AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

“திமுக வென்றால் பதவி விலகுகிறேன்!”.. உதயநிதிக்கு ஓபன் சவால் விட்டு ஆவேசப்பட்ட அமைச்சர் ஆதவ் அர்ஜுனா!!

Aadhav Arjuna Open Challenge to Udhayanidhi Stalin: மதுராந்தகத்தில் நடைபெற்ற தவெக பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய ஆதவ் அர்ஜுனா, உதயநிதி ஸ்டாலினுக்குப் பகிரங்கச் சவால் விடுத்ததுடன், திமுகவும் அதிமுகவும் ரகசியக் கூட்டணி அமைத்துச் செயல்படுவதாகக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இரு கட்சிகளும் தமிழக வெற்றிக் கழகத்தின் எழுச்சியைக் கண்டு பயந்து இணைந்துள்ளதாக அவர் ஆவேசமாகத் தெரிவித்தார்.

“திமுக வென்றால் பதவி விலகுகிறேன்!”.. உதயநிதிக்கு ஓபன் சவால் விட்டு ஆவேசப்பட்ட அமைச்சர் ஆதவ் அர்ஜுனா!!
அமைச்சர் ஆதவ் அர்ஜுனா
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 28 Sep 2026 07:37 AM IST

செங்கல்பட்டு, செப்.28: தமிழகத்தில் இடைத்தேர்தல் களம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், பிரதான கட்சிகளான திமுக, அதிமுக மற்றும் தமிழக வெற்றிக் கழகம் இடையே வார்த்தைப் போர்கள் தீவிரம் அடைந்துள்ளன. தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டங்களில் தலைவர்கள் ஒருவரையொருவர் மிகக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அந்த வகையில், செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய கட்சியின் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளரும், அமைச்சருமான ஆதவ் அர்ஜுனா, எதிர்கட்சிகளான திமுக மற்றும் அதிமுகவை ஒரே நேர்கோட்டில் வைத்துச் சாடியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க: ‘ஓம் காளி, ஜெய் காளி, த.வெ.க. ஒரு ஓடுகாலி’ – முதல்வர் விஜய்யை அட்டாக் செய்த உதயநிதி ஸ்டாலின்..

உதயநிதிக்கு பகிரங்கச் சவால்:

திமுக அரசின் செயல்பாடுகளையும் உதயநிதி ஸ்டாலினின் அரசியல் விமர்சனங்களையும் மிகக் கடுமையாக சாடினார். அப்போது பேசிய அவர், “மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெற்றால், தமிழக வெற்றிக் கழகத்தில் நான் வகித்து வரும் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் பதவியை உடனடியாக ராஜினாமா செய்கிறேன்” எனத் தில்லாகச் சபதம் விடுத்தார். மேலும், மக்கள் சக்தி தற்போது மாற்றம் நோக்கிச் சுழலத் தொடங்கிவிட்டது என்றும், திமுகவின் பொய் வாக்குறுதிகளை மக்கள் இனி நம்பத் தயாராக இல்லை என்றும் அவர் தெரிவித்தார். அதேபோல், தவெக வெற்றி பெற்றால் உதயநிதி தனது பதவியை ராஜினாமா செய்வாரா என்று சவால் விடுத்தார்.

அந்தப்புர இளவரசர் விமர்சனம்:

தொடர்ந்து பேசிய அவர், திமுகவின் வம்சாவளி அரசியலை மிகக் கடுமையாகச் சாடியதுடன், “அந்தப்புரத்தில் இருந்து வந்த இளவரசருக்கு ஆபாசமாகத் தான் வாயில் வரும்” எனத் தனது பேச்சில் மிகக் காரசாரமான வார்த்தைகளைப் பயன்படுத்தி விமர்சித்த அவர், மக்கள் மன்றத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு அதிகரித்து வரும் ஆதரவைக் கண்டு திமுகவினர் அச்சமடைந்துள்ளதாகக் குறிப்பிட்டார். ஆதவ் அர்ஜுனாவின் இந்த ஓபன் சவாலும் அதிரடி ராஜினாமா பேச்சும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதுடன், அரசியல் விமர்சகர்கள் மத்தியிலும் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

இதையும் படிக்க: 2021 சைக்கிளில் சென்று திமுகவுக்கு வாக்களித்தவர் தான் விஜய்.. அதிமுக பற்றி பேச என்ன தகுதி உள்ளது – எடப்பாடி பழனிசாமி தாக்கு..

திமுக – அதிமுக ரகசியக் கூட்டணி:

தொடர்ந்து பேசிய ஆதவ் அர்ஜுனா, கபடி விளையாட்டில் விதிகளைப் பின்பற்றாமல் கெட்ட வார்த்தைகளைப் பேசுபவர் அவுட் ஆவது போல, அரசியலில் நாகரிகமின்றிப் பேசும் உதயநிதி ஸ்டாலினையும் மக்களே அவுட் செய்வார்கள் என்றார். அதோடு நிறுத்தாமல், திமுகவும் அதிமுகவும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்களாக மாறி ரகசியக் கூட்டணி அமைத்துச் செயல்படுவதாகக் குற்றம்சாட்டினார். எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவும், ஸ்டாலின் தலைமையிலான திமுகவும் தவெகவின் வெற்றியைத் தடுக்க உள்ளடி வேலைகளைச் செய்துவருவதாகவும், எடப்பாடி தொகுதியில் தவெக வேட்பாளரைக் குதிரை பேரம் பேசித் தூக்கியதன் மூலமே அதிமுகவின் பயம் வெளிப்பட்டுவிட்டதாகவும் அவர் தெரிவித்தார். இரட்டை இலைக்கு வாக்களிப்பது உதயசூரியனுக்கு வாக்களிப்பதற்குச் சமம் என்று சாடிய அவர், இரு கட்சிகளும் சேர்ந்தே போட்டியிட்டாலும் வரவிருக்கும் தேர்தலில் டெபாசிட் இழப்பது உறுதி என கூறினார்.

Follow Us