AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் கீழ் 1.28 லட்சம் குழந்தைகளுக்கு தங்க மோதிரம்.. நாளை மதுரையில் தொடங்கி வைக்கும் முதல்வர் விஜய்..

Gold Ring Scheme: அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் பாலின வேறுபாடின்றி ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும். ஒவ்வொரு மோதிரத்திற்கும் தனித்துவமான வரிசை எண் வழங்கப்படுவதுடன், பாதுகாப்பான பேக்கேஜிங்கிலும் வழங்கப்பட உள்ளது. முதற்கட்டமாக 1.28 லட்சம் தங்க மோதிரங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் கீழ் 1.28 லட்சம் குழந்தைகளுக்கு தங்க மோதிரம்.. நாளை மதுரையில் தொடங்கி வைக்கும் முதல்வர் விஜய்..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 27 Sep 2026 17:54 PM IST

செப்டம்பர் 27, 2026: தமிழக வெற்றி கழக அரசு பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் வகையில் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், வரும் ஜூன் 22ஆம் தேதி முதல் செப்டம்பர் 27ஆம் தேதி வரை பிறந்த சுமார் 1.28 லட்சம் குழந்தைகளுக்கு 102 மையங்கள் மூலம் தங்க மோதிரம் வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தத் திட்டத்திற்கான பணிகள் படிப்படியாக மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், மோதிரங்களைத் தயாரித்து வழங்குவதற்கான ஒப்பந்தம் இரண்டு தனியார் நகை நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஜோய் ஆலுக்காஸ் மற்றும் கல்யாண் ஜுவல்லரி ஆகிய நிறுவனங்கள் இதற்கான டெண்டரை பெற்றுள்ளன.

செப்டம்பர் 28ஆம் தேதி மதுரையில் தொடக்கம்

முதலில் இந்தத் திட்டம் உசிலம்பட்டியில் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் அதில் மாற்றம் செய்யப்பட்டு, மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் செப்டம்பர் 28ஆம் தேதி தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் திட்டத்தைத் தொடங்கி வைக்க உள்ளார்.

முன்னதாக செப்டம்பர் 15ஆம் தேதி திட்டம் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், முதலமைச்சர் விஜய் வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டதால் தொடக்க விழா ஒத்திவைக்கப்பட்டது. தற்போது நாளை மதுரையில் திட்டம் தொடங்கப்பட உள்ளது.

மேலும் படிக்க: மண் திருட்டு புகார்.. அரசுக்கு ரூ. 8.22 கோடி இழப்பு.. முன்னாள் அமைச்சர் எ.வ வேலு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு..

யாரெல்லாம் பயன்பெறலாம்?

அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் பாலின வேறுபாடின்றி ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும். ஒவ்வொரு மோதிரத்திற்கும் தனித்துவமான வரிசை எண் வழங்கப்படுவதுடன், பாதுகாப்பான பேக்கேஜிங்கிலும் வழங்கப்பட உள்ளது. முதற்கட்டமாக 1.28 லட்சம் தங்க மோதிரங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் நிரந்தரமாக வசிக்கும் தாய்மார்கள், கர்ப்பப் பதிவு செய்து ஆர்.சி.எச். அடையாள எண்ணைப் பெற்றிருந்தால் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறலாம். பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தமிழக அரசு மருத்துவமனையில் குழந்தை பெற்றாலும் இத்திட்டத்தில் பயன்பெற முடியாது. தனியார் மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கும் இத்திட்டம் பொருந்தாது.

மேலும் படிக்க: ஆர்டிஐ சட்டத்தில் இருந்து விலக்கு அளித்த உத்தரவு ரத்து: விமர்சனங்களுக்கு மத்தியில் தமிழக அரசு நடவடிக்கை

தேவைப்படும் ஆவணங்கள் என்ன?

குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, தொழிலாளர் நலத்துறையால் வழங்கப்படும் அடையாள அட்டை, அஞ்சல் துறையின் முகவரி சான்று, பிறப்புச் சான்றிதழ் மற்றும் இருப்பிடச் சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்கள் தேவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, முதலமைச்சர் விஜய் மதுரைக்கு வருகை தருவதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அவரது வருகையை முன்னிட்டு, மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ட்ரோன் மற்றும் ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Follow Us