Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Kavin Raj : ‘கிஸ்’ படத்தின் ஸ்டோரி அந்த மாதிரிதான் இருக்கும் .. ஓபனாக பேசிய கவின்

Kavin Raj About Kiss Movie : சின்னதிரையின் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமானவர் கவின் ராஜ். அவரின் முன்னணி நடிப்பில் ரிலீசிற்கு தயாராகிவரும் படம் கிஸ். இந்த படத்தைப் பிரபல நடனக் கலைஞர் சதிஷ் கிருஷ்ணன் இயக்கியுள்ளார். இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகள் நடந்துவரும் நிலையில், சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட கவின் இப்படத்தின் கதைக்களம் பற்றிக் கூறியுள்ளார்.

Kavin Raj : ‘கிஸ்’ படத்தின் ஸ்டோரி அந்த மாதிரிதான் இருக்கும் .. ஓபனாக பேசிய கவின்
நடிகர் கவின்Image Source: X
barath-murugan
Barath Murugan | Published: 05 May 2025 17:15 PM

கோலிவுட் சினிமாவில் பல புதுமுக நடிகர்களும் அவ்வப்போது அறிமுகமாகி வருகிறார்கள்.  மற்ற மொழிகளை விட ஒப்பிடும்போது தமிழில் பல அறிமுக நடிகர்கள் படங்களில் நடித்துப் பிரபலமாகி வருகிறார்கள். அந்த வகையில் சின்னதிரையின் (TV show) மூலம் பிரபலமான நடிகர்கள் பலரும் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருந்து வருகின்றனர். எடுத்துக்காட்டாக நடிகர் சிவகார்த்திகேயனைக் (Sivakarthikeyan ) கூறலாம். அவரை தொடர்ந்து தமிழில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் கவின் (Kavin) . இவர் தமிழில் சில படங்களில் மட்டும் நடித்திருந்தாலும், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறார். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான படம் பிளடி பெக்கர். இந்த படத்தைப் பிரபல இயக்குநர் நெல்சன் திலீப்குமார் தயாரித்திருந்தார். இந்தப் படமானது எதிர்பார்த்த வரவேற்பைப் பெறாமல் தோல்வியடைந்தது. இதைத் தொடர்ந்து அவர் நடித்துள்ள படம் கிஸ் (Kiss).

இந்த படத்தை நடன கலைஞர் சதீஷ் கிருஷ்ணன் (Sathish Krishnan) இயக்கியுள்ளார். இந்த படமானது வெளியீட்டிற்கு தயாராகிவரும் நிலையில், சமீபத்தில் நடிகர் கவின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியில் இந்த கிஸ் படத்தின் கதைக்களம் பற்றி அவர் கூறியிருக்கிறார். அந்த நிகழ்ச்சியில் பேசிய கவின், இந்த கிஸ் படமானது ரொமாண்டிக் மற்றும் காமெடி கதைக்களத்துடன் இருக்கும். நிச்சயம் அனைவருக்கும் பிடிக்கும் என்று பேசியுள்ளார். மேலும் அவர் பேசியது குறித்து விரிவாகப் பார்க்கலாம்.

கிஸ் படத்தின் கதைக்களம் பற்றி கவின் கூறியது ?

அந்த நிகழ்ச்சியில் பேசிய கவின் ” இந்த கிஸ் படமானது ஒரு ரொமாண்டிக் மற்றும் காமெடி திரைப்படமாக இருக்கும். மேலும் இந்த படத்தில் ஃபேண்டஸி கதைக்களமும் இணைந்துள்ளது என்று கூறலாம். அதன் காரணமாகத்தான் இந்த படத்தில் நான் நடிப்பதற்கு ஒத்துக்கொண்டேன். எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அந்த ஃபேண்டஸி ஸ்டோரி எனக்கு மிகவும் புதியதாக இருந்தது. மேலும் ரசிகர்களுக்கும் அந்த கதைக்களம் பிடிக்கும் என்று நினைக்கிறேன். மேலும் இந்த படத்தின் டைட்டிலும் படத்திற்கு ஏற்றது போல சரியாக அமைந்திருந்தது. இந்த படத்தின் டைட்டில் உரிமையை எங்களுக்குக் கொடுத்ததே இயக்குநர் மிஷ்கின் சார்தான். அவருக்கு இந்த இடத்தில் நான் நன்றி சொல்லவேண்டும். அவரிடம் சென்று பேசி இந்த கிஸ் என்ற டைட்டிலை பெற்றோம் என்று நடிகர் கவின் கூறியுள்ளார்.

