ஜன நாயகன் படத்திலிருந்து இன்று மாலை வெளியாகிறது ராவண மவன்டா பாடல்
Jana Nayagan Raavana Mavandaa Song: நடிகர் தளபதி விஜய் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ஜன நாயகன். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் படத்தில் இருந்து இன்று மாலை நான்காவது பாடல் வெளியாக உள்ளது.
நடிகர் தளபதி விஜய் நடிப்பில் தற்போது ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து காத்திருக்கும் படம் ஜன நாயகன். இந்தப் படம் நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகும் இறுதிப் படம் என்பதால படத்தின் மீது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துக் காணப்படுகின்றது. இந்தப் படத்தை இயக்குநர் எச்.வினோத் எழுதி இயக்கி உள்ளார். இவரது இயக்கத்தில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் துணிவு. நடிகர் அஜித் குமார் நாயகனாக நடித்து இருந்த இந்தப் படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள ஜன நாயகன் படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த நிலையில் இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
இந்த நிலையில் படம் வருகின்ற 09-ம் தேதி ஜனவரி மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படம் பொங்கல் பண்டியை முன்னிட்டு வெளியாவதால் படத்தின் வசூல் அதிகரித்து இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தப் படத்தில் நடிகர் விஜய் உடன் இணைந்து பல முன்னணி நடிகர்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.




இன்று மாலை வெளியாகிறது ராவண மவன்டா பாடல்:
இந்த நிலையில் இந்த ஜன நாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த டிசம்பர் மாதம் 27-ம் தேதி 2025-ம் ஆண்டு மலேசியாவில் மிக பிரமாண்டமாக நடைப்பெற்றது. மேலும் படத்தின் ட்ரெய்லர் வருகின்ற 3-ம் தேதி ஜனவரி மாதம் 2026-ம் ஆண்டு வெளியாக உள்ளது.
தொடர்ந்து ஜன நாயகன் படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன் இசையமைத்துள்ள நிலையில் படத்தில் இருந்து முன்னதாக மூன்று பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று இருந்தது. இந்த நிலையில் இன்று மாலை 7.50 மணிக்கு நான்காவது பாடலான ராவண மவன்டா பாடல் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஜன நாயகன் படக்க்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
24 hours before the trailer oru vibe check paniralama? 😉#RaavanaMavandaa is on the way 🧨
Blasting from today 7.50 PM 💥#JanaNayaganTrailer #JanNetaTrailer #JanaNayakuduTrailer#JanaNayagan#JanaNayaganPongal#JanaNayaganFromJan9#Thalapathy @actorvijay @KvnProductions… pic.twitter.com/EGu0kGP7Si
— KVN Productions (@KvnProductions) January 2, 2026
Also Read… Mari Selvaraj: அந்த படம் பார்த்தபோது என்னை உறையவைத்தது- மனம் திறந்த மாரி செல்வராஜ்!