AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

டிசம்பர் 31 தான் கடைசி.. அதற்குள் பான் கார்டில் இதை செய்யவில்லை என்றால் சிக்கல்!

Link PAN and Aadhaar Card Before December 31 | இந்தியாவில் மிக முக்கிய ஆவணங்களில் ஒன்றாக உள்ளது தான் பான் கார்டு. இந்த நிலையில், டிசம்பர் 31, 2025-க்குள் பான் மற்றும் ஆதார் கார்டை இணைக்கவில்லை என்றால் பான் கார்டு முடக்கம் செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது.

டிசம்பர் 31 தான் கடைசி.. அதற்குள் பான் கார்டில் இதை செய்யவில்லை என்றால் சிக்கல்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 21 Dec 2025 15:38 PM IST

இந்தியாவில் உள்ள பொதுமக்கள் வங்கி கணக்கு வைத்து அதன் மூலம் பண பரிவர்த்தனை செய்ய வேண்டும் என்றால் அவர்களுக்கு பான் கார்டு (PAN Card) கட்டாயமாக உள்ளது. வருமான வரி தாக்கல் செய்ய, வங்கி கணக்கு தொடங்க என பல சேவைகளுக்கு பான் கார்டு கட்டாய மற்றும் அடிப்படை தேவையாக உள்ளது. பான் கார்டு இத்தகைய முக்கிய ஆவணங்களின் ஒன்றாக உள்ள நிலையில், 2025 டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் இதனை செய்து முடிக்கவில்லை என்றால் பான் கார்டு முடக்கம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், உங்கள் பான் கார்டு முடக்கம் செய்யப்படாமல் இருக்க இதனை கட்டாயம் செய்யுங்கள்.

ஆதார் கார்டு – பான் கார்டு இணைப்பு கட்டாயம்

இந்தியாவில் பான் கார்டை போலவே மிக முக்கிய ஆவணங்களில் ஒன்றாக உள்ளது தான் ஆதார் கார்டு (Aadhaar Card). ஆதார் கார்டு இல்லை என்றால் பல விஷயங்களை செய்ய முடியாத சூழல் உள்ளது. எனவே பான், வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட முக்கிய ஆவணங்களுடன் ஆதார் கார்டை இணைக்கும் பணிகளை அரசு கையில் எடுத்துள்ளது. அந்த வகையில், பான் கார்டுடன் ஆதார் கார்டை இணைக்க தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. இதற்கான காலக்கெடு பலமுறை நீட்டிக்கப்பட்ட நிலையில், தற்போது டிசம்பர் 31, 2025 கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : இரண்டு முக்கிய மாற்றங்களை கொண்டுவந்த EPFO.. இனி ஊழியர்களுக்கு இவற்றில் சிக்கல் இல்லை!

ஆதார் – பான் இணைக்கவில்லை என்றால் என்ன ஆகும்

காலக்கெடுக்குள் பான் மற்றும் ஆதார் கார்டை இணைக்கவில்லை என்றால் பான் கார்டு முடக்கம் செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது. அவ்வாறு பான் கார்டு முடக்கப்படும் பட்சத்தில் பண பரிவர்த்தனை உள்ளிட்ட அடிப்படை தேவைகளை கூட பூர்த்தி செய்துக்கொள்ள முடியாமல் போய்விடும். எனவே டிசம்பர் 31, 2025-க்குள் பான் மற்றும் ஆதார் கார்டை இணைப்பது மிகவும் பாதுகாப்பானது.

இதையும் படிங்க : PPF : ரூ.3,000 இருந்தால் போதும்.. இந்த திட்டத்தில் முதலீடு செய்து லட்ச கணக்கில் லாபம் பெறலாம்!

ஆதார் – பான் இணைப்பது எப்படி?

  1. முதலில் வருமான வரித்துறையின் www.incometax.gov.in என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
  2. அங்கு கொடுக்கப்பட்டுள்ள லிங்க் ஆதார் (Link Aadhaar) என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
  3. அதில் உங்களது பான் மற்றும் ஆதார் எண்ணை உள்ளிட வேண்டும்.
  4. அவ்வாறு நீங்கள் உங்கள் விவரங்களை பதிவிடும்போது ஏற்கனவே பான் – ஆதார் இணைக்கப்பட்டு இருந்தால் அது உங்களுக்கு காட்டும்.
  5. ஒருவேளை ஆதார் – பான் இணைக்கப்படவில்லை என்றால் உங்கள் மொபைல் எண்ணை கேட்கும்.
  6. பின்னர் பதிவிட்ட மொபைல் எண்ணுக்கு ஓடிபி அனுப்பப்படும்.
  7. அந்த ஓடிபியை உள்ளிடும் பட்சத்தில் பான் மற்றும் ஆதார் இணைக்கப்படும்.