AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் – சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு

Special Buses Announced : மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு சென்னை உள்ளிட்ட இடங்களில் இருந்து 285 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக தமிழக போக்குவரத்துக்கழகம் அறிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்பதால் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொறுட்டு இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்  – சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 15 Sep 2026 12:08 PM IST

மதுரை, செப்டம்பர் 15 : மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு சென்னை உள்ளிட்ட இடங்களில் இருந்து 285 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக தமிழக போக்குவரத்துக்கழகம் அறிவித்துள்ளது. மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் 12 வருடங்களுக்கு பிறகு வருகிற செப்டம்பர் 17, 2026 அன்று சிறப்பாக கொண்டாடப்படவிருக்கிறது. இதனையடுத்து தமிழகம் முழுவதும் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தரவுள்ளனர். இதனையடுத்து தமிழகம் முழுவதும் இருந்தும் 285 சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கை முன்னிடசிறப்பு பேருந்துகள் அறிவிப்பு

மதுரையில் உள்ள உலகப் புகழ்பெற்ற மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, சென்னை, கோவை உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மதுரைக்கு மொத்தம் 285 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து போக்குவரத்துத்து கழகம் வெளியிட்ட அறிவிப்பில், ‘அருள்மிகு மீனாட்சி அம்மன் திருக்கோவில் கும்பாபிஷேகம் செப்டம்பர் 17, 2026 அன்று காலை 7.40 மணி முதல் 8.10 மணி வரை நடைபெற உள்ளது.

இதையும் படிக்க : திருச்சிராப்பள்ளி – யாழ்ப்பாணம் இடையே மீண்டும் விமான சேவை – பயணிகள் மகிழ்ச்சி

இதனை முன்னிட்டு, பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பாதுகாப்பாக பயணிக்கும் நோக்கில் போக்குவரத்து வசதியை ஏற்படுத்தும் வகையில் போக்குவரத்துத் துறையின் சார்பில் விரிவான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கும்பாபிஷேகத்திற்கு முந்தைய நாளான செப்டம்பர் 17, 2026 அன்று கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் முதல் மதுரை வரை 50 சிறப்புப் பேருந்துகளை இயக்குவதற்கு தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் பயணத் தேவைக்கேற்ப இந்த சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.

இதன் ஒரு பகுதியாக, பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் போக்குவரத்து வசதிக்காக பல்வேறு இடங்களில் இருந்து மதுரைக்கு கீழ்க்கண்ட எண்ணிக்கையில் பேருந்துகள் பொதுமக்களின் பயணத் தேவைக்கேற்ப இயக்கப்படும். கோயம்புத்தூரில் இருந்து 30 பேருந்துகள், திருப்பூரில் இருந்து 30 பேருந்துகள், ராமநாதபுரத்தில் இருந்து 30 பேருந்துகள், அருப்புக்கோட்டையில் இருந்து 25 பேருந்துகள், சிவகாசியில் இருந்து 30 பேருந்துகள், ராஜபாளையத்தில் இருந்து 30 பேருந்துகள், விருதுநகரில் இருந்து 10 பேருந்துகள், தேனியில் இருந்து 30 பேருந்துகள், திண்டுக்கல்லில் இருந்து 20 பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. மேலும், மதுரை மாநகரப் பகுதியில் திருமங்கலம், மேலூர், திருப்புவனம், வாடிப்பட்டி, நத்தம், பூவந்தி, உசிலம்பட்டி ஆகிய இடங்களில் இருந்து தலா 20 பேருந்துகள் இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : விநாயகர் சிலை வைப்பதில் தகராறு.. விவசாயி கொடூர கொலை.. ஷாக் சம்பவம்!

முன்னதாக மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால்  கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொறுட்டு சென்னையில் இருந்து தெற்கு ரயில்வே சார்பில் மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டிருந்தன.

 

Follow Us