AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

ஒரே ஒரு ஓட்டில் தோல்வி அடைந்த வழக்கு.. தவெக எம்.எல்.ஏ.வின் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

Tiruppattur Assembly Election Dispute: திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தவெக வேட்பாளர் சீனிவாச சேதுபதி வெற்றி பெற்றதை எதிர்த்து, முன்னாள் அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் தொடர்ந்த தேர்தல் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. சீனிவாச சேதுபதி தாக்கல் செய்த தள்ளுபடி மனுவைக் தள்ளுபடி செய்த நீதிமன்றம், முதன்மை வழக்கை தொடர்ந்து விசாரணைக்கு ஏற்றுள்ளது.

ஒரே ஒரு ஓட்டில் தோல்வி அடைந்த வழக்கு.. தவெக எம்.எல்.ஏ.வின் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!
பெரியகருப்பன், சீனிவாச சேதுபதி
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 28 Sep 2026 11:17 AM IST

சென்னை, செப்.28: நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் ஒட்டுமொத்த மாநிலத்தையே உலுக்கிய மிக நெருக்கமான தேர்தல் முடிவு பதிவானது. இத்தொகுதியில் போட்டியிட்ட தமிழக வெற்றிக் கழகத்தை சேர்ந்த ஆர்.சீனிவாச சேதுபதி 83,375 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுகவின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான கே.ஆர்.பெரியகருப்பன் 83,374 வாக்குகளைப் பெற்றார். வெறும் ‘ஒரே ஒரு வாக்கு’ வித்தியாசத்தில் வெற்றி கைநழுவியதால், தபால் வாக்குகள் எண்ணப்பட்டதிலும் மற்றும் வாக்குப்பதிவு இயந்திர புள்ளிவிவரங்களிலும் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகக் குற்றம் சாட்டி, சீனிவாச சேதுபதியின் வெற்றியைச் செல்லாது என அறிவிக்கக் கோரி கே.ஆர். பெரியகருப்பன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இதையும் படிக்க: “ஜெயலலிதா கூட இப்படி பண்ணல”.. முதல்வர் விஜய்யை கடுமையாக சாடிய சீமான்!

வழக்கை ரத்து செய்யக் கோரி மனு:

பெரியகருப்பன் தொடர்ந்த தேர்தல் வழக்கில் தகுந்த சட்டப் பூர்வ ஆதாரங்களோ அல்லது சட்டப்பிரிவு 83-ன் கீழ் முறையான விவரங்களோ இல்லை எனக் கூறி, இந்த வழக்கையே ஆரம்பக்கட்டத்திலேயே தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தவெக எம்.எல்.ஏ. சீனிவாச சேதுபதி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இம்மா மனுவை விசாரித்த நீதிபதி ஜி.கே. இளந்திரையன், இரு தரப்பு வழக்கறிஞர்களின் காரசார வாதங்களையும் கேட்டறிந்து தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்தார்.

உயர்நீதிமன்றத்தின் அதிரடித் தீர்ப்பு:

இந்நிலையில், இந்த மனுவை இன்று மீண்டும் விசாரித்த நீதிபதி ஜி.கே. இளந்திரையன், வழக்கைத் தள்ளுபடி செய்யக் கோரி தவெக எம்.எல்.ஏ. சீனிவாச சேதுபதி தாக்கல் செய்த இடைக்கால மனுவை நிராகரித்துத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். தேர்தல் வழக்கில் கே.ஆர். பெரியகருப்பன் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் மற்றும் தபால் வாக்கு எணிக்கை முரண்பாடுகள் தொடர்பான கேள்விகள் விரிவாக விசாரிக்கப்பட வேண்டிய முக்கியக் கருத்துகள் என்பதால், முதன்மை வழக்கை முழுமையாக விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இதையும் படிக்க: “திமுக வென்றால் பதவி விலகுகிறேன்!”.. உதயநிதிக்கு ஓபன் சவால் விட்டு ஆவேசப்பட்ட அமைச்சர் ஆதவ் அர்ஜுனா!!

அரசியல் களத்தில் அதிகரித்துள்ள பரபரப்பு:

நீதிமன்றத்தின் இந்த உத்தரவின் மூலம், கே.ஆர். பெரியகருப்பன் தொடர்ந்த தேர்தல் வழக்கு தொடர்ந்து நடைபெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. வெற்றி-தோல்வியை தீர்மானித்தது ஒரே ஒரு வாக்கு என்பதால், இந்தத் தேர்தல் வழக்கின் இறுதித் தீர்ப்பு திருப்பத்தூர் தொகுதி மக்கள் மத்தியிலும் மற்றும் தமிழ்நாடு அரசியல் வட்டாரத்திலும் பெரும் எதிர்பார்ப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Follow Us