Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

PPF : ரூ.3,000 இருந்தால் போதும்.. இந்த திட்டத்தில் முதலீடு செய்து லட்ச கணக்கில் லாபம் பெறலாம்!

Public Provident Fund Scheme Investment Plan | அரசு அஞ்சலகங்கள் மூலம் செயல்படுத்தும் திட்டம் தான் பொது வருங்கால வைப்பு நிதி. இந்த நிலையில், இந்த திட்டத்தில் மாதம் ரூ.3,000 முதலீடு செய்வதன் மூலம் லட்சக்கணக்கில் லாபம் பெற முடியும்.

PPF : ரூ.3,000 இருந்தால் போதும்.. இந்த திட்டத்தில் முதலீடு செய்து லட்ச கணக்கில் லாபம் பெறலாம்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 19 Dec 2025 22:20 PM IST

பொதுமக்கள் தங்களது பொருளாதாரத்தை மேம்படுத்திக்கொள்ளும் விதமாக அஞ்சலகங்கள் மூலம் அரசு பல வகையான சேமிப்பு (Saving) மற்றும் முதலீட்டு (Investment) திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அத்தகைய திட்டங்களில் ஒன்றுதான் பொது வருங்கால வைப்பு நிதி திட்டம் (PPF – Public Provident Fund Scheme). சேமிப்பு அல்லது முதலீடு செய்வதற்கு இது ஒரு மிகச்சிறந்த திட்டமாக உள்ளது. இந்த திட்டத்திற்கு வரி விலக்கு, உத்தரவாதம் என பல சிறப்பு அம்சங்கள் உள்ளன. எனவே இதில் முதலீடு செய்வதன் மூலம் பாதுகாப்பான மற்றும் சிறந்த லாபத்தை பெற முடியும். இந்த நிலையில் கையில் ரூ.3,000 இருக்கும் பட்சத்தில் அதனை வைத்து முதலீடு செய்யும் பட்சத்தில் எவ்வளவு லாபம் பெற முடியும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

அஞ்சலங்கள் மூலம் செயல்படுத்தப்படும் பொது வருங்கால வைப்பு நிதி திட்டம்

பங்குச்சந்தையில் எவ்வாறு நீண்ட காலம் முதலீடு செய்வது சிறந்ததாக உள்ளதோ அதே போல இந்த ஊழியர் பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்திலும் நீண்ட காலம் முதலீடு செய்வது சிறந்த பலன்களை வழங்கும். அதாவது, இந்த பிபிஎஃப் திட்டம் 15 ஆண்டுகள் லாக் இன் காலத்தை கொண்டுள்ளது. இந்த திட்டத்திற்கு ஆண்டுக்கு 7.1 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. இதில் முதலீடு செய்யும் பட்சத்தில் நல்ல லாபத்தை பெற முடியும்.

இதையும் படிங்க : Year Ender 2025 – இனி ஆதார் கார்டு தேவையில்லை – புதிய ஆதார் ஆப்பில் என்ன ஸ்பெஷல்?

ரூ.3,000 கையில் இருந்தால் போதும் முதலீடு செய்யலாம்

இந்த பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் ரூ.3,000 முதல் ரூ.5,000 முதலீடு செய்யும் பட்சத்தில் உங்களால் ரூ.10 லட்சம் முதல் ரூ.16 லட்சம் வரை சேமிக்க முடியும். அதாவது, இந்த திட்டத்தில் நீங்கள் மாதம் ரூ.3,000 முதலீடு செய்தால் 15 ஆண்டுகளில் உங்களால் ரூ.5.40 லட்சம் சேமிக்க முடியும். இந்த திட்டத்திற்கான வட்டியுடன் சேர்த்தால், திட்டத்தின் முடிவில் மொத்தமாக ரூ.9,76,370 கிடைக்கும்.

இதையும் படிங்க : Year Ender 2025: ஒரே ஆண்டில் 4 முறை குறைக்கப்பட்ட ரெப்போ விகிதம் – கடன்தாரர்களுக்கு கிடைத்த வாய்ப்பு

இதுவே நீங்கள் மாதம் ரூ.5,000 முதலீடு செய்கிறீர்கள் என்றால் 15 ஆண்டுகளில் மொத்த சேமிப்பு ரூ.9 லட்சமாக இருக்கும். இந்த நிலையில், திட்டத்தின் முடிவில் வட்டியுடன் சேர்ந்த்து திட்டத்தின் முடிவில் ரூ.16,27,284 கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.