும், சிபிஐ விசாரணை கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருப்பது இந்த வழக்கில் மேலும் பரபரப்பை கூட்டியுள்ளது.

Follow Us