நடிகர் கவின் ராஜா வெளியிட்ட எக்ஸ் பதிவு :

நடிகர் கவினுக்கு இந்த படத்தில் ஜோடியாக நடிகை ப்ரீத்தி அஸ்ரானி நடித்துள்ளார். இவர் ஏற்கனவே தமிழில் அயோத்தி படத்தில் முக்கிய ரோலில் நடித்திருந்தார். இந்த படத்தைத் தொடர்ந்து கவினுக்கு ஜோடியாக நடித்து தமிழில் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த கிஸ் படத்திற்கு இசையமைப்பாளர் ஜென் மார்டின் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் எல்லாம் நிறைவடைந்த நிலையில், இந்த 2025ம் ஆண்டு மே மாதத்தின் இறுதியில் இந்த படமானது ரிலீசாகும் என்னு எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் ரிலீஸ் தேதி குறித்துப் படக்குழு அறிவிப்பை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பஹல்காம் தாக்குதல் சம்பவம் - மாநில அரசுகளுக்கு அதிரடி உத்தரவு
பஹல்காம் தாக்குதல் சம்பவம் - மாநில அரசுகளுக்கு அதிரடி உத்தரவு...
பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பம் எப்போது தொடங்கும்?
பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பம் எப்போது தொடங்கும்?...
சிம்புவின் STR 49 படத்தில் சந்தானம் காமெடியனா? இயக்குநர் விளக்கம்
சிம்புவின் STR 49 படத்தில் சந்தானம் காமெடியனா? இயக்குநர் விளக்கம்...
தவெக தொண்டரின் தலையில் துப்பாக்கி வைத்த பாதுகாவலர், நடந்தது என்ன?
தவெக தொண்டரின் தலையில் துப்பாக்கி வைத்த பாதுகாவலர், நடந்தது என்ன?...
அமேசானில் அதிரடி தள்ளுபடி விலையில் சிங்கிள் டோர் ஃபிரிட்ஜ்!
அமேசானில் அதிரடி தள்ளுபடி விலையில் சிங்கிள் டோர் ஃபிரிட்ஜ்!...
போட்ல செல்ல ஆசையா? அப்போ கன்னியாகுமரிக்கு போங்க..!
போட்ல செல்ல ஆசையா? அப்போ கன்னியாகுமரிக்கு போங்க..!...
அடுத்தடுத்து வந்த இ-மெயில்! முகமது ஷமிக்கு வந்த கொலை மிரட்டல்..!
அடுத்தடுத்து வந்த இ-மெயில்! முகமது ஷமிக்கு வந்த கொலை மிரட்டல்..!...
கொடைக்கானலில் விஜய்யின் 'ஜன நாயகன்' ஷூட்டிங் ஓவர்!
கொடைக்கானலில் விஜய்யின் 'ஜன நாயகன்' ஷூட்டிங் ஓவர்!...
திண்டுக்கல்-நாகர்கோவில் கோடை சிறப்பு ரயில்: அட்டவணை விவரம் இதோ!
திண்டுக்கல்-நாகர்கோவில் கோடை சிறப்பு ரயில்: அட்டவணை விவரம் இதோ!...
பாகிஸ்தானியர்களால் ஹேக் செய்யப்பட்ட இந்திய பாதுகாப்பு தளங்கள்
பாகிஸ்தானியர்களால் ஹேக் செய்யப்பட்ட இந்திய பாதுகாப்பு தளங்கள்...
ராகு - கேது பெயர்ச்சி எப்போது? - கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்!
ராகு - கேது பெயர்ச்சி எப்போது? - கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்!...