ஆதார் கார்டு நகல்கள் ரத்து செய்யப்படும்.. விரைவில் அறிமுகமாகும் புதிய விதிகள்!
Aadhar Card Copy Ban | விடுதிகள், மருத்துவமனைகள், பள்ளி மற்றும் கல்லூரிகள் என பெரும்பாலான இடங்களில் ஆதார் சரிப்பார்ப்பு கட்டாயமாக உள்ளது. இதன் காரணமாக ஆதாரை நகல் எடுத்து பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், இந்த முறை முற்றிலுமாக நீக்கம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய குடிமக்களுக்கான மிக முக்கிய ஆவணமாக உள்ளது தான் ஆதார் கார்டு (Aadhaar Card). ஆதார் கார்டு இல்லையென்றால் பல வேலைகளை செய்ய முடியாத சூழல் தான் உள்ளது. ஆதார் கார்டு பல இடங்களில் முக்கிய ஆவணமாக கேட்கப்படும் நிலையில், பொதுமக்கள் அதனை நகல் எடுத்து பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், ஆதார் நகல்கள் முற்றிலுமாக ரத்து செய்யப்பட உள்ளதாகவும், ஆதார் தொடர்பாக மிக கடுமையான விதிகள் அமலுக்கு வர உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், ஆதார் தொடர்பாக வெளியாகியுள்ள இந்த முக்கிய தகவல் குறித்து விரிவாக பார்க்கலாம்.
விரைவில் ஆதார் கார்டு நகல்கள் ரத்து செய்யப்படும்
இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIADI – Unique Identification Authority Of India) வழங்கும் 12 இலக்க எண் கொண்ட ஆவணம் தான் ஆதார் கார்டு. இந்த ஆதார் கார்டில் ஒரு நபரின் பெயர், வயது, முகவரி, மொபைல் எண், கை ரேகை மற்றும் கண் ரேகை என பல முக்கிய தகவல்கள் இடம்பெற்றிருக்கும். இதன் காரணமாக இது மிகவும் முக்கியமான ஆவணமாக கருதப்படுகிறது. ஆதார் கார்டில் தனிப்பட்ட மற்றும் சில முக்கிய தகவல்கள் இடம்பெற்றுள்ள நிலையில், அவற்றை நகல் எடுத்து பயன்படுத்துவதன் மூலம் மோசடிகள் மற்றும் குற்றங்கள் அதிகரிக்கிறது. இந்த நிலையில் தான், அதனை தடுக்க அரசு முக்கிய முயற்சியை கையில் எடுத்துள்ளது.
இதையும் படிங்க : ரெப்போ வட்டி விகிதம் குறைப்பு.. வீடு, கார், பைக் லோனுக்கு EMI குறைகிறது.




ஆதார் கார்டு நகலை பயன்படுத்துவது சட்டத்திற்கு புறம்பானது
ஆதார் கார்டு நகல் பயன்படுத்தப்படுவதன் மூலம் பல்வேறு குற்ற சம்பவங்கள் நடைபெறுகின்றன. அதனை தடுக்க ஆதார் கார்டு நகலை பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும். ஆதார் கார்டு நகலை பயன்படுத்துவது ஆதார் சட்டத்தின் விதிகளுக்கு புறம்பானதாக கருதப்படுகிறது. இந்த நிலையில், இது குறித்து கூறியுள்ள இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் தலைமை செயல் அதிகாரி புவனேஷ் குமார், விடுதிகள் உள்ளிட்ட ஆதார் சரிப்பார்ப்பை பயன்படுத்தும் அமைப்புகள் மற்றும் நிறுவனங்கள் புதிய வெரிஃபிகேஷன் தொழில்நுட்பத்திற்கு (New Verification Technology) மாற வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க : வாடகை வீட்டில் இருப்பவர்களுக்கு வந்த பெரிய நிம்மதி.. புதிய வாடகை விதிகளை அறிமுகம் செய்த மத்திய அரசு!
இந்த புதிய அமைப்பு ஆதார் மொபைல் செயலியில் இருந்து QR (QR – Quick Response) கோடு ஸ்கேன் செய்வதன் மூலம் வெரிஃபிகேஷன் செய்ய முடியும். இந்த புதிய விதி விரைவில் அமலுக்கு வர உள்ளது. இது தற்போது நடைமுறையில் உள்ள ஆதார் நகல் சரிப்பார்ப்பு முறையை முற்றிலுமாக அகற்றிவிடும் என்று அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.