Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

600 மில்லியன் டாலர்கள் சொத்து மதிப்பு கொண்ட உலகின் முதல் தனிநபர்.. புதிய உச்சம் தொட்டு அசத்திய எலான் மஸ்க்!

First Individual to Cross 600 Billion America Dollar Net Worth | எலான் மஸ்க் ஏற்கனவே உலக பணக்காரர் என்ற பட்டத்தை கொண்டுள்ளார். இந்த நிலையில், தற்போது உலகின் முதன் முதலில் ரூ.600 மில்லியன் டாலர்கள் சொத்து மதிப்பை தாண்டிய முதல் தனிநபர் என்ற சாதனை படைத்துள்ளார்.

600 மில்லியன் டாலர்கள் சொத்து மதிப்பு கொண்ட உலகின் முதல் தனிநபர்.. புதிய உச்சம் தொட்டு அசத்திய எலான் மஸ்க்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 18 Dec 2025 11:13 AM IST

வாஷிங்டன், டிசம்பர் 18 : உலகின் மிகப்பெரிய பணக்காரரும், பிரபல தொழிலதிபருமானவர் தான் எலான் மஸ்க் (Elon Musk). இவர் ஸ்பேஸ் எக்ஸ் (Space X), ஸ்டார் லிங்க் (Star Link), டெஸ்லா (Tesla), எக்ஸ் (X) உள்ளிட்ட உலகின் சில முக்கிய நிறுவனங்களின் உரிமையாளர் ஆவார். எலான் மஸ்க் தனது நிறுவனங்கள் மூலம் பல்வேறு புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில்நுட்ப சாதனைகளை மேற்கொண்டு வருகிறார். இதன் காரணமாக உலகின் முதல் பணக்காரர் என்ற பெருமையை அவர் தொடர்ந்து தக்கவைத்து வருகிறார். ஏற்கனவே உலகின் மிகப்பெரிய பணக்காரர் என்ற பட்டத்தை எலான் மஸ்க் பெற்றுள்ள நிலையில், தற்போது அவர் மேலும் ஒரு புகழுக்கு சொந்தக்காரராக மாறியுள்ளார்.

600 பில்லியன் டாலர்கள் சொத்து மதிப்பை தாண்டிய முதல் தனிநபர்

எலான் மஸ்க் ஏற்கனவே உலகின் நம்பர் ஒன் பணக்காரராக உள்ள நிலையில், தற்போது உலகில் 600 பில்லியன் அமெரிக்க டாலர்கள் சொத்து மதிப்பை தாண்டிய முதல் தனிநபர் என்ற பெறுமையை பெற்றுள்ளார். நேற்று (டிசம்பர் 17, 2025) எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சுமார் 638 மில்லியனாக இருந்தது. அதாவது, இந்திய மதிப்பில் ரூ.58 லட்சம் கோடி ஆகும். வரலாற்றில் இதுவரை எந்த ஒரு தனிநபரும் இத்தகைய இலக்கை அடைந்தது இல்லை என்பதால் மஸ்க் இந்த பட்டத்தை பெற்றுள்ளார்.

இதையும் படிங்க : Year Ender 2025 – இனி ஆதார் கார்டு தேவையில்லை – புதிய ஆதார் ஆப்பில் என்ன ஸ்பெஷல்?

மாபெரும் ஆளுமையாக திகழ்ந்து வரும் எலான் மஸ்க்

உலக பணக்காரரான எலான் மஸ்க், அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்பை வெற்றி பெற வைப்பதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். வீதிகளில் இறங்கி பிரசாரம் செய்தது முதல் தேர்தலுக்கு நிதி வழங்கியது வரை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார். அதன்படி டிரம்ப் வெற்றி பெற்று அமெரிக்க அதிபராக பதவி ஏற்ற நிலையில், அமெரிக்க அரசின் டாட்ஜ் என்ற திறன் மதிப்பீட்டுத்துறையின் தலைவராகவும் செயல்பட்டு வந்தார்.

இதையும் படிங்க : Year Ender 2025: ஒரே ஆண்டில் 4 முறை குறைக்கப்பட்ட ரெப்போ விகிதம் – கடன்தாரர்களுக்கு கிடைத்த வாய்ப்பு

இவ்வாறு டிரம்ப் மற்றும் மஸ்க் இடையேயான உறவு மிக சீராக சென்றுக்கொண்டு இருந்த நிலையில், அவர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர்களது நட்பில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் அமெரிக்க அதிபரின் உதவி இல்லாமலும் எலான் மஸ்க் தனது சொத்து மதிப்பை மேலும் மேலும் உயர்த்தி வருகிறார். ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் அமெரிக்க பங்குச்சந்தையில் அதிக மதிப்புடன் பட்டியலிடப்பட்டு உள்ளதால் அவருடைய சொத்து மதிப்பு பல மடங்கு உயர்ந்து அவர் 600 பில்லியன் அமெரிக்க டாலர்கள் சொத்து மதிப்பை தாண்டிய முதல் தனிநபர் என்ற பெறுமையை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.