AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

செப்.30 தான் கடைசி தேதி.. சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. என்ன தெரியுமா?

Chennai Water Tax Payment Deadline | சென்னை மாநகராட்சியில் வசிக்கும் பொதுமக்கள் செப்டம்பர் 30, 2026-க்குள் குடிநீர் மற்றும் கழிவுநீரகற்ற கட்டணம் செலுத்த வேண்டும் என்று சென்னை குடிநீர் வாரியம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது குறித்து குடிநீர் வாரியம் கூறியுள்ளது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

செப்.30 தான் கடைசி தேதி.. சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. என்ன தெரியுமா?
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 28 Sep 2026 08:19 AM IST

சென்னை, செப்டம்பர் 28 : சென்னை குடிநீர் வாரியத்திற்கு (Chennai Water Supply Board) பொதுமக்கள் செலுத்த வேண்டிய 2026 – 2027 ஆன் நிதியாண்டுக்கான முதல் அரையாண்டின் குடிநீர், கழிவுநீரகற்று வரி, கட்டணங்கள் மற்றும் நிலுவையில் உள்ள தொகைகளை செப்டம்பர் 30, 2026-க்குள் செலுத்த வேண்டும் என்று சென்னை குடிநீர் வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த நிலையில், இது குறித்து சென்னை குடிநீர் வாரியம் கூறியுள்ளது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

சென்னை குடிநீர் வாரியம் முக்கிய அறிவிப்பு

சென்னை பொதுமக்களுக்கு, சென்னை குடிநீர் வாரியம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது, 2026 – 2027 ஆன் நிதியாண்டுக்கான முதல் அரையாண்டின் குடிநீர், கழிவுநீரகற்று வரி, கட்டணங்கள் மற்றும் நிலுவையில் உள்ள தொகைகளை செப்டம்பர் 30, 2026-க்குள் செலுத்த வேண்டும் என கூறியுள்ளது. நுகர்வோர் தாங்கள் செலுத்த வேண்டிய கட்டணத்தை டெபிட் கார்டு அல்லது நெட் பேங்கிங் மூலமாக செலுத்தலாம் என கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் கீழ் 1.28 லட்சம் குழந்தைகளுக்கு தங்க மோதிரம்.. நாளை மதுரையில் தொடங்கி வைக்கும் முதல்வர் விஜய்

இந்த முறைகளை பயன்படுத்தியும் கட்டணம் செலுத்தலாம்

அதுமட்டுமன்றி, காசோலை, வரைவோலை, இ சேவை மையங்கள், யுபிஐ, கியூஆர் குறியீடு, பிஓஎஸ் உள்ளிட்ட கட்டண முறைகளை பயன்படுத்தியும் நுகர்வோர் தாங்கள் செலுத்த வேண்டிய குடிநீர், கழிவுநீரகற்று வரி, கட்டணங்கள் மற்றும் நிலுவையில் உள்ள தொகைகளை செலுத்தலாம் என்று சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : மண் திருட்டு புகார்.. அரசுக்கு ரூ. 8.22 கோடி இழப்பு.. முன்னாள் அமைச்சர் எ.வ வேலு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு

லட்சக்கணக்கான மக்களுக்கு சேவைகளை வழங்கி வரும் குடிநீர் வாரியம்

சென்னையில் லட்சக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். மற்ற எந்த நகரங்களை விடவும், சென்னை மாநகராட்சியில் தண்ணீர் தேவை சற்று அதிகமாகவே இருக்கும். மேலும், லட்சக்கணக்கான மக்கள் வசிக்கும் மாநகராட்சியை சுத்தமாக வைத்துக்கொள்வதும் மிகவும் கடினமான ஒன்றாக உள்ளது. இந்த நிலையில் தான், சென்னை குடிநீர் வாரியம் இந்த பணிகளை சிறப்பாக செய்து வருகிறது.

Follow Us