AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

“ஜெயலலிதா கூட இப்படி பண்ணல”.. முதல்வர் விஜய்யை கடுமையாக சாடிய சீமான்!

Seeman Slams CM Vijay: மதுராந்தகம் இடைத்தேர்தல் செலவுகள் மற்றும் அரசுத் துறைகளில் ஒப்பந்த முறை நியமனங்கள் குறித்து முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக விமர்சித்துள்ளார். ஜெயலலிதா கூட செய்யாத பாதுகாப்பு தடுப்புகளை அமைத்து மக்கள் பணத்தை அரசு வீணடிப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.

“ஜெயலலிதா கூட இப்படி பண்ணல”.. முதல்வர் விஜய்யை கடுமையாக சாடிய சீமான்!
சீமான், முதல்வர் விஜய்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 28 Sep 2026 08:09 AM IST

செங்கல்பட்டு, செப்.28: தமிழ்நாடு அரசியல் களத்தில் தற்போதைய தமிழக வெற்றிக் கழக ஆட்சியில் நடைபெறும் நிர்வாக நடவடிக்கைகளையும், இடைத்தேர்தல் செலவினங்களையும் கண்டித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். மதுராந்தகம் தொகுதிக்கான இடைத்தேர்தல் பிரசாரங்கள் சூடுபிடித்துள்ள நிலையில், முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு மக்கள் வரிப்பணத்தை தேவையற்ற ஆடம்பரப் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கும் விளம்பர அரசியலுக்கும் வீணடிப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் ஆட்சிக் காலத்தில் கூட காணப்படாத அளவிற்கு, சாலைகளில் பல கிலோமீட்டர் தூரத்திற்கு இரும்புத் தடுப்புகளை அமைத்து மக்களைப் பார்க்க விடாமல் அரசு நிர்வாகம் முடக்குவதாக சீமான் கொந்தளித்துள்ளார்.

இதையும் படிக்க: “திமுக வென்றால் பதவி விலகுகிறேன்!”.. உதயநிதிக்கு ஓபன் சவால் விட்டு ஆவேசப்பட்ட அமைச்சர் ஆதவ் அர்ஜுனா!!

தனியார்மயமாக்கலும் ஓய்வூதிய முறைகேடும்:

மின்சாரத் துறையில் மீட்டர் ரீடிங் எடுக்கும் பணியைத் தனியாருக்கு ஒப்படைக்கும் அரசின் முடிவைச் சுட்டிக்காட்டிய சீமான், ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்களை நியமிப்பது அரசின் பொறுப்பற்ற தன்மையைக் காட்டுகிறது என்று சாடினார். பேராசிரியர்கள், அரசுப் பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள் மற்றும் மருத்துவர்கள் என அனைத்து முக்கியத் துறைகளிலும் நிரந்தரப் பணியாளர்களை நியமிக்காமல், ஒப்பந்த முறையில் ஆட்களை எடுப்பதே தவெக அரசின் வழக்கமாகிவிட்டது. நிரந்தரப் பணியாளர்களாக நியமித்தால் அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டி வரும் என்பதால், அதற்குப் பயந்துகொண்டே அரசு இந்த குறுக்கு வழியைக் கையாள்கிறது என்று அவர் தெரிவித்தார்.

மதுராந்தகம் இடைத்தேர்தலும் மக்களின் வரிப்பணமும்:

மதுராந்தகம் தொகுதியில் எம்.எல்.ஏ. பதவியிலிருந்து குமரவேல் விலகியதால் தேவையற்ற முறையில் மீண்டும் தேர்தல் தணிக்கப்பட்டு, மக்கள் பணம் பல கோடி ரூபாய் வீணடிக்கப்படுவதாக சீமான் சுட்டிக்காட்டினார். மக்கள் பணத்தை ஒரு பைசா கூட வீணடிக்க மாட்டோம் என்று கூறி ஆட்சிக்கு வந்தவர்கள், தற்போது தேவையற்ற இடைத்தேர்தல் மூலம் மக்களின் உழைப்புச் சுரண்டலை அரங்கேற்றுகிறார்கள். இவ்வாறு வலிந்து திணிக்கப்படும் இடைத்தேர்தல்களில் மக்கள் சரியான பாடம் புகட்ட வேண்டும் என்றும், வெற்றி பெற்று மீண்டும் பதவி விலகும் மக்கள் பிரதிநிதிகளுக்கு வாக்காளர்கள் தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

இதையும் படிக்க: ‘ஓம் காளி, ஜெய் காளி, த.வெ.க. ஒரு ஓடுகாலி’ – முதல்வர் விஜய்யை அட்டாக் செய்த உதயநிதி ஸ்டாலின்..

தமிழர்களின் உரிமைக்கான போராட்டம்:

தமிழ்நாட்டில் தமிழ் படித்தால் மட்டுமே வேலை என்ற நிலையை உருவாக்க வேண்டும் என்ற லட்சியத்தோடு தான் அரசியல் களத்தில் நின்று போராடி வருவதாக சீமான் தெளிவுபடுத்தினார். மக்கள் சந்திக்கும் அடிப்படைச் சிக்கல்களான வீடு இடிப்பு, நிலப் பறிப்பு போன்ற எந்தவொரு துயரத்திற்கும் களத்தில் நின்று குரல் கொடுப்பது நாம் தமிழர் கட்சி மட்டுமே என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், மக்கள் விழிப்புணர்வுடன் சிந்தித்துத் தங்களின் உரிமைகளுக்காக நிற்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

Follow Us